Daily Archives: ஒக்ரோபர் 14th, 2012

தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்

image

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, சூரிய சக்தி தெரு விளக்குகள்பொருத்தப்படுகின்றன.
தமிழகத்தில் நிலவும், கடும் மின் பற்றாக் குறையால், மின் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தெரு விளக்குகளால் ஏற்படும் மின் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது.பல கிராம ஊராட்சிகளுக்கு, தெரு விளக்கு மின் கட்டணத்தைச் செலுத்தக் கூட நிதியில்லை. இந்த, இக்கட்டான நிலையில், மின் சிக்கனம், செலவை குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாற்று எரிசக்திக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.இதன் ஒரு கட்டமாக, கிராம ஊராட்சிகளில் உள்ள, ஒரு லட்சம் தெரு விளக்குகள், சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியையும் சிக்கனமாகப் பயன்படுத்த, சதாரண குழல் விளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, ஆண்டுக்கு, 20 ஆயிரம் தெரு விளக்குகள் என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் தெரு விளக்குகளை, சூரிய சக்தி விளக்குகளாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தி விளக்குகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு, 52.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களிலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 தெரு விளக்குகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு, சூரிய சக்தியை ஈர்த்து, மின்சாரமாக மாற்றும் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுப்பு, 600 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்வதாக அமைக்கப்படுகிறது.சூரிய சக்தி மின் விளக்குகள் அனைத்தும், "ரிமோட் கன்ட்ரோல்’ முறையில், பராமரிக்கும் முறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகத்தை தெற்கு, வடக்கு என, இரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.
இம்மண்டலங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகளை அமைக்கும் நிறுவனம், தலைமையகங்களை அமைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை நீங்கலாக, மீதமுள்ள மாவட்டங்களில், தெற்கு மண்டலத்தில், 16 மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில், 15 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய, 15 மாவட்டங்கள், வடக்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய, 16 மாவட்டங்கள், தெற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டால், பெரும்பான்மையான கிராமப் பகுதிகள் இருண்டுள்ளன. இந்நிலையில், சூரிய சக்தி மூலம், தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்து, அரசு உணர்ந்துள்ளதால், இதை விரைந்து செயல்படுத்த, நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

"புகைக்கும்’ சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!

image

" நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.

ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே’ என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் கிராமப்புறங்களில், 20 சதவீதம், நகர்ப்புறங்களில், 12.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வே தெரிவிக்கிறது. இதே வேகம் நீடித்தால், "இனிவரும் காலங்களில், புகையிலை தொடர்பான நோய்களால், 2020ல், இந்தியாவில், 20 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்’ என்ற, அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது.
இது குறித்து, புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாநில ஆலோசகர் பிரசன்னா கண்ணன் கூறும்போது, ""புகையிலை பொருட்களான சிகரெட், பான்பராக், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2008ல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இன்று வரை குறையவில்லை. இதற்கு மக்களிடையே புகையிலை குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். தற்போது, புகையிலை நோய்களால், இந்தியாவில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,” என்றார்.

புகை பிடிக்கும் பெண்கள்:
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்

ஆபீஸ் 2013 தொகுப்பின் சோதனை பதிப்பு வெளியாகி நமக்கு பழகிப் பார்க்க கிடைக்கிறது என்றாலும், இன்னும் ஆபீஸ் 2010 தொகுப்பே முழுமையாகப் பழக்கம் இல்லாமல் உள்ளதே என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்துபவர்கள் பலரிடம் உள்ளது. ஆபீஸ் 2010ன் பல சிறப்பியல்புகளின் பயன்களை நாம் தெரிந்து கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்றுதான் பலரிடம் பதில் வருகிறது. எம்.எஸ். ஆபீஸ் வரிசையில், ஆபீஸ் 2010 வழக்கமான மாற்றங்கள் என இல்லாமல், பல புதிய வகை மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அவற்றில் புதிய மாற்றங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, மக்களிடையே அதன் அபார வெற்றி உறுதியான பின்னரே, ஆபீஸ் 2010 வெளியானது. விண்டோஸ் விஸ்டா போல, ஆபீஸ் 2007 தொகுப்பு பயனாளர்களிடையே அவ்வளவாக பெயர் எடுக்கவில்லை என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட், ஆபீஸ் 2010 தொகுப்பினை புதிய இன்டர்பேஸ் மற்றும் பயன்தரும் வசதிகளுடன் வடிவமைத்து வழங்கியது. இணைய அடிப்படையில், கூகுள் நிறுவனம், தன் கூகுள் டாக்ஸ் வசதி மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு சவாலைத் தந்ததனால், ஆபீஸ் 2010 தொகுப்பினை மிகக் கவனமாக முற்றிலும் புதிய எதிர்பாராத வசதிகளுடன் வடிவமைத்தது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.
தேடல் (Find) கட்டத்தில் நாம் தேடும் டாகுமெண்ட்கள் பட்டியலிப்படுகின்றன. இவற்றின் பிரிவியூ காட்சி தேடப்படும் வகையிலான டாகுமெண்ட்கள் அனைத்திற்கும் கிடைப்பதால், நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். ஒரே டாகுமெண்ட்டில் பலர் எடிட் செய்வதனை மிக எளிமையாக்கி உள்ளது ஆபீஸ் 2010. Windows Live account இருந்தால், டாகுமெண்ட்டினை எடிட் செய்கையிலேயே, வேர்டில் இருந்தபடியே, மற்றவருடன் கலந்தாலோசிக்கவும் முடியும்.
இத்தொகுப்பில், நம் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுக்கு shadow, bevel, glow, and reflection போன்ற விசுவல் எபக்ட் தர முடியும். இந்த எபக்ட் அமைத்த டெக்ஸ்ட்களிலும் ஸ்பெல்லிங் சோதனை நடத்த முடியும். இதுவரை படங்களுக்கு மட்டுமே நாம் இணைத்த சில எபக்டுகள், இப்போது டெக்ஸ்ட்களுக்கும் கிடைக்கின்றன. இதற்கு SmartArt Graphics என்ற வசதி தரப்பட்டுள்ளது. போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் இல்லாமலேயே, இமேஜ்களுக்கு கூடுதல் கிராபிக்ஸ் வசதியினை வேர்ட் தொகுப்பில் இருந்த படியே மேற்கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் பைலை அமைத்துவிட்டு, சேவ் செய்திட மறந்து விட்டால், அதன் ட்ராப்ட் (Draft) பதிப்பை வேர்ட் 2010 வழங்குகிறது. வேர்ட் தொகுப்பில் இருந்தபடியே, ஸ்கிரீன் ஷாட் எனப்படும் திரைக் காட்சிகளை உருவாக்கவும், இணைக்கவும் முடியும். இந்த ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ள Backstage வியூ, வழக்கமான பைல் மெனுவின் இடத்தைப் பிடித்துள்ளது. ரிப்பன் இன்டர்பேஸ் மூலம், மிக விரைவாக கட்டளைகளைப் பெற
முடிகிறது.
வேர்ட் 2010 தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம், ஒரே நேரத்தில் நாம் பல மொழிகளைக் கையாளும் வசதி கிடைத்திருப்பதுதான். சொற்கள், சொல் தொகுப்புகள் மற்றும் டெக்ஸ்ட் ஆகியவற்றை மொழி பெயர்த்துப் பெற முடிகிறது. ஒவ்வொரு மொழிக்குமான ஸ்கிரீன் டிப்ஸ்களை தனித்தனியே அமைத்துக் கொள்ள முடியும்.