Daily Archives: ஒக்ரோபர் 9th, 2012

2.70 லட்சம் விலையில் ஸ்மார்ட்போன்

கோல்டு அண்ட் கோ நிறுவனம் தங்க கலவைகளின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. சாதாரண ஐபோன்-5க்கும், தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் தங்கம் மட்டும் தான். எப்படியாவது ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பிளின் ஐபோன்-5வை வாங்கலாம். ஐபோன்-5 ஸ்மார்ட்போனிலேயே ஆடம்பரத்தினை விரும்புபவர்கள் இந்த கோல்டு அண்ட் கோ நிறுவனத்தின் தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் மேல் கவனத்தை திருப்பலாம். இந்த தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலவை 24 கேரட் சுத்த தங்கம் என்று கூறப்படுகிறது.
இந்த கோல்டு ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் முதலில் ரெட்பாண்டுபை வலைத்தளத்தின் மூலம் வெளி வந்தது. இந்த தகவலின்படி ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட 2 லட்சத்தி 50 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும். ரோஸ் கோல்டு ஸ்மார்ட்போனின் விலை 2 லட்சத்தி 70 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டிகிறது

வீடு தேடி வரும் நண்பன்: இன்று உலக தபால் தினம்

உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய தலைமுறையினருக்கு தபால் துறையின் மகத்துவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்., 9ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
அன்று என்ன நடந்ததுநாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இதனால் தற்போது தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன் உலகில் அல்லது உள்நாட்டில் எதாவது ஒரு இடத்தில் இருப்பவர், தங்களது குடும்பத்தினை தொடர்பு கொள்ள தபால் துறையை சார்ந்திருந்தனர்.
பழங்ககாலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. தபால் துறை உருவாக்கப்பட்ட பின், தகவல்கள் தபால் துறை மூலமாக உலக முழுவதும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

கே.எப்.சி.பொரித்த கோழியில் புழுக்கள் : கடையின் உரிமம் ரத்து

கேரள மாநிலத்தில் கே.எப்.சி. துரித உணவகத்தின் பொரித்த கோழியில் புழுக்கள் நெளிந்ததாக வந்த புகாரை அடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் அந்தக் கடையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கே.எப்.சி என்ற துரித உணவகம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளை  ஒன்றுக்கு செவ்வாய்க் கிழமையன்று ஒரு குடும்பத்தினர் உணவருந்த சென்றனர். அவர்கள் ஆர்டர் செய்த பொரித்த கோழி உணவில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்பு குழுவினரிடம் புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து, இன்று அந்த கே.எப்.சி. துரித உணவகத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு குழுவினர், அந்த உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததையும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததையும் கண்டனர்.
மேலும் ஐந்து மாதங்களுக்கு முன்பு அறுக்கப்பட்ட கோழிக் கறிகளையும் அவற்றில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததையும் கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யபட்டு கடை மூடபட்டது.
கேரளத்தில் உள்ள கே.எப்.சி.யின் பிற கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

கே.எப்.சி.பொரித்த கோழியில் புழுக்கள் : கடையின் உரிமம் ரத்து

கேரள மாநிலத்தில் கே.எப்.சி. துரித உணவகத்தின் பொரித்த கோழியில் புழுக்கள் நெளிந்ததாக வந்த புகாரை அடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் அந்தக் கடையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கே.எப்.சி என்ற துரித உணவகம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளை  ஒன்றுக்கு செவ்வாய்க் கிழமையன்று ஒரு குடும்பத்தினர் உணவருந்த சென்றனர். அவர்கள் ஆர்டர் செய்த பொரித்த கோழி உணவில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்பு குழுவினரிடம் புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து, இன்று அந்த கே.எப்.சி. துரித உணவகத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு குழுவினர், அந்த உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததையும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததையும் கண்டனர்.
மேலும் ஐந்து மாதங்களுக்கு முன்பு அறுக்கப்பட்ட கோழிக் கறிகளையும் அவற்றில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததையும் கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யபட்டு கடை மூடபட்டது.
கேரளத்தில் உள்ள கே.எப்.சி.யின் பிற கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

பிரைவேட் போல்டர்:

 

யூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது. போல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும்.
கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந்தெடுக்கலாம். இந்த அனுமதியிலும் பல வகை உள்ளன. இதனை செட் செய்திட என்று Allow/Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம். உங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

கின்னசை நெருங்கும் சீட்டுக் கத்தி

 

Knife01 நம் ஊர்களில் காய்கறிகளை கத்தியால் தானே நறுக்குவோம். ஆனால் ஒருவர் ஆப்பிள், தர்ப்பூசனி, வெள்ளரிக்காய்களை சீட்டுகள் கொண்டு துண்டாடுகிறார். இந்த விசித்திர விளையாட்டை செய்பவர், விளையாட்டுக்குப் பெயர் போன சீனாக்காரர் தான்.

அவர் பெயர் யீ டாங்சின். 48 வயதாகும் இவர் இந்த பயிற்சியை மேற்கொண்டு 10 ஆண்டுகள் ஆகிறது. உலக சாதனையை குறி வைத்து இந்த முயற்சியில் இவர் இறங்கப்போக, இப்போது இந்த சீட்டுக்கத்தி விளையாட்டை பல இடங்களில் செய்து காட்டி சபாஷ் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

Knife02 இவரிடம் 18 வெள்ளரிக்காய்களை கொடுத்துப் பாருங்கள். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சீட்டுக்கட்டில் உள்ள ஒரு சீட்டை எடுத்து அத்தனை வெள்ளரிக்காய்களையும் துண்டு துண்டாக்கி விடுவார்.

என்றாலும் இவருக்கு இது முழுநேர வேலையில்லை. பள்ளிப்பேருந்துகளுக்கு இவர் மேனேஜராக இருக்கிறார்.

அப்படியானால் சீட்டு இவர் கையில் கத்தியாக எப்படி எப்போது உருமாறுகிறது? கேட்டால், "நான் காலையில் சுமார்ஒரு மணி நேரம் விளையாட்டு மைதானத்தில் ஓடுவேன். இரவு சாப்பாட்டை முடித்த பிறகு 2 மணி நேரம் இந்தப் பயிற்சியை மேற்கொள்வேன்” என்கிறார்.

Knife03 இவரது சமீபத்திய வெட்டு சாதனை, 12 வெள்ளரிக்காய்களை 47 வினாடியில் துண்டாக்கியது. 18 வெள்ளரிக்காய்களை 60 செகண்டில் துண்டாக்குவதே என் அடுத்தகட்ட முயற்சி. அதன்மூலம் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பேன் என்கிறார்.

இவர் வீட்டு சமையலில் மட்டும் அனுதினமும் வெள்ளரிக்காய் பச்சடி இடம் பெற்று விடுகிறது.

பின்னே..! கின்னஸ் சாதனை முயற்சிக்காக இவர் வெட்டிப் போடும் வெள்ளரிக்காய் துண்டுகளை வேறு என்னதான் செய்வதாம்..!

வேர்டில் எக்ஸெல் ஒர்க்ஷீட் இணைப்பு

வேர்ட் தொகுப்பில் எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை இணைக்கலாம். இதற்கு வழி தரும் வகையில் ஐகான் ஒன்றை அதில் அமைத்துக் கொள்ளலாம். இதற்கான வழி முறைகள்: டூல் பாரில் (Tools menu in toolbar) டூல்ஸ் மெனுவில் கிளிக் செய்திடவும்.
அடுத்ததாக Customize என்பதில் கிளிக் செய்திடவும். Customize டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் அதில் Commands என்னும் டேபைத் திறக்கவும். கிடைக்கும் பிரிவுகளில் Categories என்னும் பிரிவில் Insert என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Commands என்பதன் கீழாக Insert Microsoft Excel Worksheet என்று இருப்பதில் கிளிக் செய்து அப்படியே இழுத்துச் சென்று உங்களுடைய டூல் பாரில் எங்கு எக்ஸெல் ஒர்க் ஷீட்டுக்கான பட்டன் இருக்க வேண்டுமோ அங்கு விட்டுவிடவும். இனி இணைப்பதற்கான எக்ஸெல் ஒர்க் ஷீட் பட்டன் அங்கேயே இருக்கும்.