Daily Archives: ஏப்ரல் 6th, 2014

ஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்.. பெண்களுக்கோ ‘எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட்’தான் வேணுமாம்!

செக்ஸில் ஒவ்வொருவருக்கும், அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படியெல்லாம் டேஸ்ட் இருக்கிறது என்பதை ஒரு சர்வே நடத்தி சொல்லியுள்ளனர். அதில் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி கழியாத பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம். அதேசமயம், பெண்களோ, புதியவர்களை விட அனுபவம் மிக்க ஆண்களைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். அனுபவம் அவசியம் மச்சான்…

Continue reading →

அதிகமா வியர்குதா? அதை தடுக்க இதோ சில வழிகள்!!!

எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக் கொள்வார்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த வியர்வையானது டியோடரண்ட்டின் நறுமணத்தை போக்கி, துர்நாற்றத்தை

Continue reading →

பழங்கள் அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு இதய நோய் குறைவு

அமெரிக்கா: அமெரிக்காவில் இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பெண்களுக்கு இதய நோய்கள் உருவாகும் ஆபத்து குறைவு என்று கூறுகின்றனர். 20 வருடங்களுக்கு பின்னர் ஒப்பிடும்போது பழங்கள் அதிகம் உண்ணும் பெண்களுக்கு குறைந்த பிளேக்-அதிகரிப்பு தன்மைகள் தமனியில் உருவாகின்றன. இதனால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தவிர்க்கமுடியும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

Continue reading →

சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டீர்களா? இதையும் படித்துவிட்டு செல்லுங்கள்….

உங்கள் பணம், ‘செக்’ மற்ற டாக்கு மென்ட்ஸ், உடைகள் அனைத்தும் ஒரே பெட்டியில் வைக்காமல், பிரித்து வைக்கவும்.
* நாம் போகும் இடத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ற வகையில், உடை இருக்க வேண்டும். பெண்கள் உடை விஷயத்தில், சில விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளலாம். ஏனென்றால், புடவை பல இடங்களில் அசவுகரியமாக இருக்கும். சுடிதார், குர்த்தா, ஜீன்ஸ் போன்றவை, சவுகர்யமாகவும் இருக்கும். இரண்டு வாரங்கள் டூர் செல்வதென்றால், பதினைந்து, ‘செட்’ டிரஸ் எடுத்துச் செல்ல வேண்டாம். இடையில் எங்காவது தங்குமிடத்தில், வாஷிங் மெஷினிலோ அல்லது அறையிலோ, துணிகளைத் துவைத்துக் கொள்ளலாம். அதனால், ஒரு சோப்பு மற்றும் பிரஷை கூடவே எடுத்துச் செல்லுங்கள்.
* அனைத்து ஓட்டல்களிலும் சோப்பு, ஷாம்பூ இருந்தாலும், அவை சில சமயம், நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, வீட்டிலிருந்தே நீங்கள் உபயோகிக்கும், ‘பிராண்டை’ எடுத்துச் செல்லுங்கள்.
* நம் உணவுப் பழக்கத்தை மாற்றுவது சிரமமான காரியம் தான். மாற்றிக்

Continue reading →

இணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா

நீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். கொலை கொலையா முந்திரிக்கா என்று கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி நாம் அறியாமல் நம் பின்னால், துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் அறியாமல் நமக்குத் தூண்டில் போட்டு, நம்மைப் பற்றிய தகவல்களைப் பெறும் இந்த இணைய விளையாட்டினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
சில வகை தகவல் சேகரிப்பு வெளிப்படையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இணைய தளங்களில் நீங்கள் லாக் இன் செய்திடுகையில், நீங்கள் யார் என்பதனை அது அறிந்திருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து, முழுமையான உங்கள் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்கின்றனர் என்பதுதான் நாம் எண்ணிப் பார்த்து, உஷாராக வேண்டிய ஒன்று.
பொதுவாக விளம்பரங்களுக்கான வலைப்பின்னல்களில், விளம்பரங்களைக் குறிவைத்து, உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். ஏதேனும் ஒரு வர்த்தக இணைய தளத்தில் நுழைந்து, வர்த்தகம் குறித்த விளம்பரங்களை, தொடர்பு தரும் இணைய தளங்களில் பார்த்தாலும், நம்மைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும்.

ஐ.பி. முகவரிகள்: உங்களை விரைவில் எளிதாக அடையாளம் காட்டுவது உங்கள் ஐ.பி. முகவரி தான்.இணையத்தில், உங்கள் ஐ.பி. முகவரி, உங்களை

Continue reading →