பக்க எண்ணை விருப்பப்படி அமைக்க

நாம் உருவாக்கும் ஆவணங்களில், பக்க எண்களை அமைப்பதில், வேர்ட் நமக்கு எளிய சில வளைந்து கொடுக்கும் வழிகளைத் தருகிறது. நம் ஆவணங்களில், குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து, குறிப்பிட்ட எண் அல்லது முதல் எண்ணிலிருந்து தொடங்க நாம் எண்ணலாம். எடுத்துக் காட்டாக, நம் ஆவணத்தின் தொடக்கத்தில், அந்த ஆவணத்தில் கூறப்படும் பொருள் குறித்த அறிமுக விளக்கம் இரு பக்கங்களில் இருக்கலாம். எனவே நாம், மூன்றாவது பக்கத்தை ஆவணத்தின் தொடக்க நிலையாகக் கொண்டு, மீண்டும் பக்கம் ஒன்று எனத் தொடங்க திட்டமிடலாம். இதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

வேர்ட் 2007ல்:


1. டாகுமெண்ட்டைத் திறந்து, எங்கு மீண்டும் முதல் எண் தொடங்க வேண்டுமோ, அந்த பக்கத்தில், அந்த இடத்தில் கர்சரை வைத்துக் கொள்ளவும்.
2. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Page Setup குரூப்பில் Breaks என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Next Page என்பதில் கிளிக் செய்திடவும்.
3. உங்கள் டாகுமெண்ட்டில் section break தோன்றும். அதனைத் தொடர்ந்து கிடைக்கும் டெக்ஸ்ட், புதிய பக்கத்தின் தொடக்கத்தில் இருக்கும்.
4. இனி ரிப்பனில் Insert டேப்பினைக் காட்டவும்.
5. புதிய பக்கத்தில் இன்னும் உங்கள் கர்சர் இருக்க வேண்டும். நீங்கள் கொடுத்த செக்ஷன் பிரேக் அடுத்து இது இருக்கும். அடுத்து Header & Footer குரூப்பில் Page Number என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Format Page Numbers என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Page Number Format என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், Page Numbering என்ற பிரிவில், Start At என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதில், இருக்க வேண்டிய பக்க எண்ணைத் தரவும். அடுத்து ஓகே கிளிக் செய்து, Page Number Format டயலாக் பாக்ஸை மூடவும்.
நீங்கள் பயன்படுத்துவது முந்தைய வேர்ட் புரோகிராமாக இருப்பின், கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. எந்த பக்கத்தில், எந்த பகுதியிலிருந்து புதிய பக்க எண்ணைத் தர வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை அமைக்கவும்.
2. அடுத்து Insert மெனுவில் Break என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இங்கு Break டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. அடுத்து Next Page ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. இதன் பின்னர், ஓகே கிளிக் செய்திடவும்.
5. இதனைத் தொடர்ந்து, கர்சர் அமைத்த இடத்திலிருந்து உள்ள டெக்ஸ்ட் புதிய பக்கத்தில் காட்டப்படும். இவ்வாறு கிடைத்தவுடன் Insert மெனுவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Numbers டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
6. அடுத்து Format பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து வேர்ட் Page Number Format டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. இந்த டயலாக் பாக்ஸில், Page Numbering என்ற பிரிவில், Start At என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதில், இருக்க வேண்டிய பக்க எண்ணைத் தரவும். அடுத்து ஓகே கிளிக் செய்து, Page Number Format டயலாக் பாக்ஸை மூடவும்.
8. அடுத்து ஓகே கிளிக் செய்து, Page Number Format டயலாக் பாக்ஸை மூடவும்.

%d bloggers like this: