Daily Archives: ஒக்ரோபர் 29th, 2012

ஒரே இரவில் 2, 3, 4 ‘ரவுண்டு’ போகனுமா…?

செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும்.

ஆரம்பத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமானது. சிலர் தினசரி கூட ராத்திரி ரவுசில் இறங்குவார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து கொண்டே வரும்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக. வாரத்திற்கு சில முறை, பிறகு மாதத்திற்கு சில முறை என்று குறுகிக் கொண்டே போய் விடும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு எப்போதுமே செக்ஸ் நினைவுதான் கொஞ்ச நாளைக்கு அதிகமாக இருக்கும். இதற்காகத்தான் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே நாளாக நாளாக ஆர்வம் குறையும் அல்லது அதுதான் பக்கத்திலேயே இருக்கே, பிறகெதற்கு பதறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

இருப்பினும் திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, ஒரே நாளில் 2 அல்லது 3 முறை அல்லது அதற்கு மேலும் உறவு கொள்வது எளிதானதுதான் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

செக்ஸ் என்றால் என்ன … ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புதான், ஹார்மோன் ரசவாதம்தான். இதில் உடம்பு மட்டுமல்ல, மனசும் கூட முக்கியக் காரணம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல உறவில் ஈடுபாடு கூடும்போது உறவின் எண்ணிக்கையையும் நாம் நிச்சயம் கூட்ட முடியும்.

நடுத்தர வயதைக் கடந்த சிலருக்கு, முன்பு போல நாம் இப்போதும் அதிக அளவில், அதாவது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி்த தோன்றும்போது அதை செயலாற்ற உடனே களத்தில் இறங்கி விட வேண்டும். அதற்கேற்ப மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று இரவு நமக்கு அன்லிமிட்டெட் என்று முடிவு செய்து விட்டால் மாலையிலேயே மனதளவில் ரெடியாகி விடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். படுக்கைக்குப் போகும் போது சாப்பாடு செரித்திருக்க வேண்டும். மனசை பளிச்சென வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆயத்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். கூடுமானவரை இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்குள் புகுந்து கொள்வது நல்லது.

முதல் உறவில் அதி வேகம் காட்டுவதைத் தவிர்க்கவும். அதற்காக சுவாரஸ்யமான தருணங்களை மிஸ் செய்ய வேண்டியதில்லை. வழக்கம் போல உற்சாகமாக ஈடுபடுங்கள். உறவை முடித்த பின்னர் இருவரும் நன்கு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். பிறகு சூடான பால் சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாயாக சிறிது நேரம் படுத்தபடி பேசிக் கொண்டிருங்கள்.

சாதாரணமான முறையில் இல்லாமல் செக்ஸியாக, உறவை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருங்கள். அப்போதுதான் மூடு மாறாது. இப்படியே ஒரு ஒரு மணி நேரம் ஓடட்டும். அதன் பின்னர் அடுத்த உறவுக்குத் தயாராகலாம்.

2வது முறையை வேறு விதமாக செய்ய ஆரம்பியுங்கள். இதனால் உங்களுக்குள் சோர்வு ஏற்படாது, மாறாக புத்துணர்வும், புது அனுபவமும் கிடைக்கும்.

இந்த 2வது உறவு உங்களுக்குள் பெரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பெருத்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் தேவைப்பட்டால், மறுபடியும் ஒரு சின்ன பிரேக், பிறகு சின்னதாக ஒரு முன் விளையாட்டு என்று ஆரம்பித்து தொடருங்கள்…

மிகவும் இளம் வயதினராக இருந்தால் 4, 5 என்று கூட தாண்டிப் போக முடியும். அதுவே நடுத்தர வயதினராக இருந்தால் 2 அல்லது 3 வரை போகலாம். அதற்கு மேலும் முடிந்தால் போகலாம், தவறில்லை. அதேசமயம், உடல் சோர்வையும், வலியையும் மனதில் கொண்டு சற்றே சமர்த்தாக செயல்படுவது நல்லது.

