Daily Archives: ஏப்ரல் 10th, 2014

உடல் எடையைக் குறைக்க சமையலறையில் மறைந்திருக்கும் சில இரகசியங்கள்!!!

udal edaiyaik

நீங்கள் எப்படி பொருட்களை வைத்திருக்கிறீர்கள் மற்றும் சமையலறையை பராமரித்து வருகிறீர்கள் என்ற விஷயத்தில் செய்யும் 10 வகையான மாற்றங்களால், அதிகபட்சமாக உடலில் தங்கியிருக்கும் எடையையும் குறைக்க முடியும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நமது சமையலறையில் இருக்கும் சில உணவுப் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் ஆகியவை இந்த எண்ணத்திற்கு உலை வைக்கின்றன. ஆனால், நமது வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் வகையில் மாற்றங்களை செய்திட முடியும். உணவுகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஒரு நீண்ட வழிமுறையாக இருந்தாலும், நீங்கள் உணவுப் பொருட்களை எப்படி வாங்குகிறீர்கள் மற்றும் எப்படி உங்களுடைய சமையலறையில் வைக்கிறீர்கள் என்ற விஷயமும் முக்கியமானதாக இருக்கும். நல்ல உணவை தயாரித்து எளிதில் அதைக் காணும் வகையிலும் மற்றும் எடுத்து சாப்பிடும் வகையிலும் வைத்திருப்பதன் மூலம், மோசமான உணவுகளை சாப்பிடும் சூழல்களை குறைத்திட முடியும். இதோ, அந்த வகையில் உங்களுடைய சமையலறையை எப்படி மாற்றங்கள் செய்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கொண்டு வரலாம் என்பதைப் பற்றிய குறிப்புகளை இங்கேகொடுத்துள்ளோம்.

உணவு வைக்கும் இடத்தை சுத்தம் செய்யுங்கள்

Continue reading →

மவுஸ் தூக்கித் தரும் பைல்

மவுஸ் – இன்று கம்ப்யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. மவுஸைக் கொண்டு எப்படி பைல்களை நகர்த்துவது என்பதனைச் சற்று விரிவாகக் காணலாம். அதற்கான புதிய வகை வழி ஒன்றை இங்கு கற்றுக் கொள்ளலாம்.
எப்படி வெவ்வேறு இடங்களுக்கு, பைலை, மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிறீர்கள். முதலில் பைலின் பெயர் மீது கிளிக் செய்கிறீர்கள். பின்னர் மவுஸின் இடது பட்டனை(இடது கைப் பழக்கம் இருந்தால் வலது பட்டன்) அழுத்தியவாறே இழுத்து எங்கு விட வேண்டுமோ அங்கு விட வேண்டும். இடையே எங்காவது விட்டுவிட்டால் என்னவாகும்? திருவிழாவில் தொலைந்த குழந்தை போல எந்த போல்டர் அல்லது டைரக்டரி என்று அறியமுடியாத இடத்தில் பைல் அமர்ந்து கொள்ளும்.

Continue reading →