Daily Archives: ஏப்ரல் 8th, 2014

மிஸ்டர் கழுகு -ஜூனியர் விகடன் 06.04.2014

k1

Continue reading →

மீனம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ஜூன் 13–க்கு மேல் சுகங்களும், சந்தோஷங்களும் கூடும் வருடம்!

தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து சமுதாயத்தில் புகழோடு வாழும் மீன ராசி நேயர்களே!

விஜய வருடம் முடிந்து ஜய வருடம் தொடங்குகிறது. வருடம் தொடங்கும் பொழுதே வக்ர நிவர்த்தியாகி வியாழன் சஞ்சரிப்பது யோகம் தான். 2, 9–க்கு அதிபதி செவ்வாயும், பஞ்சம ஸ்தானாதிபதி சந்திரனும் இணைந்து உங்கள் ராசியைப் பார்த்தபடி ஹஸ்தம் நட்சத்திரத்தில் புத்தாண்டு வருகிறது.

அஷ்டமத்து சனியும் வக்ரம் பெற்றிருக்கிறார். அப்புறமென்ன, புத்தாண்டு பொன் கொழிக்கும் ஆண்டாக அமையப் போகிறது. மண், மனை சேர்க்கை, மக்கள் செல்வங்களின் கல்யாண வாய்ப்பு, தொழில் நிலைய திறப்பு விழா என்று ஒவ்வொரு காரியமாக நடைபெற்று உள்ளத்தில் மகிழ்ச்சியை வழங்கும்.

யோகங்கள்

சந்திர மங்கள யோகம் இருப்பதால் குடும்பத்தில் ஆண்டு முழுவதும் சுப விரயம் அதிகரிக்கும். அப்படிச் செலவானாலும் கூட அதற்கு ஏற்ற விதத்தில் வரவு வந்து கொண்டேயிருக்கும். புத்தாண்டு தொடக்க நாளில் புதன் நீச்சம் பெறுகிறார். 4, 7–க்கு அதிபதியும் நீச்சம் பெறுகிறார்.

கேந்திராதிபத்ய கிரகம் நீச்சம் பெறும் பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். பணிகளிலிருந்த தொய்வு அகலும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் கைகூடினாலும், ஒரு சில காரியங்களில் தாமதங்கள் ஏற்படலாம். குறிப்பாக மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரலாம்.

உங்கள் ராசிநாதன் குரு. ஆனால் அதற்கு பகை கிரகமான சுக்ரன் களத்திரகாரகன் என்பதால் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது நல்லது. 

இரண்டில் கேது இருப்பதால் வாக்கு கொடுக்கும் முன் ஒருகணம் யோசிப்பது நல்லது. பார்க்கும் தொழிலில் படபடப்பும், பரபரப்பும் கூடும். நாட்பட்ட நோய்கள் உடலில் இருந்து அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

சூரியன் நீச்சம் பெறுவதால் தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி சிலருக்கு மாற்றம் வரலாம்.

பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை அடைய வேண்டிய விதத்திலேயே குருப்பெயர்ச்சி வரை கிரகங்களின் இயக்கம் இருக்கிறது. பொதுவாக உங்கள் ஜாதகத்தை புத்தாண்டு ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ராசிநாதனின் சஞ்சாரம், அதைப் பார்க்கும் கிரகம், அதோடு இணைந்து சஞ்சரிக்கும் கிரகம், வருடத் தொடக்கம் முதல் வருடக் கடைசி வரை உலா வரும் கிரகங்களின் உன்னத மாற்றம் இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்து, புது முயற்சிகளில் நாம் ஈடுபடுவது நல்லது

எப்படியிருக்கும் இந்த ஜய வருடம்?

Continue reading →

கும்பம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)

வாழ்க்கைத்  தேவைகள்  பூர்த்தியாகும்  வருடம்!

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் கும்ப ராசி நேயர்களே!

விஜய வருடம் முடிந்து ஜய வருடம் தொடங்கிவிட்டது. குருவின் பார்வையோடும், அஷ்டமத்தில் செவ்வாய், சந்திரன் ஆதிக்கத்தோடும், ராசிநாதனின் வக்ர இயக்கத்தோடும் பிறக்கும் இந்தப் புத்தாண்டு நமக்கு எப்படி அமையப் போகின்றதோ என்ற சிந்தனை, வருடம் தொடங்குவதற்கு ஒருமாதம் முன்னதாகவே வந்து கொண்டேயிருக்கும்.

