Daily Archives: ஒக்ரோபர் 27th, 2012

அச்சச்சோ, தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க!

[ssss.jpg]பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும். இதுபோன்ற செக்ஸ் தவறுகள் சகஜம்தான், இருந்தாலும் இதையும் ஈசியாக சமாளிக்கலாம், சரி செய்யலாம்.

உறுப்பு வறட்சியை உணராமல்…

சிலர் முன்விளையாட்டு உள்ளிட்டவற்றில் கன கச்சிதமாக ஈடுபடுவார்கள். ஆனால் உடல் உறவைத் தொடங்கும்போது சில நேரங்களில் உறுப்பு வறட்சி இருப்பதை உணராமல் விட்டு விடுவார்கள். அதாவது பெண்ணுறுப்பானது நன்கு ஈரமடைந்து, வழவழப்பு அதிகமாகிய பின்னர்தான் ஆண் தனது உறுப்பை உள்ளே விட வேண்டும். அப்போதுதான் உறவு சுமூகமாக இருக்கும். ஆனால் பல ஆண்கள் அவசரக் குடுக்கைகளாக வறட்சியான நிலையில் உள்ளே போய் விடுவார்கள். இதனால் ஆண்களுக்கும் சரிவராது, பெண்களுக்கும் வலிக்கும். எனவே அப்படிப்பட்ட நிலையை சந்திக்கும்போது உறுப்பை வெளியே எடுத்து விட்டு சிறிது நேரம் விளையாடுங்கள். பிறகு எல்லாம் கூடி வந்த பின்னர் உள்ளே போங்கள்.

‘காட்டுத்தனம்’ வேண்டாமே…

சில ஆண்கள் உறவின்போது காட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். அதாவது கடிப்பது, அடிப்பது, கத்துவது, முரட்டுத்தனமாக பிடித்து இழுப்பது என்று படு வேகமாக இயங்குவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பதே. ஆனால் இதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு உறவில்தான் வேகம் இருக்க வேண்டும், மாறாக பார்ட்னர்கள் படு வேகமாக இயங்குவதாலோ அல்லது முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாலோ சந்தோஷம் அடைவதில்லை.

பெண்களைப் பூவுக்கு ஒப்பிடுவது இதற்குத்தான். வலிக்காமல், அலுங்காமல், குலுங்காமல், அதேசமயம், உறவில் வேகம் இருக்கும்போதுதான் பெண்களுக்கு உணமையிலேயே சுகம் கூடுதலாகும், அவர்களும் அனுபவிப்பார்கள், நமக்கும் அந்த சுகானுபவம் கிடைக்க முழுமையாக ஒத்துழைப்பார்கள்.

எனவே உறவில் வேகமும், உங்களது இயக்கத்தில் மென்மையும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்…தமிழுக்குச் சிறப்பு வல்லினம் மட்டுமல்ல, மெல்லினமும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன…!

தவறான முயற்சிகள்…

சிலர் புதிய பொசிஷன்களைச் செய்து பார்க்கப் போவதாக கூறி விட்டு அது சரிப்பட்டு வராமல் டென்ஷனாகி நிற்பார்கள். இதற்காக டென்ஷன் ஆகத் தேவையே இல்லை. யாருமே செக்ஸில் நிபுணர்கள் என்று கிடையாது. சில நேரங்களில் பரிசோதனைகள் தோல்வியில் முடியலாம். இதற்காக டென்ஷனாகி நிற்காமல், தெரிந்த பொசிஷனுக்கு உறவைத் தொடருவதே புத்திசாலித்தனம்.

சிலர் இப்போது பார் உன்னை எப்படி உணர்ச்சிவசப்பட வைக்கிறேன் என்று கூறி விட்டு எதையாவது செய்து பார்ப்பார்கள். ஆனால் அம்மணியிடமிருந்து எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லாமல் போய் விடும். இதனால் ஆண்கள் சோர்வடைந்து முகத்தை தூக்கி வைத்துக் கொள்வார்கள். இந்த விசனமும் கூடத் தேவையில்லாததுதான். உங்களது டிரிக்குகள் உங்களது துணையைக் கவரத் தவறி விட்டதற்காக வருத்தப்படாமல், அவருக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கண்டறிந்து, புரிந்து அந்த ரூட்டில் போனால் வழி பிறக்கும், சொர்க்க வாசலும் சீக்கிரமே திறக்கும்…!

உடனே போயிராதீங்க..

