Daily Archives: ஏப்ரல் 26th, 2014

நொடிக்கு 10 கிகி பிட்ஸ் வேக இணையம்

கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றினை உருவாக்கி முடித்துள்ளது. இது வர்த்தக ரீதியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், நாம் இணையத்தைப் பயன்படுத்துவதில், மாபெரும் மாற்றம் ஏற்படும்.
ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில், கூகுள் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு நொடிக்கு ஒரு ஜிபி டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தந்து வருகிறது. தற்போது இதனை 10 கிகா பிட்ஸ் வேகத்திற்குக் கொண்டுவரும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகுள். அண்மையில் இணையம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேட்ரிக் இதனைத் தெரிவித்தார்.
இது இணைய வேகத்தில் அடுத்த தலைமுறை வேகமாகவும் தொழில் நுட்பமாகவும் இருக்கும் எனக் கூறினார். இந்த அளவு வேகத்தில் டேட்டா பரிமாற்றம்

Continue reading →

சத்யா நாதெள்ளா சந்திக்கும் சிக்கல்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல இந்திய சாப்வேர் வல்லுநர்கள் ஆயிரக் கணக்கில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிறு வனத்தில் பல்வேறு பிரிவுகளில் தலைமைப்பொறுப் பேற்று பணிபுரிந்து வந்த, ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
46 வயதாகும் சத்யா நாதெள்ளா, பில் கேட்ஸ் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகியான ஸ்டீவ் பால்மருடன் இணைந்து பணியாற்றி யவர். 1992 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலில் பணியில் சேர்ந்து தொடர்ந்து 22 ஆண்டுகள் இங்கு பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர், சன் மைக் ரோசிஸ்டத்தில் பணியாற்றினார். தேடல் தளமான பிங் மற்றும் க்ளவ்ட் இணைய சேவைப் பிரிவுகளைத் தலைமை ஏற்று நடத்தியவர் சத்யா நாதெள்ளா. க்ளவ்ட் பிரிவில் பணியாற்றிய போது, பல புதிய இலக்குகளை எட்டியவர். இவரின் முயற்சியால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Azure மற்றும் Office 365 ஆகியவற்றிற்கு பலத்த வரவேற்பு மக்களிடையே கிடைத்தது.

Continue reading →