Daily Archives: ஏப்ரல் 18th, 2014

தேர்தல்-கருத்துச் சித்திரம்

Continue reading →

திமுகவை தோற்கடிக்க வாக்களியுங்கள்: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிப்பதற்காக, அதன் எதிரணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அறிவுறுத்தினார்.

காரைக்குடியில் காதணி விழா ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக முன்னாள் செயலாளர் மு.க.அழகிரி பேசும்போது, "திமுகவில் என்னை நீக்கியதற்கு இதுவரை காரணம் தெரிவிக்கவில்லை. அதற்கான கடிதம்கூட எனக்கு இதுவரை வரவில்லை.

Continue reading →

விஜய் மோடி சந்திப்பின் பின்னணி

மோடியை சந்திப்பது குறித்து ஒரு மாதம் முன்பிருந்தே நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கின்றனர் விஜய் ரசிகர் கள். விஜய்க்கு தமிழகத்தில் அரசி யல் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட் டதுதான், அவர் மோடியை சந்திக்க முக்கியக் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தனது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் மூலம் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்ட போது அவர் தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சியைத்தான். 2009 ஆகஸ்ட்டில் புதுவையின் அன்றைய முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தைக் கூட்டி நலத்திட்ட உதவிகளை செய்தார் விஜய்.

Continue reading →

சலவை சோப்பில் அடங்கியுள்ள பொருட்கள்–சலவை சோப்புகள் ஒரு ஒப்பீடு (ஆய்வு முடிவுகள் By Concert )

Press Release Detergent final (1)_Page_1 Continue reading →

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்!!!

அழுக்குகளானது சருமத்தில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் சுருக்கங்கள் விழும் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். அதில் குறிப்பாக கழுத்து, மூட்டுகள், அக்குள் மற்றும் பல கண்ணுக்கு தெரியாத பகுதிகளில் அதிகம் சேரும். அழுக்குகள் சரியாக போகாமல் இருந்தால், அவ்விடங்கள் கருமையாக மாற ஆரம்பிக்கும். இப்படி இந்த இடங்களில் சேரும் அழுக்குகள் குளித்தால் போகாது. மாறாக வாரம் ஒரு முறை ஸ்கரப்பிங், கிளின்சிங் போன்ற முறையை தவறாமல் செய்து வந்தால், அழுக்குகளை போக்கலாம். அதற்கு கடைகளில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அப்படி பணத்தை செலவழித்து அவற்றை பயன்படுத்தி, அதனால் சில சமயங்களில் சருமத்தில் பிரச்சனைகளை சந்திப்பதை விட, இயற்கை முறை என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால், அழுக்குகளை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் போக்கலாம். இங்கு சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

Continue reading →

பல பைல்களைத் தேர்ந்தெடுக்கும் வழிகள்

விண்டோஸ் இயக்கத்தில், பல ஆண்டுகள் இயங்கி, அனுபவம் பெற்றவர்கள் கூட, சில செயல்பாடுகளுக்கான வழிகளை மறந்து விடுகிறார்கள் அல்லது அவற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பைல்களைக் கையாள்வதில், நாம் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களத் தேர்ந்தெடுத்து, காப்பி, நகர்த்த அல்லது நீக்க வேண்டியுள்ளது. மொத்த பைல்களையும் தேர்ந்தெடுக்கப் பல வழிகளை விண்டோஸ் தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.
போல்டர் ஒன்றில், அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுக்க Ctrl+A கீகளை அழுத்தினால் போதும். தொடர்ச்சியாக உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் தேர்ந்தெடுக்க, முதல் பைலை முதலில் தேர்ந்தெடுத்துப் பின்னர், ஷிப்ட் கீயை அழுத்தியவாறு, கடைசி பைலைத் தேர்ந்தெடுத்தால், இடையே உள்ள அனைத்து பைல்களும் சேர்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.

Continue reading →