Daily Archives: ஏப்ரல் 4th, 2014

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி பிஎஸ்எல்வி – சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டா: கடல் வழி ஆராய்ச்சி மற்றும் தரைவழி வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஐஆர்என்எஸ்எஸ் 1பி செயற்கைகோளுடன், பிஎஸ்எல்வி சி24 ராக்கெட் இன்று மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியாவுக்கென பிரத்யேகமான நேவிகேஷன் அமைப்பை உருவாக்கும் திட்டத்தின் மூலம், 7 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டது.
அதன்படி கடந்த 2013 ஜூலையில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ என்ற செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி 22 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதைதொடர்ந்து ஐஆர்என்எஸ்எஸ் 1பி செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி24 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 58 மணி நேரம் 30 நிமிட கவுன்டவுன் நேற்று முன்தினம் 6.44 மணிக்கு துவங்கியது.
மொத்தம் 1432 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பி என்ற செயற்கைகோளுடன் இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி-சி24 ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பி செயற்கை கோளை புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தியது. இதில், எல்5 பேண்ட்,  எஸ்.பேண்ட், சி.பேண்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. 1660 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் வகையில் சோலார் வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
இந்த செயற்கைகோள் இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான், கடல் வழிப்பாதைகளை அறிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும். அதேபோல தரையில் செல்லும் வாகன போக்குவரத்தை சுலபமாக கண்காணிக்க முடியும். புவிசார் தகவல்களை பதிவு செய்யவும், வரைபடங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த செயற்கை கோளால் 1500 கி.மீ சுற்றளவுக்கு கடலை துல்லியமாக கண்காணிக்க முடியும். பிஎஸ்எல்வி சி24 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ராதாகிருஷ்ணன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசியபோது, இது இந்தியாவின் இரண்டாவது பிரத்யேகமான நேவிகேஷன் அமைப்பை உருவாக்கும் திட்டம் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஒரு சமூக நோய்

பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

Continue reading →

தலைவலியைத் தெரிந்துகொள்வோம்

அஸ்வினுக்கு இருபத்து மூன்று வயது, சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரில் வீடு திரும்பும்போது, திடீரென்று இடது கண்ணின் ஓரம் மின்னலைப் போல் ‘ப்ளிச்’ சென்று வெளிச்சம் வெட்டியது. மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போல் ஒளித் துகள்கள் கண் முன் வட்டமிட்டன. காரை ஓரமாக நிறுத்தி, கண்களைச் சிறிது கசக்கிக்கொண்டான். ஒளிப்புள்ளிகள் சிறிது மறைந்ததுபோல் இருந்தது.

Continue reading →