Daily Archives: ஒக்ரோபர் 11th, 2012

மீண்டும் மீண்டும் வேண்டும் என்கிறாரா உங்க துணை?

சிலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கும். அதாவது கணவனோ அல்லது மனைவியோ அல்லது காதலர்களுக்குள்ளோ, ஒருவருக்கு செக்ஸ் மீது நாட்டம் குறைவாக இருக்கும் அல்லது மூடு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்னொருவருக்கு எப்பப் பார்த்தாலும் அது வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் சில நேரங்களில் லடாய் கூட ஏற்படுவதுண்டு.

செக்ஸ் என்பதே உடல் ரீதியான பசி என்று சொல்லப்பட்டாலும் கூட அது மன ரீதியான உணர்வுகளின் வெளிப்பாடே. அந்த உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அப்படித் தோன்றும்போது அதை சரியான வடிகால் மூலம் வெளியேற்றி விடுவதே நல்லது. அதில் தவறு ஒன்றும் இல்லை.

ஒருவருக்கு உணர்வுகள் குறைவாக இருக்கும்போது மற்றவருக்கு அதிகம் இருப்பதில் ஆச்சரியமோ, வினோதமோ இல்லை. அது இயல்பான ஒரு விஷயம். சில நேரங்களில் இருவருக்குமே நல்ல மூடு இருக்கும், உணர்வுகள் ததும்பி வழியும். அதுபோன்ற நேரங்களில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு வந்து, இன்னொருவருக்கு மூடு இல்லாதபோதுதான் பிரச்சினை வெடிக்கிறது.

ஆனாலும் இதை எளிதில் சமாளிக்கலாம். உங்கள் துணை எப்போது பார்த்தாலும் செக்ஸ், செக்ஸ் என்று உங்களை நச்சரிக்கிறாரா, கவலையை விடுங்கள், அவரை எளிதாக சமாளிக்கலாம்.

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வுகள் அடிக்கடி எழும். அதிலும் சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். சில பெண்களுக்கு தினசரி கூட செக்ஸ் உறவு தேவைப்படும். ஆனால் அதை சமாளிக்கக் கூடிய மன நிலை பல ஆண்களுக்கு இருப்பதில்லை. இதனால் அந்தப் பெண்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

இருப்பினும் சில டிப்ஸ்களைக் கையாண்டால் அதை எளிதாக சமாளிக்கலாம்….

முதலில் உங்களது மனைவி அல்லது காதலியுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். அவரது செக்ஸ் தேவை என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முயற்சியுங்கள். உங்களால் எப்படி முடியும், என்ன முடியும், எந்த சமயத்தில் சாத்தியம் என்பதை உங்களது மனைவி அல்லது காதலிக்கு மென்மையான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லுங்கள். உங்களது வேலைப்பளு குறித்து விளக்குங்கள், உங்களது உடல் நலம் குறித்துச் சொல்லுங்கள். இந்த விவாதம் மிகவும் மென்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களது கெப்பாசிட்டி குறித்து அவருக்குப் புரியும் வகையில் விளக்கி விட்டால், அதற்கேற்ப அவரும் உறவுகளை திருத்திக் கொள்வார், காதலும், காமும், பிரச்சினையில்லாமல் கை கோர்த்துச் செல்ல இது உதவும்.

அடிக்கடி காமவயப்படுவது நோயோ அல்லது பிரச்சினையோ அல்ல. அது இயல்பான உடல் வேட்கைதான். இதை உங்களது மனைவிக்கு நீங்கள் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போல எப்போதெல்லாம் நாம் இயல்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் எனப்தையும் அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதேபோல அவரது தேவைகள், கருத்துக்களையும் உன்னிப்பாக கேளுங்கள். போதுமான செக்ஸை நான் தருகிறேன், அதற்காக இவ்வளவு நேரம் வேண்டும், இந்த நேரமெல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்காமல் ஒவ்வொரு முறையும் திருப்தி கிடைக்கிறதா என்பதை மட்டும் பார் என்று அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள். ‘குவான்டிட்டி’யை விட ‘குவாலிட்டி’யே முக்கியம் என்பதை அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள், நிச்சயம் புரிந்து கொள்வார்.

