Daily Archives: ஏப்ரல் 1st, 2014

‘பருவநிலை மாற்றம்: கடும் வெயில், குடி நீர் பற்றாக்குறையை சந்திக்கப்போகும் இந்தியா, சீனா!’

புதுடெல்லி: கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்க தயாராக வேண்டும் என்றும், ஆசியா கண்டத்தை பொறுத்தவரை இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடும் வெயில் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என ஐ.நா. அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா. கமிட்டி, தனது அறிக்கையை இன்று வெளியிட்டது.
இந்த அறிக்கையில், "இந்த நூற்றாண்டின் மத்தியில் ஆசியா கண்டத்தை பொறுத்த வரையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் மிகக்கடுமையான வெயிலை மட்டுமல்லாது குடிநீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் உணவு தானியங்களுக்கும் பற்றாக்குறை ஏற்படும்.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் வறட்சி ஏற்பட்டால் உருவாகும் தண்ணீர் மற்றும் உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.

Continue reading →

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் – ஜாலி பகிர்வு

எப்படி ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று ஆக்கினார்கள் என்பதைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. கிரிகோரியன் காலண்டருக்கு மாறாமல் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிய பிரெஞ்சு காரர்களை கிண்டல் செய்ய அந்த விழா உண்டானது என்று சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் உறுதியாக  இல்லை. மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது. கவனமாக படியுங்கள் :

ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி

Continue reading →

குறைந்த பட்ச பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு!

மும்பை: வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை வைக்க தவறினால், அதற்காக அபராதம் விதிக்கக்கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
2014-15ஆம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டுப் பேசுகையில் இதனை தெரிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வாடிக்கையாளரின் கவனக் குறைவை வங்கிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கூடாது என்றும்,  வாடிக்கையாளர்களின் மீது அபராதம் விதிக்க வங்கிகளுக்கு எந்த ஒரு அனுமதியும் கிடையாது என்றும் கூறினார்.

Continue reading →

என் உடல் என் உரிமை

V1

Continue reading →