Daily Archives: ஒக்ரோபர் 12th, 2012

தொடங்கும்போதே "என்னைத் தொடராதே

வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் “என்னைத் தொடராதே” (“Do Not Track”) என்னும் வசதியினை, பிரவுசர் இயங்கத் தொடங்கும் போதே, மாறா நிலையில் அளிக்க, மைக்ரோசாப்ட் முடிவெடு த்துள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்களின் தனிமை காப்பாற்றப்படுகிறது. இதன் மூலம் எந்த தளங்களை நாம் பார்க்கிறோம், எத்தகைய பொருள் குறித்து தேடுகிறோம் என்ற தகவல்களை தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அறிய முடியாது. நாம் சில வசதிகளுக்காக, சில கூடுதல் புரோகிராம்களை பிரவுசரில் பதியும் போது, அவை நம் தனிநபர் தேவைகளைக் கண்டறிய சில குக்கீஸ்களை பதித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலம், நம் விருப்பங்களை அவை சார்ந்த நிறுவனங்களுக்கு அளித்து வந்தன. அந்நிறுவனங்கள் தங்கள் பொருள் குறித்த தகவல்களை நாம் கேட்காமலேயே அளித்து வந்தன. எடுத்துக் காட்டாக, நீங்கள் விளையாட்டுக்குத் தேவையான பொருட்கள் குறித்து, பிரவுசர் மூலம் தகவல்களைத் தேடுகையில், நீங்கள் தேடும் பொருட்கள் குறித்த தகவல்கள், இந்த பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். அந்நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் குறித்த தகவல்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கும். இதற்கான கட்டணத்தை, நம் பிரவுசரில் இதற்கென குக்கீஸ்களைப் பதிந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளும். ஆனால், “Do Not Track” வசதி, பிரவுசரிலேயே மாறா நிலையில் கொடுக்கும் பட்சத்தில், இந்த தகவல் அறியும் வசதி கிடைக்காது. எனவே தான், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு, இணையத்தில் விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்கள் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளன.
இந்த வசதியின் மூலம், நிறுவனங்களுக்கு என்னைத் தொடராதே என்ற வேண்டுகோள் தான் அனுப்பப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. சரியான சட்ட விதிமுறைகள் இருந்தால்தான், தனிநபர் உரிமையை மீறல் என்ற பிரிவில் இத்தகைய அத்து மீறல்களைத் தண்டிக்க முடியும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் இது தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளும் வசதியாகத்தான் தரப்படுகிறது.
பதிப்பு 10ல், இந்த வசதி மாறா நிலையில் தரப்பட்டாலும், பயன்படுத்துபவர்கள் விரும்பினால், இந்த வசதி இயங்குவதனை நிறுத்தலாம். அவ்வாறு நிறுத்துவதன் மூலம், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் அறியத் தரும் வாய்ப்பினை வழங்குகிறார்கள் என்பது பொருளாகிறது.

மெமரி – ஸ்டோரேஜ்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் இயங்க இவை இரண்டும் தேவை தானா? என்ற கேள்விக்கும் பதிலைப் பார்க்கலாம்.

ராம் (RAMRandom Access Memory):


இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.

பயன்பாடு:

தற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும். இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது. எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.

ஹார்ட் ட்ரைவ் (hard drive):

ஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.

பயன்பாடு:

நீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம். இதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன. தற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.
ஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.
சரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர். அல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்க ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும். ஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.

தானத்தில் சிறந்தது…

தானங்களில் அன்னதானமும், வஸ்திர தானமும், தண்ணீர் தானமும் சிறந்தவை. அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்கும்; வஸ்திர தானம், ஒருவருடைய மானம் காக்கும்; தண்ணீர் தானம், ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும். அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்குவதால், அந்த வயிறு, தானம் செய்தவனை வாழ்த்தும். அந்த அரிசியும், நாம் எடுத்த பிறவி, பிறருக்கு பயன்பட்டதே என்று சந்தோஷப்படும்.
ஒருவருக்கு பணமாகக் கொடுப்பதை விட, அன்னம் அளிப்பது சிறந்தது. பணமாகக் கொடுத்தால், அதை, அவன் துஷ்பிரயோகம் செய்ய முடியும். அன்னமாகக் கொடுத்தால் அதை சாப்பிடத் தான் பயன்படுத்துவான். அதனால், அன்னதானம் சிறந்தது.
அதே போல், வஸ்திர தானமும் சிறந்தது. ஒரு ஏழை, கிழிசல் துணியை அணிந்து மானம் காப்பாற்ற முடியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவனுக்கு வஸ்திர தானம் செய்தால், அவனது மானம் காப்பாற்றப்படும்.
அதே போல், தாகமாக உள்ளவனுக்கு தண்ணீர் தானம் செய்தால், அதை, அவன் குடித்துவிட்டு, "அப்பாடா’ என்று சொல்லி சந்தோஷப்படுவான். அதற்காகத்தான் வெயில் காலத்தில் அங்கங்கே தண்ணீர் பந்தல் வைக்கின்றனர்.
சில கோவில்களில் விக்ரகத்துக்கு துணி கூட இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட கோவில்களுக்கு, வஸ்திரம் அளித்து உதவினால், உதவி செய்தவருக்கு துணிப் பஞ்சமே இராது. சில கோவில்களில் நல்லதாக பட்டுத்துணி வாங்கி பகவானுக்கு கொடுப்பர். ஆனால், மறுநாளே அதை ஏலம் விட்டு விடுவர் கோவில்காரர்கள்.
சில இடங்களில் நல்ல பட்டு வேஷ்டி, பட்டுப் புடவைகளை பகவானுக்கு சாத்துவர் பக்தர்கள். அதை, குறைந்த விலையில் விற்று விடுவர் கோவில்காரர்கள். இப்படியும் சில இடங்களில் நடப்பதுண்டு.
சில பெரிய கோவில்களில், இப்படி பகவானுக்கு சாத்தப்பட்ட துணிகளை, ஒரு வருஷம் வரை வைத்திருப்பர். ஒரு வருஷத்தில் எப்போது போய் கேட்டாலும் எடுத்துக் காட்டுவர். ஒரு வருஷம் ஆனபின் தான் ஏலம் விடுவர். இதில் பகவானுக்காக, துணி வாங்கிக் கொடுத்தவனுக்கு புண்ணியம் உண்டா என்றால், உண்டு. அதன் பின், அதை கோவில்காரர்கள் என்ன செய்கின்றனர் என்று கவலைப்பட வேண்டியதில்லை.
பசுவும், கன்றுமாக தானம் செய்கின்றனர். தெருக்கோடி போனதும், பசுவையும், கன்றையும் வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான் தானம் வாங்கியவன். தானம் கொடுத்தவனுக்கு பலன் உண்டு. தானம் வாங்கியவன் அதை என்ன செய்கிறான் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அது போதுமே!