நீ ஒரு செக்ஸ் அடிமை அல்ல என்பதையும் உங்களது மனைவி அல்லது காதலிக்குப் புரிய வையுங்கள். இதை நினைத்து வருத்தப்படாதே, இது இயல்பானதுதான். அதேசமயம், உனது உணர்வுகளுக்கு நான் நிச்சயம் பட்டினி போட மாட்டேன், தேவைப்படும்போது தருவேன், அதேசமயம், நீயும் நினைத்த நேரத்தில் எதிர்பார்க்காதே, அது மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே நீயே திட்டமிட்டு கூறு, அதன்படி செயல்படுவோம் என்று அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

முக்கியமாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவி அல்லது காதலி செக்ஸ் தேவை என்று கேட்கும்போது அதைத் தவிர்க்க முயலாதீர்கள், தப்பிப் போக நினைக்காதீர்கள். மாறாக அப்போது உள்ள உங்களது மனநிலைக்கு ஏற்ப அவரிடம் பக்குவமாக கூறி அதற்கேற்ற வகையில் சின்னதோ, பெரியதோ நிச்சயம் உறவு வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் மீதான உங்களது துணையின் எதிர்பார்ப்பை ஏமாற்றத்தில் தள்ளாமல் இருக்க உதவும்.

வார இறுதி நாட்களை சிறப்பாக மாற்றியமையுங்கள். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அவர் கேட்பதையெல்லாம் செய்யுங்கள், சொல்வதையெல்லாம் செய்யுங்கள். அதற்கேற்ப உங்களது பணி நேரம், பெர்சனல் வேலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்கள் மீது அவருக்கு பாசம் அதிகரிக்க உதவும்.

மொத்தத்தில் உங்களது மனைவியின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு, உங்களது நிலையையும் அவருக்கு விளக்கி இருவரும் ஒரு சேர ஒரு முடிவெடுத்து அதன்படி செயல்படும்போது எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு மத்தியில் ஊடுறுவ முடியாது.

மார்பழகை `வாங்கும்’ மணமகள்கள்!

இப்போதெல்லாம் கிராமப்புற மணப்பெண்கள் கூட பியூட்டி பார்லர் செல்லாமல் மணமேடை ஏறுவதில்லை. இது சாதாரண விஷயம். நகரத்து மணமகள்கள் அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டார்கள். அதாவது, திருமணத்துக்காகவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது. அதிலும் `முன்னழகை’ கூட்டும் சிகிச்சையில் பெருநகர மணப்பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியச் செய்தி.

திருமணத்தின்போது தோற்றத்துக்கான முக்கியத்துவம் கூடிக்கொண்டே போவதாலும், சினிமாவுக்கு இணையாக வீடியோ, போட்டோ ஷூட் நடப்பதாலும் மணமகள்கள் அன்றைய தினத்தில் அழகு தேவதையாக ஜொலிக்க நினைக்கிறார்கள். அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் தயாராயிருக்கிறார்கள்.

இந்த புதிய `டிரென்ட்’ குறித்து பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் உதயசங்கர் கூறுவதைக் கேளுங்கள்…

“இப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறார்கள் என்றாலே அப்பெண் எங்களை நாடி வந்துவிடுகிறாள். பெரும்பாலானோர் கேட்டுக்கொள்வது, மூக்கைச் சீராக்குவது, கரும்புள்ளிகள், தழும்புகளை அகற்றுவது, மார்பழகை கூட்டுவது, லிப்போசக்ஷன் என்ற கூடுதல் கொழுப்பை நீக்கும் சிகிச்சை போன்றவற்றைத்தான். அதிலும் குறிப்பாக, மார்பகங்களைப் பெரிதாக்கிக்கொள்ளவே பெரும்பாலான பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்!”- என்கிறார்.

 

இவர் சொல்லும் இன்னொரு விஷயம் கவனத்துக்குரியது. அதாவது பெரும்பாலான பெண்கள் தமது அழகுச் சிகிச்சை குறித்து வருங்காலக் கணவருக்குத் தெரிவிப்பதில்லை. அது பின்னாளில் பல பிரச்சினைகளை உருவாக் கும் என்கிறார்.

“நான் என்னிடம் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வரும் பெண்களிடம் நீங்கள் உங்கள் வருங்காலக் கணவரிடம் இதைப் பற்றிக் கூறிவிடுங்கள் என்றே சொல்கிறேன். ஆனாலும் பல பெண்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதே உண்மை” என்கிறார் உதயசங்கர்.

ரகசியம் ரகசியமாகவே இருந்துவிடுகிற வரையில் பிரச்சினையில்லை. ஆனால் சில வேளைகளில் சர்ஜரியில் ஏடாகூட விளைவுகள் ஏற்படும்போதுதான் பிரச்சினை பூதாகரமாகிறது.

உதாரணமாக, மார்பழகைக் கூட்டிக்கொள்ளும் சிகிச்சை செய்துகொள்ளும் மணப்பெண்ணுக்கு, திருமணத்துக்குப் பின் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்கிறார்கள் அழகுச் சிகிச்சை நிபுணர்கள்.