பெண்களைப் பொறுத்தவரை 2 உறவுக்கு மேல் போகும்போது பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்றார் போல திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்களுக்கு முடியும் என்பதற்காக அவரைப் போட்டு பாடாய்ப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். போதிய அளவில் உங்களது துணையின் பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் தன்மை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும்.

விண்டோஸ் 8 சோதனை பதிப்பு இறுதி நாள்

மைக்ரோசாப்ட் தன் புதிய விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனை பதிப்பை மூன்று வகைகளாக, மக்களுக்குத் தந்தது.
Developer Preview, Consumer Preview and Release Preview என இவற்றை அழைத்தது. இவற்றைப் பல லட்சக்கணக்கான மக்கள், உலகெங்கும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தக ரீதியாக மக்களுக்கு அக்டோபர் 26 அன்று, விண்டோஸ் 8 கிடைக்கும் எனவும் மைக்ரோசாப்ட் பின்னர் அறிவித்தது. அப்படியானால், இந்த சோதனை தொகுப்புகளின் அனுமதிக்கப்பட்ட இறுதி நாள் எது? அதற்குப் பின் நம்மால் இதனைப் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
இந்த சோதனை தொகுப்புகள் அனைத்துமே குறிப்பிட்ட நாளில் முடக்கப்படும். இவை இயங்காது. அப்படி முடக்கப்படும் முன்னர், அது குறித்த செய்தி, இவற்றைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் காட்டப்படும். முடக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனில், புதிய உரிமம் பெற்ற விண்டோஸ் 8 தொகுப்பினை வாங்கிப் பதிய வேண்டும். மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள வெவ்வேறு சோதனை தொகுப்புகளின் இறுதி நாட்களை இங்கு காணலாம்.
1. விண்டோஸ் 8 டெவலப்பர் பிரிவியூ இயங்குவது, முதலில் மார்ச் 11, 2012 அன்று முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதனை 2013 ஜனவரி 15 வரை மைக்ரோசாப்ட் நீட்டித்துள்ளது.
2. விண்டோஸ் 8 கன்ஸ்யூமர் பிரிவியூ தொகுப்பின் இறுதி நாள் அதே ஜனவரி 15, 2012 ஆகும்.
3. விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ, ஜனவரி 16, 2013 வரை இயங்கும்.
4. விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் ஆர்.டி.எம். சோதனைத் தொகுப்பினை எப்போது வேண்டுமானலும் இயக்கத் தொடங்கலாம். தொடங்கப்பட்டு 90 நாட்கள் வரை இதனை இயக்கலாம். ஆனால், ஆகஸ்ட் 15, 2013க்குப் பின்னர் இதனை இயக்க முடியாது. 90 நாட்கள் கொண்ட காலத்திற்குப் பின்னர், தானாகவே இதன் இயக்கம் நின்றுவிடும். ஆகஸ்ட் 14, 2013ல் இதனை இயக்கினால், அதன் பின்னர் 90 நாட்கள் இதனை இயக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால், உங்கள் தொகுப்பு என்று வரை உயிரோட்டத்துடன் இருக்கும் என்பதனை அறிய, விண்டோஸ் அழுத்தி, winver என டைப் செய்து என்டர் தட்டவும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பு முடிவிற்கு வந்த பின்னர் என்ன நடக்கும்? உங்களுடைய கம்ப்யூட்டரின் டெஸ்க் டாப் பேக் கிரவுண்ட் கருப்பாக மாறும். உங்களின் வால் பேப்பர் நீக்கப்படும். நீங்கள் இதனை மீண்டும் மாற்றினாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இது நீக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் உரிமம் பெற்ற உண்மையானது அல்ல என்ற செய்தி எப்போதும் திரையில் காட்டப்படும்.
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒவ்வொரு மணிக்கொரு முறை நிறுத்தப்படும். இதனால், நீங்கள் மேற்கொண்ட வேலை சேவ் செய்யப்படாமல் வீணாகும்.