கிரகநிலை

பொதுவாக ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டம ஸ்தானம் வலுப்பெறுகிறது. அஷ்டமாதிபதி நீச்சம் பெறுகிறார். எனவே, வரவும், செலவும் சமமாகவே இருக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் மனநிம்மதி சற்று குறைவாகவே இருக்கும்.

அஷ்டமாதிபதி வலுவிழந்திருப்பது ஒரு வகைக்கு நன்மை தான். அதே நேரத்தில் அது பஞ்சமாதிபதியாகவும் இருப்பதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம்.

படித்து முடித்த குழந்தைகளாக இருந்தால் வேலை வாய்ப்பிற்கு செய்த ஏற்பாடுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய், சந்திர சேர்க்கை அஷ்டமத்தில் இருப்பதால் நெருங்கி வந்த வரன்கள் விட்டுப் போகலாம். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வீடுதேடி வரலாம்.

சுக்ர, சனியின் பரிவர்த்தனையால் தந்தைவழி உறவில் அனுகூலம் உண்டாகும். அதே நேரத்தில் 9–ம் இடத்தைப் பார்க்கும் குருவால் உன்னதமான பலன்கள் வந்து சேர வியாழன் தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

எப்படியிருக்கும் ஜய வருடம்?

Continue reading →

மகரம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

குருப்பெயர்ச்சிக்குப் பிறகு  குதூகலம்  பிறக்கும்!

நம்பி வந்தவர்களிடம் அன்பு செலுத்தி ஆதரவு காட்டும் மகர ராசி நேயர்களே!

ஜய வருடம் பிறக்கிறது. சென்ற வருடம் ஆறில் சஞ்சரித்து வந்த குருவால் அல்லல்கள் அதிகம் ஏற்பட்ட நிலை இனி மாறப்போகிறது. வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்ல சுக ஸ்தானாதிபதியாகவும் லாப ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் செவ்வாயும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்கள்.

இதுபோன்ற வக்ர காலத்தில் ஆரோக்கியத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். அன்றாட வாழ்வில் பண நெருக்கடிகளுக்கும் ஆளாகலாம் என்பது பொது நியதி. ஆனால் உங்கள் ராசியைப் பொறுத்தவரை குருவின் பார்வை வருடத் தொடக்கத்தில் 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாவதால் மலை போல் வந்த துயர் பனி போல் விலகும். மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். 

என்ன இருந்தாலும் சனி இரண்டாமிடத்திற்கும் அதிபதியாகிறார். குடும்பம் மற்றும் வாக்கு, தனம் என்று வர்ணிக்கப்படுகின்ற இடங்களுக்கும் சனி அதிபதியாகி வருடத்தொடக்கத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா என்    பது சந்தேகம் தான். நீங்கள் விட்டுக்     கொடுத்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை அடைய முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலை குருப் பெயர்ச்சி வரைதான் என்பதால் வைகாசி 30 வரை வருங்கால நலன் கருதிப் பொறுமையாக கடைப்பிடியுங்கள். யார் என்ன சொன்னாலும் உங்களைப் பற்றி விமர்சித்தாலும், குறை கூறினாலும், வலது காதில் வாங்கி இடது காது வழியாக விட்டுவிட்டு உங்கள் முன்னேற்றத்திலேயே குறிக்கோளாக இருப்பது நல்லது.

சகாய ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியனோடு கேது சேர்ந்திருக்கிறார். பத்தாமிடத்தில் ராகு வீற்றிருக்கிறார். எனவே ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படலாம். நல்லதும் கெட்டதும் மாறி, மாறி வந்து கொண்டேயிருக்கும் கிரக அமைப்பு உள்ளது. நினைத்தது நிறைவேறாத போது  கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

எப்படியிருக்கும் ஜய வருடம்?

Continue reading →

தனுசு(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

ராகு–கேது  பெயர்ச்சி  யோகம்  தரும்!

லட்சியம் நிறைவேறும் வரை இரவு பகலாகப் பாடுபடும் தனுசு ராசி நேயர்களே!

வந்துவிட்டது புத்தாண்டு! வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும் விதத்தில் கிரக நிலைகள் உலா வருகின்றன. வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, உங்கள் ராசியையே பார்க்கிறார். தன்வீட்டைத் தானே பார்க்கும் குருவின் பார்வை பலத்தால் பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் குவியப் போகிறது.