இந்தத் தவறைத்தான் நிறையப் பேர் அடிக்கடி செய்கிறார்கள். அதாவது உறவு முடிந்த பின்னர் விசுக்கென்று எழுந்து பொசுக்கென்று போய் விடுவது. இதைப் பெண்கள் எப்போதுமே விரும்புதவில்லை. உறவு முடிந்ததும் ஆசுவாசமாக இருவரும் இணைந்தே படுத்திருக்க வேண்டும். மனைவியின் மார்பில் தலை வைத்து எப்படிடா இருந்துச்சு செல்லம் என்று கேட்டுக் கொஞ்ச வேண்டும். மெதுவாகமுத்தமிட வேண்டும். தேங்ஸ் சொல்ல வேண்டும். செல்லமாக கொஞ்ச வேண்டும். அவரும் ஏதாவது சொல்லிக் கொஞ்சுவார். அவரிடம் உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லி அவர் வெட்கப்படுவதைக் கண்டு நீங்கள் சந்தோஷிக்க வேண்டும். இப்படி மாறி மாறி இருவரும் சில நிமிடங்கள் செல்லமான சீண்டல்களில் ஈடுபட்டு விட்டு பிறகே எழுந்திருக்க வேண்டும்.

இப்படிச் சின்னச் சின்ன தப்புகள் நிறைய இருக்கலாம். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்து கொண்டால் உறவுகள் தொடர்கதைதான்….!

அடோப் பிளாஷ் பிளேயர் 11.4 வெளியானது

சென்ற வாரம் அடோப் நிறுவனம், தன் பிளாஷ் பிளேயர் சாப்ட்வேர் தொகுப்பின் 11.4.402.265 பதிப்பினை வெளியிட்டது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் பதிப்புகள் கிடைக்கின்றன.
பயர்பாக்ஸ் பிரவுசரில், பிளாஷ் பிளேயர் தந்து கொண்டிருந்த பிரச்னை இதில் தீர்க்கப்பட்டுவிட்டது. இந்த பிரச்னையால், பிரவுசரில் சாதாரணமாக டெக்ஸ்ட் அமைப்பது கூட தடைபட்டது. இந்த தொகுப்பினை http://get.adobe.com/flashplayer/ என்ற முகவரியில் இயங்கும், தன் அதிகார பூர்வ தளத்தில் அடோப் வழங்குகிறது.
இந்நிறுவனத்தின், அடோப் பிளாஷ் பிளேயருக்கான சப்போர்ட் சென்டர் தளத்தில் இது வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை மேற்குறிப்பிட்ட தளத்திலிருந்து நீங்கள் தரவிறக்கம் செய்திடுகையில், நீங்கள் விருப்பப்பட்டால் பெற்றுக் கொள்ளும்படி McAfee Security Scan Plus என்ற புரோகிராம் தரப்படுகிறது. எனவே இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்த பின்னர், பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்திட வேண்டும்.
பொதுவாக, இதற்கு முந்தைய பதிப்பில் இருந்த அனைத்து குறைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாக, அடோப் அறிவித்துள்ளது. டெவலப்பர்களுக்கான தொழில் நுட்ப ரீதியாக பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. வசதிகளையும் சரி செய்யப்பட்ட குறைகள் என்ன என்பதனையும் http://www.adobe.com/support/security/bulletins/apsb1219.html என்ற முகவரியில் உள்ள அடோப் தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எக்ஸெல் கிராபிக்ஸ்

ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்றதாகத் தோன்றும். நாம் வேண்டும்போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் எக்ஸெல் புதிய தொகுப்பு வரையில் எதுவாக இருந்தாலும் கீழே கண்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.
2. இதில் View என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
3. பின்னர் Hide All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்தவுடன் கிராபிக்ஸ் ஒர்க்ஷீட்டிலிருந்து மறைக்கப்படும். அவை அங்குதான் இருக்கும். பார்வையிலிருந்தும் பிரிண்ட் செய்வதிலிருந்தும் மறைக்கப்படுகிறது.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டனை அழுத்தி அதில் Excel Options என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். Excel Options dialog box காட்டப்படும்.
2. பின் டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை ஸ்குரோல் செய்து பார்க்கவும். அங்கு Display Options என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் உள்ள ட்ராப் டவுண் லிஸ்ட்டினைப் பயன்படுத்தி எந்த ஒர்க்புக் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Nothing (Hide Objects) என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்தால் கிராபிக்ஸ் மறைக்கப்படும். இனி உங்கள் ஒர்க்ஷீட்டினை வழக்கமான முறையில் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின் மீண்டும் கிராபிக்ஸ் படங்கள் ஒர்க்ஷீட்டில் காணப்பட வேண்டும் எனில் மேலே சொன்னபடி ஆப்ஷன்கள் பட்டியலில் சென்று Show All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

பாலக் சிக்கன் மசாலா

 

சிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா? செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள்.

தேவையான பொருட்கள்

பாலக்கீரை -1 கட்டு

சிக்கன் -1/2 கிலோ

வெங்காயம் -300 கிராம் (நறுக்கியது)

தக்காளி -200 கிராம் (நறுக்கியது)

மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்

தனியாத்தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

பட்டை, லவங்கம்,

ஏலக்காய் – தலா 2

இஞ்சி, பூண்டு

விழுது – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.