Daily Archives: ஏப்ரல் 7th, 2014

பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வருமாறு:-

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று டெல்லி யில் வெளியிடப்பட்டது அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

* நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்பு செய்யப்படும். ‘ஒரே இந்தியா-பெரிய இந்தியா’ என்ற நிலை ஏற்படுத்தப்படும்.

* நாட்டில் புதிய வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறு பான்மை மக்கள் கல்வி, தொழிலில் முன்னுரிமை பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும்.

Continue reading →

‘ஆட்டிசம்’ பாதித்தவர்களுக்கு தனித்திறன் உண்டு

‘ஆட்டிசம்’ பாதித்தவர்களிடையே காணப்படும் வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய தனித்திறன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என உறுதியேற்போம்!
தற்போது மக்கள் மத்தியில் தெரிந்த பெயராக இருந்த போதிலும், புரிந்துக் கொள்ளப்படாத விஷயங்களில், ‘ஆட்டிசமும்’ ஒன்று. தமிழில், இந்நோய் தாக்கியவர்களை, புற உலக சிந்தனை அற்றவர்கள் என்று அழைக்கிறோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில், (0-2) நரம்பு மண்டலத்தில் ஏற்படக் கூடிய, சில வேறுபாடுகளின் தொகுப்பில் உருவானது தான், இந்த புற உலக சிந்தனை அற்ற நிலை. இவர்கள் பேசுவது, தவழ்வது, நடப்பது போன்ற வளர்ச்சி நிலைகளை, சராசரி குழந்தைகள் போல் எட்டும் தருணத்தில்
* தாயின் முகத்தை நோக்காமல் இருத்தல்
* மழலை பேச்சு தன்மையை இழத்தல்
* உணர்வுகளின் வேறுபாடுகளை வெளிப்படுத்தாமலிருப்பது
இத்தகைய மாற்றங்களால், இந்த குழந்தைகள், 3 வயதிலிருந்து, 5 வயதை எட்டும் போது, பின் வரும் துறைகளில் குறைபாடு உடையவர்களாக காணப்படுகின்றனர்.
* தகவல் பரிமாற்றம் (புரிதல், வெளிப்படுத்தல்)
* சமூக பரிமாற்றம்
* கற்பனை வெளிப்பாடு
காரணங்கள்: எத்தனையோ தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், மேற்கூறிய காரணங்களுக்கு, இன்று வரை நமக்கு, விடை கிடைக்கவில்லை.

Continue reading →

போவோம் மலம்புழா அணை!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.
கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.

Continue reading →

எக்ஸெல்: பிறந்த தேதிகளைக் கையாளுதல்

எக்ஸெல் ஒர்க் புக்கில், சில வேளைகளில், தேதிகளை, மாதங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படலாம். இவற்றை ஒரு குறிப்பிட்ட நெட்டு வரிசையில் அமைக்க விருப்பப்படலாம். எடுத்துக்காட்டாக, உங்களிடம் பலரின் பிறந்த நாள் குறித்த தகவல்கள் இருக்கலாம். இவற்றை மாதங்களின் அடிப்படையில் பிரித்து வைத்தால், ஒரு மாதத்தில் பிறந்தவர்கள் யார் யார் என அறிந்து கொள்வது எளிதாக இருக்கலாம், அல்லவா?
இதற்கான எளிய வழி ஒன்றை முதலில் பார்க்கலாம். உங்கள் டேபிளின் இறுதியில் புதிய நெட்டு வரிசை ஒன்றை உருவாக்குங்கள். இந்த வரிசையை "Birth Month" அல்லது "Month” எனப் பெயரிடுங்கள். Column B யில், பிறந்த நாட்கள் பதியப்பட்டிருந்தால், Column C யை புதிய காலமாக அமைக்கவும். இதில் மாதங்களுக்கான பார்முலாவாக =MONTH(B3) எனக் கொடுக்கலாம். இந்த பார்முலா cell C3 யில் இருக்கும். ஆனால், அதே பார்முலா Column C யின் அனைத்து செல்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். முடிவு என்னவாகும் என்றால், Column C யில், 1 முதல் 12 வரை எண்கள் இருக்கும். பின்னர், இதனை சார்ட் செய்து, அனைத்தையும் மாத வாரியாக அமைத்துக் கொள்ளலாம்.

Continue reading →

முடியை பிடிங்குவது நல்லதா… கெட்டதா…?

தேவையற்ற ரோமத்தை பிடுங்கி எடுப்பதற்கு உதவும் கருவி தான் டிவீசர். இதை கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை பிடிங்கி விடுவார்கள். பொதுவாக புருவம், கன்னம், மேல் உதடு, தாடை ஆகிய இடங்களில் உள்ள தேவையற்ற முடியை பெண்கள்

Continue reading →