எப்படியிருக்கும் இந்த ஜய வருடம்?

Continue reading →

விருச்சிகம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

குரு பார்வை  கோடி  நன்மை  தரும்!

‘வெற்றி’ ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

விஜய வருடம் நிறைவு பெற்று, ஜய வருடம் தொடங்குகிறது. ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். அந்த வெற்றிகளை குவிக்கும் விதத்தில் வரும் ஜெய வருட கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக விளங்குகின்றன. 

வருடத் தொடக்கத்தில் சந்திர மங்கள யோகம், சனி சுக்ர பரிவர்த்தனை யோகம், குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதியும் அமைப்பு, இத்தனைக்கும் மத்தியில் சித்த யோகத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும்.

அன்பு மனதால் அனைவரையும் வசப்படுத்துபவர் நீங்கள். அனைவரின் ரகசியங்களையும் அறிந்து வைத்திருப்பீர்கள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறி நிற்பர். தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மிக்கவர்களாக விளங்கும் உங்களுக்கு வாக்குப்பலிதம் அதிகமாகவே இருக்கும். நிர்வாகத் திறமையும், நிலபுலன்களுக்கு சொந்தக்காரர்களாகவும் விளங்குவீர்கள்.

ராசிநாதனாக விளங்குபவர் ‘தைரியகாரகன்’ என்று அழைக்கப்படும் செவ்வாயாகும்.  தனபஞ்சமாதிபதியாக விளங்கும் குரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உச்சம் பெறுகிறார். அப்படி உச்சம் பெறும் குருவின் பார்வை முதலில் பதிவது உங்கள் ராசியில் தான். எனவே, மிச்சம் வைக்கும்அளவிற்கு பொருளாதார நிலை உயரப் போகிறது. மிகப்பெரிய பொறுப்புகளும், பதவிகளும் கூட உங்களுக்கு வந்து சேரலாம்.

பொன்னான வாய்ப்புகளும், புதிய ஒப்பந்தங்களும் மாபெரும் விருதுகளும் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. புகழ்பெற்ற வி.ஐ.பி.க்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்குமளவிற்கு முன்னேற்றத்தை குருவின் பார்வை வழங்கப்போகிறது. வருடத் தொடக்கத்தில் தொழில் ஸ்தானாதிபதி சூரியனுடன் கேது சஞ்சரிக்கிறார். 12–ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். எனவே, விநாயகப் பெருமானை வழிபட்டு வருவதன் மூலம் வியக்குமளவிற்கு வாழ்க்கை அமையும்.

எப்படியிருக்கும் ஜய வருடம்?

Continue reading →

துலாம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

ஜென்மச் சனி  விலகும்  நேரம்!

நேரம் காலம் பார்த்துச் செய்தால் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!

விஜய வருடம் முடிந்து ஜய வருடம் தொடங்கி விட்டது. தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க, உச்சம் பெற்ற ஜென்மச் சனி வக்ர இயக்கம் காண, சர்ப்ப கிரக மான ராகு–கேதுக்களின் பிடியில் இருந்தபடியே ஜெய வருடம் பிறக்கிறது.

சுக்ரனின் ஆதிக்கம் உங்களுக்கு இருப்பதால் கவர்ச்சிகரமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் ஆகாரங்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதிலும் அதிக பிரியம் கொண்டவர்கள் நீங்கள். இலக்கியம்,கலை,சினிமா என்று ஏதேனும் ஒரு துறையில் ஈடுபாடு கொள்வீர்கள்.

நவக்கிரகங்களில் களத்திர காரகன் என்று வர்ணிக்கப்படுவர் உங்கள் ராசிநாதன் சுக்ரனாவார். குடும்ப ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் செவ்வாயின் பலத்தையும், ராசிநாதன் சுக்ரனின் பலத்தையும் பார்த்தே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

எப்படியிருக்கும் ஜய வருடம்?

Continue reading →

கன்னி(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட,பே, போ உள்ளவர்களுக்கும்)

ஆனி  ஏழு  முதல்  அதிர்ஷ்டம்  அரங்கேறும்!

பழகுபவர்களை எல்லாம் பாசத்தால் வசமாக்கும் கன்னி ராசி நேயர்களே!

