Daily Archives: ஏப்ரல் 14th, 2014

பருவப் பெண்களின் அன்னையருக்கு…

பெண்களின் வாழ்க்கையில், டீன் – ஏஜ் என்பது வசந்தகாலம் போன்றது. பொதுவாக, 13-19 வயது வரையிலான பருவத்தை, டீன் ஏஜ் என்கிறோம். இந்த, டீன்-ஏஜ் பருவம், பெண்களின் வாழ்வில் முக்கியமான காலகட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், அன்னையராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்து கொண்டீர்களோ அதே போல், இந்தப் பருவத்திலும், கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் – ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்:

Continue reading →

தேவையற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க

நம் கம்ப்யூட்டரை வாங்கும் போதே, கம்ப்யூட்டரை வடிவமைத்துத் தரும் நிறுவனம், தான் விரும்பும் சில புரோகிராம்களைப் பதிந்து தருகிறது. காலப் போக்கில், நாமும் சில புரோகிராம்களைப் பதிகிறோம். அவை காலஞ் சென்ற பின்னரும், நாம் பயன்படுத்தாத போதும், அவற்றை நீக்காமல் வைத்திருக்கிறோம். சில புரோகிராம்கள், அப்போதைய சிஸ்டம் வடிவமைப்புடன் ஒத்துப் போகாதவையாக இருக்கலாம். இருப்பினும் அவற்றையும் தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்து வைத்து இயக்காமல் வைத்திருக்கிறோம். இவற்றுடன் பல அட்வேர் எனப்படும் விளம்பர புரோகிராம்களும் இணைந்து விடுகின்றன. அதே போல நமக்குத் தேவையான ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், தேவையில்லாத டூல்பார்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் சேர்ந்தே பதியப்படுகின்றன. இவற்றை நாம் அவ்வப்போது நீக்க வேண்டும்.
சரி, இவற்றைச் சுத்தம் செய்திடலாம் என்றால், எவற்றை நீக்குவது, எவற்றை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் அந்த வேலையைத் தொடங்காமலே வைத்திருக்கிறோம்.

Continue reading →

ஏப்ரல் – 14 தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டான, ‘ஜய’ வருஷம், நாளை பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, ‘ஜய’ வருஷம் மீண்டும் பிறக்கிறது. ‘ஜய’ என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, ‘செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் – நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல்.’
இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் பயிர்கள் நன்றாக விளையும்; தொழில்கள் வளரும்; சுகம் பெருகும்; ஆட்சியாளர்கள் மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய்வர் என்பது இதன் பொருள்.
இந்த வெண்பாவின் கடைசி வரி, நமக்கு ஆறுதலைத் தருவதாக இருக்கிறது. மக்கள் இன்று விரும்புவது ஒரு நல்ல ஆட்சியை! அப்படி ஒரு ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இன்னும் பத்து நாட்களில், நம் கைக்கு வரப் போகிறது. ‘ஜய’ ஆண்டில் நல்லாட்சி அமையுமென, நம் முன்னோர் கணித்துள்ளனர். அதற்கு தகுந்தாற்போல், ஆட்சி அமைய ஓட்டளிப்பது, நமது கடமை.
ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு கதை உள்ளது. ராஜா ஒருவர், தனக்குப் பின், வல்லவன் என்பவனே அரசனாக வேண்டுமென சொல்லி, இறந்து போனார். வல்லவனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர் அதிகாரிகள். வல்லவனோ, ‘நான் பதவியேற்க வேண்டுமென்றால், ஒரு நிபந்தனை. நன்மை செய்தால், நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே நேரம், தவறு செய்தால், தட்டி கேட்க வேண்டும். இதற்கு ஒத்துக் கொண்டால் தான் பதவியேற்பேன்…’ என்றார்.
மக்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வல்லவன் பொறுப்பேற்று அரண்மனை வாசலுக்கு வந்தார். அங்கே ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
‘இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்?’ என்று கேட்டார் வல்லவன்.
‘உங்கள் பாதுகாப்புக்கு…’ என்றனர் அதிகாரிகள்.
‘ஒரு அரசனை பாதுகாக்க மக்களின் அன்பு மட்டும் போதும்; இவர்கள் தேவையில்லை. நாட்டுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்; எனக்கல்ல, இவர்கள் நாட்டின் பாதுகாப்பை கவனிக்கட்டும்…’ என்றார். பின், அரண்மனைக்குள் சென்றார். அங்கே நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி நின்றனர்.
‘இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்?’ என்று கேட்டார்.
‘இவர்கள் அரண்மனை பணியாளர்கள். தாங்கள் இடும் வேலைகளைச் செய்ய…’ என்றனர்.
‘தேவையில்லை… என் பணிகளைக் கவனிக்க என் மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களை வேறு பணிக்கு மாற்றுங்கள்…’ என்றார்.
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றும் தலைவர்கள் நமக்கு தேவையில்லை. மக்களோடு கலந்து, அவர்களின் தேவைகளைக் கவனிப்பவர்களே தேவை. அவர்களை, ‘ஜய’ ஆண்டு நமக்கு தரட்டும்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்