Daily Archives: ஏப்ரல் 3rd, 2014

கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?

Continue reading →

பெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை

நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களின் திறனோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்ள நமக்கு உதவும் பெஞ்சமார்க் பயன்பாடு (benchmarking utilities) புரோகிராம்கள் பல நமக்குக் கிடைக் கின்றன. அவற்றில் ஐந்து புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம்.
1. எவரெஸ்ட் அல்ட்டிமேட் எடிஷன் (Everest Ultimate Edition): இந்த புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றின் பெஞ்ச்மார்க் திறன் சோதனை நடத்துவது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் குறித்த வேறு பல பொதுவான தகவல்களையும் தருகிறது. கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மதர்போர்ட், ஸ்டோரேஜ் வசதி போன்றவை குறித்தும் நமக்குத் தகவல்களைத் தருகிறது. மெமரி மற்றும் சி.பி.யு.வின் திறன்களையும் தனியே சோதனையிட்டுச் சொல்கிறது. இது தரும் சோதனை அறிக்கையும் பல வடிவில் கிடைக்கிறது. இதனால், நாம் விரும்பும் வகையில், கோணத்தில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு மற்றும் திறன் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் விலை 39.95 டாலர் என்றாலும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இலவசமாகச் சில நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

Continue reading →

கொளுத்தும் வெயிலை வெளுத்துக் கட்டுவோம்!

சித்திரை மாதம் பிறக்கப் போகுறது. நெருப்பை அள்ளி மேலே கொட்டியது போல, கோடை வெயில் தகிக்கும். வெளியில் போக முடியவில்லை; வீட்டுக்குள் இருந்தாலும், வியர்த்துக் கொட்டும். தாங்க முடியாத தலைவலி வேறு பாடாய்படுத்தும். இந்தக் கோடையை, எப்படிச் சமாளிப்பது? பின்வரும் சில முறைகளை கடைபிடித்து வெயிலை சமாளியுங்கள்.
காலையில் எழுந்ததும், பச்சைத் தண்ணீரில் குளியுங்கள். பருத்தி உடை தான், வெயில் காலத்துக்கு ஏற்றது. இறுக்கமாக இல்லாமல், கொஞ்சம் காற்றோட்டமாக அணிந்து கொள்ளுங்கள். காலை சாப்பாடு எளிதாக இருக்கட்டும். இரவில் மிஞ்சிய சோற்றில், தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறும், இட்லி, இடியாப்பம் என்று, வேக வைத்த உணவும் உடலுக்கு நல்லது.

Continue reading →