புத்தாண்டு ஜய வருடம் பொன்னான எதிர்காலத்தை வழங்கப் போகிறது. எத்தனை நாட்கள் தான் இன்னும் இந்த ஏழரைச் சனி இருக்கும் என்றெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். வருடத் தொடக் கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். வளர்ச்சியைக் கொடுப்பது உங்களுக்கு சனி தான். தளர்ச்சியைக் கொடுப்பதும் சனி தான்.

கிரக நிலைகள்

பொதுவாக வருடத் தொடக்கத்தில் உலா வரும் கிரக நிலைகள் எப்படி வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.  லாபாதிபதி சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தனாதிபதியையும், தன ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். அஷ்டமாதிபதியே வக்ரம் பெற்றுவிட்டார். அப்புறம் என்ன? பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். 

கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன் நீச்சம்பெற்று சஞ்சரிப்பது யோகம் தான். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும்.

சூரியன் கேது சேர்க்கையும், சொல்லைச் செயலாக்கிக் காட்டும். வாக்கு ஸ்தானத்தில் ராகுவின் சஞ்சாரமும் இருப்பதால் எதையும் கொஞ்சம் யோசித்துச் சொல்வது நல்லது.

எப்படியிருக்கும் ஜய வருடம்?

Continue reading →

சிம்மம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

இல்லம்  தேடி  இனிய  செய்தி  வரும்!

சொல்லைச் செயலாக்கிக் காட்டத் துடிப்போடு பணியாற்றும் சிம்ம ராசி நேயர்களே!

வந்துவிட்டது ஜய வருடம், வாழ்வில் இனி ஜெயம் தான் உங்களுக்கு. விரயாதிபதியும், யோகாதிபதியும் இணைந்து பிறக்கும் புத்தாண்டு இது. உங்கள் கனவுகள் நனவாகப் போகிறது. அற்புத பலனை எல்லாம் காணப்போகிறீர்கள்.

என்ன இருந்தாலும் வருடம் பிறக் கின்ற பொழுது தனாதிபதி புதன் நீச்சம் பெற்றிருக்கிறாரே, குருவும் கூடிய சீக்கிரத்தில் விரய ஸ்தானத்திற்கு வரப்போகிறது.

இதனால், எப்படி இருக்கும் இந்தப் புத்தாண்டு? ஏராளமான விரயத்தைக் கொடுக்குமா? இல்லை இயல்பான வாழ்க்கையில் வளர்ச்சியைக் கொடுக்குமா? தாராளமாகச் செலவிட முடியுமா? தக்க விதத்தில் அரசியலில் பொறுப்புகள் வந்து சேருமா? பொதுநல ஈடுபாடு எப்படி இருக்கும் என்று பொன்னான நேரத்தை எல்லாம் சிந்தனை செய்தே செலவழிப்பீர்கள்.

வந்தனை செய்து வணங்கும் தெய்வங்களை முறையாக வணங்கினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும் என்பதையும் அறிந்து வைத்திருப்பவர்கள்தான் நீங்கள்.

எப்படியிருக்கும் ஜய வருடம்?

Continue reading →

கடகம்(‘ஜய’ வருட ராசி பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை)

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

ராகு மாற்றமும், கேது மாற்றமும் யோகம் தரும்!

பொது நலத்தில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு ஜய வருடம் சந்திரனுக்குரிய ஓரையில், சந்திரனுக்குரிய கிழமையான திங்கட் கிழமை அன்று சந்திர மங்கள யோகத்தோடு கூடிய கிரக நிலைகள் அமையும் விதத்தில் பிறக்கிறது.

சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்தப் புத்தாண்டு சிந்தித்த காரியங்களில் எல்லாம் வெற்றியையே வழங்கப் போகிறது.

கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றவர்

மனதுகாரகன் என்றும், மாதாகாரகன் என்றும் வர்ணிக்கப்படும் சந்திரன் உங்கள் ராசிநாதனாக விளங்குவதால் சாதாரண மனிதர்களிலிருந்து சக்கரவர்த்தி வரை பேச்சுத்திறமையால் கவர்ந்திழுக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

‘குண்டூசி’ அளவுள்ள விஷயத்தை ‘யானை’ அளவாக மிகைப்படுத்தி பார்ப்பவர்கள் நீங்கள். மற்றவர்கள் செய்ய முடியாது என்று ஒதுக்கிய காரியங்களைக் கூட நீங்கள் மகத்தாக செய்து காட்டுவீர்கள்.

Continue reading →