Daily Archives: ஏப்ரல் 24th, 2014

யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு

ஓட்டு எண்ணிக்கைக்கு, இன்னும் இருபது நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, தமிழக கட்சிகள், தங்களுக்குள் ஒரு கணக்கு போட்டு, வெற்றிப் புள்ளிகளை கணித்து வைத்துள்ளன.
பிரசாரத்திற்கு சென்ற தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு, கட்சியினரின் கடின உழைப்பு, கூட்டணியின் பலம், மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து, இந்தந்த தொகுதிகள், தங்களுக்கு சாதகம் என, இக்கட்சிகள் ஒவ்வொன்றும் கூறுகின்றன.

அ.தி.மு.க., எதிர்பார்ப்பு:

Continue reading →

பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்

அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.

1. ஓர் எளிய தொடக்கம்: 2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. பின்னா ளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில்

Continue reading →

ஹார்ட் ப்ளீட் வைரஸ் எச்சரிக்கை!

இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர். இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி, குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புகிறது.
இணையத்தில் தகவல்கள் அனுப்பப்படுகையில், அது சுருக்கப்பட்டு அனுப்பப்பட்டு, பின்னர் தேவைப்படும் இடங்களில் விரிக்கப்பட்டு காட்டப்படுகிறது. இணையத் தகவல் பரிமாற்றத்தில் இது ஒரு முக்கியமான தொழில் நுட்ப நடைமுறையாகும். இணைய ஒருங்கு முறையில் இது OpenSSL என அழைக்கப்படுகிறது. தகவல் பாக்கெட்கள் பரிமாறப்பட்டு, அவை தேவைப்படும் கம்ப்யூட்டரை அடையும்போது, இந்த வைரஸ், சுருக்கப்பட்ட தகவல்களை விரிக்கும் குறியீடு போல நுழைந்து, கம்ப்யூட்டரைக் கைப்பற்றி தகவல்களைத் திருடி அனுப்புகிறது. கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், அதன் மெமரியில் உள்ள தகவல்களைப் படிக்கிறது. படித்து, தன் பைலில் பதிவு செய்து கொண்டு, வைரஸ் குறிப்பிடும் இணைய முகவரிக்கு அனுப்புகிறது.
இந்த வகை வைரஸ் செயல்பாடு மிக மிக மோசமான விளைவுகளைத் தரக்கூடியது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மோசமான

Continue reading →

வாக்களிப்பது எப்படி?

னநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை…

வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

அடையாள அட்டை!

18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள்

Continue reading →

குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் ,ஜூனியர் விகடன் -பாராளுமன்ற தேர்தல் கணிப்புகள் ஓர் அலசல்

mp-election_Page_1a

Continue reading →