அக்கவுண்ட்டில் பதியப்படும் கூகுள் தேடல்கள்

கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களையும் இனி கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்து வைக்கப்படும். அனைத்து பிரவுசர் வழியாகவும், அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன.
இதுவரை கூகுள் சாதன தேடல்கள் அனைத்தும் குக்கீகளாக, ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குக்கீ பைல்களை, நீங்கள் சிகிளீனர் மற்றும் பிற அது போன்ற புரோகிராம் மூலம் நீக்கும் போது, அந்த தேடல்கள் கிடைக்காது. ஏற்கனவே தேடப்பட்ட தேடல்கள் வேண்டும் எனில், இதற்கென கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதே கம்ப்யூட்டரில், வேறு ஒரு பிரவுசரில் தேடல்களை மேற்கொள்கையில் கூட, இவை கிடைக்காது. அப்படிக் கிடைக்கும் வகையில் செட்டிங்ஸில் மாற்றங்ளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்னை இனி இருக்காது. கூகுள் சென்ற வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நம் தேடல்கள் அனைத்தும் நம் கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்யப்பட்டு, நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறை அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்து, நாம் கூகுள் தேடல்களை மேற்கொள்கையில், தேடல்கள் அனைத்தும் அக்கவுண்ட்டில் சேவ் செய்யப்படுகின்றன. இவை அடுத்த முறை, வேறு ஒரு பிரவுசர் வழியாக தேடல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அப்போதும் அவை அக்கவுண்ட்டில் சேவ் செய்யப்பட்டதிலிருந்து கிடைக்கின்றன. அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்யப்படாமல் தேடல்களை மேற்கொண்டாலும் இவை கிடைக்கும். https://www.google.com/preferences என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இவை கிடைக்கும். இந்த தளத்தில், Safe Search filter மாற்றலாம். ஒரு பக்கத்தில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். பெர்சனல் தேடல்கள், தடை செய்யப்பட்ட தள முகவரிகள் குறித்தும் செட் செய்திடலாம்.
இது போல தேடல்களை கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்து, பின்னர் மீண்டும் விரும்புகையில் கிடைக்கும்படி செய்திட வேண்டும் என்பது, கூகுள் வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வெகு நாள் விருப்பமாகும். இந்த விருப்பத்தினை கூகுள் தளம் நிறைவேற்றியுள்ளது.

நண்பனே… நண்பனே…

 

சிறுத்தையும் நாயும் நட்பு பாராட்ட முடியுமா? நாயை பார்த்தாலே ஓடிவந்து இரண்டாக பீறிப்போடும் சிறுத்தை, இங்கே படத்தில் நாயுடன் சாதுவாக படுத்திருக்கிறது. காரணம், நட்பு.

dog siruthai விலங்கியல் நிபுணர் ரிச்சர்டு புருக்கர் தான் இந்த நாயையும் சிறுத்தையையும் ஒருசேர வளர்க்கிறார். இரண்டும் அவர் எங்கே போனாலும் அவர் பின்னாலேயே போகின்றன. அதுமாதிரி காலை நேரத்தில் தனது எஜமானருடன் அவரது எஸ்டேட்டில் வாக்கிங் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றன.

ரிச்சர்டு தனது நாய்க்கு டாமி என்றும், சிறுத்தைக்கு சலாதி என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். இவர்களில் டாமி ஆண். சலாதி பெண்.

இந்த சிறுத்தை குட்டியாக இருக்கும் போது தாயில்லாத நிலையில் அனாதையாக மிருககாட்சி சாலை வந்து சேர்ந்தது. அதனால் அதை வளர்க்கும் பொறுப்பு விலங்கியல் நிபுணர் என்ற முறையில் ரிச்சர்டு கைக்கு வரவே, அப்போதே சிறுத்தைக் குட்டியின் கார்டியன் ஆனார். அப்போது நாய் டாமி ஒருவயதுக் குட்டியாக நல்ல உயரத்திலும் சிறுத்தைக்குட்டி பூனை சைசில் சின்னதுமாய் இருந்தது. இப்போது 10 மாதமாகி விட்ட சிறுத்தை நாயை விட இரண்டு மடங்கு பெரிதாகி விட்டாலும் நாய்க்கு அது குட்டிச் சிறுத்தை தான். சாப்பாட்டு நேரத்தில் கூட இந்த நண்பர்கள் இணைபிரியாமல் காணப்படுகிறார்கள்என்பது விலங்கியல் பாச சரித்திரம்.