Monthly Archives: மார்ச், 2014

அரசியல் காமெடி

TA1

Continue reading →

நல்லது நடக்கட்டும்!-மார்ச் – 31 யுகாதி

தமிழகம் மற்றும் ஆந்திராவில், முன்பு, சித்திரை முதல் நாளே, புத்தாண்டு தினமாக, கொண்டாடப்பட்டு வந்தன. சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு, இவை கணிக்கப்பட்டன. காலப்போக்கில், தெலுங்கு மக்கள், சூரியனின் சஞ்சாரப் படி கணித்ததால், தெலுங்கு புத்தாண்டு தினத்தில், சிறு மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, மார்ச் கடைசியில் இருந்து, ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள், தெலுங்கு புத்தாண்டுக்குரிய நாள் வருகிறது.
சித்திரை மாதம், சமஸ்கிருதத்தில், ‘சைத்ர’ என, அழைக்கப்படுகிறது. தெலுங்கு புத்தாண்டை, ‘சைத்ர சுத்தம்’ என்றும், ‘யுகாதி’ என்றும் கூறுவர். இதை, யுகம் + ஆதி என, பிரிப்பர். ‘யுகம்’ என்றால், புதிய காலம்; ‘ஆதி’ என்றால், ஆரம்பம். அதாவது, புதிய காலம் ஆரம்பம் என்று, பொருள்.

Continue reading →

நன்றி மறப்பது நன்றன்று!

மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை.
அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், ‘உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!’ என்றனர்.

Continue reading →

இப்படி நடத்தலாமே எலெக்‌ஷன்

T1

Continue reading →

வேர்ட் டிப்ஸ்-கிழமையினை டைப் செய்திட:

 

கிழமையினை டைப் செய்திட: வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல்

Continue reading →

டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா?

நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don’t worry — it’s a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி” என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?

Continue reading →

வாழை இலையில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

oaytz3328

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

Continue reading →

செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள்!!!

செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ" என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது. செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள்

Continue reading →

எவ்வளவு நேரம் என் கம்ப்யூட்டர் இயங்கியது?

சிலர் தங்களுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு நேரமாய் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய ஆசைப்படுவார்கள். கம்ப்யூட்டரை வாடகைக்குப் பயன்படுத்தக் கொடுப்பவர்களுக்கும் இந்தத் தேவை ஏற்படும். இதனை அறிந்து கொள்ளச் சில வழிகள் உள்ளன. அவற்றைக் காணலாம்.
1. முதல் வழி: டாஸ்க் மானேஜர் (Task Manager) வழியாக: டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Task Manager என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Performance என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இகக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலதுபக்கமாக uptime என்று ஒரு வரி காட்டப்பட்டு, அதில் இறுதியாகப் பூட் செய்யப்பட்ட நேரத்திலிருந்து இது வரை எவ்வளவு நேரம் என்பது

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தனிக் குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+ End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் கீ: எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.
பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும். அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம். இதற்கான வழிகள்:
1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும்.
2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவும். என்டர் அழுத்திய பிறகு கர்சர் எங்கும் செல்லக் கூடாது எனில், இதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.
4. என்டர் அழுத்திய பின்னர், கர்சர் எங்கேனும் செல்ல வேண்டும் என எண்ணினால், டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின்னர் அருகே உள்ள கீழ்விரிமெனுவிற்கான அம்புக் குறியினை அழுத்தி, அதில் உள்ள கீழே, மேலே, வலது மற்றும் இடது (Down, Up, Right or Left) என உள்ளதில் எந்தப் பக்கம் கர்சர் செல்ல வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் அமைத்தபடி, டேட்டா என்டர் செய்திடுகையில், என்டர் கீ அழுத்தும்போது, கர்சர் நகர்த்தப்படும்.