இதில் இன்னொரு கூத்தும் நடக்கிறதாம். பெரும்பாலான பெண்கள், தங்களுக்குப் பிடித்த அல்லது பிரபலமான நடிகையின் படத்தைக் கையோடு எடுத்துச் சென்று, அவர்களைப் போன்று தங்களை மாற்ற வேண்டும் என்கிறார்களாம்.

“நடைமுறையில் சாத்தியமில்லாத கோரிக்கைகளோடு நிறைய இளம் மணப்பெண்கள் வருகிறார்கள். ஒருமுறை ஒரு பெண் ஐஸ்வர்யா ராயின் போட்டோவுடன் வந்து, அவரைப் போலத் தன்னை மாற்ற வேண்டும் என்றார்” என்கிறார் உதயசங்கர்.

இதெல்லாம் உண்மையே என்பது வருங்கால மணமகள்கள் வட்டாரத்தில் விசாரித்தால் தெரிகிறது.

26 வயதாகும் ஸ்ரீதேவி ஒரு மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ். விரைவில் தாலி ஏற்கப் போகிறவர். அவர், “கல்யாணத்தன்று நான் எப்படித் தோன்றுவேன் என்று நினைத்து நினைத்து ஆரம்பத்தில் எனக்குத் தூக்கமே போச்சு” என்கிறார்.

இப்படி நிம்மதியிழப்பதை விட பிளாஸ்டிக் சர்ஜரி என்ற `ரிஸ்க்’ பரவாயில்லை என்று இவரைப் போன்ற பெண்கள் நினைக்கிறார்கள்.

“சருமத்தை இறுக்கமாக்கும் சிகிச்சையை நான் செய்து கொண்டிருக்கிறேன். முன்னால நான் கொஞ்சம் குண்டாயிருந்தேன். எப்படியோ பட்டினி அப்படி இப்படின்னு ரொம்பவே எடையைக் குறைச்சுட்டேன். ஆனா `ஸ்டிரெச் மார்க்ஸ்’ உடன், சதை ஆங்காங்கே அசிங்கமாகத் தொங்கியது. அதையெல்லாம் தற்போது சரிசெய்துகொண்டிருக்கிறேன். என் உடம்பில் நிறைய தழும்புகள், மச்சங்கள் போன்றவை இருந்ததால் அவற்றை நீக்கும் சிகிச்சையும் மேற்கொண்டேன்” என்கிறார் ஸ்ரீதேவி.

திருமணம் செய்துகொள்ளப்போகும் இரண்டு, மூன்று பெண்களாவது தினசரி தன்னை நாடி வருவதாகக் கூறுகிறார் மற்றொரு பிளாஸ்டிக் சர்ஜனான பிரியதர்ஷன்.

“பெருநகரங்களில் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. தற்போது மணமக்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிகம் கவலைப்படுகிறார்கள். திருமண நாளில் `பெஸ்ட்’டாக தோன்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்கிறார் அவர்.

மணமகன்கள் அழகான பெண்களைத் தேடுவதும், பெண்களை இது மாதிரியான அழகுச் சிகிச்சைகளை நோக்கித் தள்ளுகிறது. `அழகான, சிவப்பான, ஸ்லிம்மான மணப்பெண் தேவை’ என்று எத்தனை எத்தனை மணமகள் தேவை விளம்பரங்கள் வருகின்றன என்று கவனித்தாலே புரியும்.

ஆனாலும் சில லட்ச ரூபாயும் செலவழித்து, ரிஸ்க்கும் எடுக்க வேண்டுமா?

விரைவில் மணமேடை ஏற இருக்கும் ஸ்வேதா கூறுகிறார்..

“முகத்தைச் சீராக்கும் அழகு சிகிச்சையையும், வயிற்றைச் சுருக்கும் சிகிச்சையையும் நான் செய்துகொண்டேன். செலவழிக்கப் பணம் இருக்கிறது என்றால் மணப்பெண்ணாகிறவர்கள் செய்துகொள்ளவேண்டியதுதான். நாம் என்ன தினமுமா திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்? அழகுச் சிகிச்சை செய்து கொண்ட யாரோ ஒருவருக்குத்தான் பிரச்சினை ஏற்படுகிறது. உண்மையில் இதில் அவ்வளவு ரிஸ்க் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனது தோழி ஒருத்தி தனது மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொண்டாள். அதன்பிறகுதான் அவளுக்குத் தன்னம்பிக்கையே வந்தது” என்கிறார்.

சரிதான் போங்க! எல்லாவற்றிலும்தான் `டூப்ளிகேட்’ என்றால், மணப்பெண் அழகிலுமா?