Monthly Archives: ஏப்ரல், 2014

ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை

ஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு

Continue reading →

ஸ்வஸ்திக் ஆசனம்

1 feet forward to sitting down to 1 1/2 feet of space to extend.

கீழே உட்கார்ந்து கால்களை முன்னோக்கி 1 முதல் 1 1/2 அடி இடைவெளி விட்டு நீட்ட வேண்டும். முதலில் இடது காலின் முட்டியை மடக்கி வலது காலின் உள் தொடையில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும். வலதுகாலின் முட்டியை மடக்கி இடது காலின் உள்தொடையில் பாதி படும்படி வைக்க வேண்டும். இரண்டு கால் மூட்டுகளின் மேல் கைகளை வைத்து தியான முத்திரை நிலையில் இருக்க வேண்டும். முதுகும், கழுத்தும் தலையும் நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நிதானமாக மூச்சை உள்வாங்கி மெதுவாக வெளிவிட வேண்டும். இவ்வாசனம் செய்யும் முன் மலம், சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும்.

பயன்கள்

உடலில் வெப்பநிலையைச் சீராக்கி புறச் சூழ்நிலைக்கேற்ப மூச்சுக்காற்றை நிதானமாக உள்வாங்கி வெளியிடுவதால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படும். தசைகளின் இறுக்கம் குறைந்த நல்ல நிலைக்கு வரும். மன எண்ணங்கள் ஒருமைப்படும். முதுகுத் தண்டுவடத்தில் வலிகள் இருந்தால் அவை நீங்கும். இது இடுப்புக்குச் சிறந்த ஆசனமாகும். நாசிப்பகுதி சுத்தம் அடைந்து, நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு அதிகமாகும். இதனால் இரத்தம் சுத்தமடையும். உள்ளுறுப்புகள் பலப்படும். நினைவாற்றலைத் தூண்டும். இந்த ஆசன நிலையில் முத்திரைகளை கடைப்பிடிப்பதால் இதயத் துடிப்பு சீராக இருக்கும். மன அழுத்தம், மன உளைச்சல் நீங்கும். இதய நோயாளிகளும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாசனம் செய்வது நல்லது. சிறுவர் முதல் பெரியவர் வரை செய்யும் எளிய யோகாசன முறை தான் இந்த ஸ்வாஸ்திகாசனம். இதனை தினமும் இருமுறை செய்து வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

எதற்காக விண்டோஸ் ரீபூட் கேட்கிறது?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப் படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.
பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில் இருக்கையில், அதன் சிஸ்டம் பைல்களை மாற்றி அமைக்க முடியாது. அந்த பைல்கள் எல்லாம், செயல்பாட்டில் வளைக்கப்பட்டிருக்கும். அவை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள இயலாது.
1. ரீபூட் என்ன செய்கிறது?: விண்டோஸ் இயக்கம் செயல்பாட்டில் உள்ள பைல்களை அப்டேட் செய்திடவோ அல்லது நீக்கவோ முடியாது. விண்டோஸ் அப்டேட் செயல்பாடு, புதிய அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடுகையில், நேரடியாக, விண்டோஸ் இயக்கத்தில் அதனைச் செயல்படுத்த இயலாது. இயக்கத்தில் இருக்கும் சிஸ்டம் பைல்களில் எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள இயலாது. எனவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுத்தி மீண்டும் இயக்கினால் தான், அவை தானாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும். ரீபூட் இதனைத்தான் செய்கிறது.
சில வேளைகளில், பைல்களை நீக்கும் போதும் ரீபூட் தேவைப்படுகிறது. சில வகையான சாப்ட்வேர் தொகுப்புகளை அப்டேட் செய்திடுகையில் அல்லது

Continue reading →

முள்ளும் குறடும்!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது.

எக்ஸெல் டிப்ஸ்

எந்த செல்லில் கர்சர் உள்ளது?: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டி ருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு, செயல்படும் அந்த செல் உள்ளது என்று அறியாமல், ஸ்குரோலிங் பார் அல்லது அம்புக் குறி கீகளை அழுத்தியவாறு தேடுவோம்.
இந்த பிரச்னைக்கு ஒரு சிறிய தீர்வு ஒன்று உள்ளது. ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சற்று சுற்றுவழி. உங்களுக்கு நீங்கள் இருந்த செல் அட்ரஸ் அல்லது அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால், [Ctrl]+G கீகளை அழுத்தி, பின்னர் செல் எண் அல்லது பெயர் டைப் செய்து என்டர் அழுத்த, அந்த செல் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும், செல்லின் எண் அல்லது பெயரை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அந்த சூழ்நிலையில், கண்ட்ரோல்+பேக் ஸ்பேஸ் அழுத்துங்கள். ஜில் என்று, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
இதனைச் செயல்படுத்த, நீங்கள் கர்சரை வைத்திருக்கும் செல், மானிட்டர் திரையில் இருக்கக் கூடாது. அப்போதுதான், அந்த செல் கிடைக்கும்படி, மானிட்டரில் திரைக் காட்சி மாற்றப்படும். கர்சர் இருக்கும் செல், மானிட்டர் திரையில் இருந்தால், நீங்கள் கண்ட்ரோல் மற்றும் பேக் ஸ்பேஸ் அழுத்துகையில், திரைக் காட்சி அப்படியே தான் இருக்கும். ஏனென்றால், அந்த செல் தான் உங்கள் முன் காட்டப்படுகிறதே.

Continue reading →

சுவாமி வம்பானந்தா–குமுதம் ரிப்போர்ட்டர் 4.5.2014

V1

Continue reading →

பழங்களின் பலன்கள்

அத்திப்பழம்.

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து

Continue reading →

வேர்ட் டிப்ஸ்-வேர்டில் எண்களை எழுத்தால் எழுத

வேர்டில் எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்-வேர்டில் ரூலர்:

வேர்டில் ரூலர்: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் போது, அந்த விண்டோவில் மேலாக, ரூலர் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, நாம் டாகுமெண்ட்டின் பார்மட்டிங் விஷயங்களை சரி செய்திடலாம். பக்கங்களைச் சீராக அமைக்கலாம். குறிப்பாக மவுஸ் பயன்படுத்தி இயக்குகையில் இதன் பயன்பாடு அதிகம்.
அதே நேரத்தில், இந்த ரூலர், வேர்ட் விண்டோவில் காட்டப்பட வேண்டுமா என்பதனையும் நீங்கள் முடிவு செய்திடலாம். இதனை மேற்கொள்ள, ரிப்பனில் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Show குரூப்பில் Ruler செக் பாக்ஸ்ஜ் பார்க்கவும். இந்த செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால், ரூலர் காட்டப்படும். டிக் அடையாளத்தை நீக்கிவிட்டால், ரூலர் மறைந்துவிடும்.

Continue reading →

பெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்

உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசிப்பவர்களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் சரியான

Continue reading →