Daily Archives: ஏப்ரல் 25th, 2014

டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த

வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

Continue reading →

தாய்ப்பால் கொடுக்கும் அன்னையருக்கு..

உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற, சத்தான, கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் அன்னையர், தங்களை, சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர் சத்துக்களும் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். கிழங்கு வகை உணவுகளை குறைத்து, சுறா புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால், பால் அதிகமாக சுரக்கும்.
மசாலா, அதிக காரம் சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணெய்யில் பொரித்தவை, எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள், குறிப்பாக துரித உணவுகளை தவிர்ப்பதுடன், குளிர்பானங்களை அருந்தவே கூடாது.
ஓட்டல்களில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 போன்ற நான்வெஜ் அயிட்டங்கள், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் போன்ற அயிட்டங்களை சாப்பிடக் கூடாது. குறிப்பாக, சீதாப் பழத்தை தொடவே கூடாது.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-ஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதி:

ஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள் ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டு வர, +14 எனத் தரலாம்.

எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்: காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.

Continue reading →