Daily Archives: ஏப்ரல் 27th, 2014

வேர்ட் டேபிள்: செல்களை இணைக்கும் வழிகள்

வேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells மேல் கிளிக் செய்தால், செல்கள் இணைக்கப்பட்டு கிடைக்கும். ஆனால், இணைக்கப்படும் செல்கள் வரிசையாக சீராக இல்லாமல் நமக்கு இணைந்தவாறு தேவைப்பட்டால் என்ன செய்யலாம்? அதற்கென வேர்ட் நமக்குத் தரும் வசதிகளை இங்கு பார்க்கலாம்.

Continue reading →

விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

ங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம். இருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன. இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன.
விண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்கீ செயல்பாட்டினை பார்க்கலாம்.
விண்டோஸ் கீயுடன்
+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும், இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8

Continue reading →

ராங்கால் -நக்கீரன் 29.04.2014

n1

Continue reading →

விண்வெளி வீரராக வித்தியாசமான பயிற்சிகள் நாசா விஞ்ஞான தம்பதிகள்

நாசாவில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவின் துணைத்தலைவரான அந்தோணி ஜீவராஜனும் விண்கலத்துக்கான மின்கலம் (பேட்டரி) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு ‘ஸ்பேஸ் சேஃப்டி’, ‘லித்தியோ அயன் பேட்டரி அட்வான்சஸ் அண்ட் அப்ளிகேசன்ஸ்’ என்ற இரு ஆராய்ச்சி நூல்களை எழுதிய ஜூடித்தும் தம்பதியர். பாளை பள்ளி விழாவுக்கு வந்தவர்களிடம் விரிந்து பரந்த விண்வெளி ஆய்வை பற்றி விஸ்தீரணமாக கேட்டறிந்தோம். * நாசா என்றாலே ஒரு பிரமிப்பு இருக்கிறதே, அது என்ன செய்கிறது, எத்தனை பேர் வேலை செய்கின்றனர்? நாசா விண்வெளியிலும் விண்வெளிக்கப்பாலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. சனி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்களுக்கு தனித்தனி விண்கலங்கள் அனுப்பி சோதனை நடத்துகிறது. பூமியை பற்றியும் முற்றிலுமாக தெரிந்துகொள்ள ஆராய்ச்சியை தொடர்கிறது. இங்கு ஜான்சன் மையம், கென்னடி மையம் உள்ளிட்ட 10 மையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும்

Continue reading →

பா.ஜ., கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் இடங்கள் 317 : மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க காங்., தயார்

‘ஒன்பது கட்டங்களாக நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும்; அந்த கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும்’ என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க உதவுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம்மாதம் 7 முதல், மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை, இம்மாதம் 7, 9, 10, 12, 17 மற்றும் 24ம் தேதிகளில், ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

அதிக இடங்களில்…

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், இன்னும் மூன்று கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின், மே 16ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.இந்நிலையில், ‘லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும்’ என, தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெறும்; காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 120 இடங்கள் மட்டுமே கிடைக்கும்’ என, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்:
*நாட்டிலேயே அதிகபட்சமாக, உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு,

Continue reading →

சுவாமி வம்பானந்தா-குமுதம் ரிப்போர்ட்டர் 01.05.2014

v-1

Continue reading →

ஐபேட், லாப்டாப், டேப்ளட், ஐபேட் ஏர்

லேப்டாப் மற்றும் ஐபேட், அல்லது ஐபேட் ஏர் மற்றும் டேப்ளட் ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் இவற்றின் தன்மை குறித் தும், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் காணலாம்.

1. முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் காணலாம். லேப்டாப் பி.சி. அல்லது நோட்புக் கம்ப்யூட்டர் என்பது, கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய முழுமையான பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளைத் தரக்கூடிய சாதனமாகும். இதில் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர் வகையும் உண்டு. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இவை முழுமையாக இயக்கும். இவற்றை இணை யத்துடன் இணைத்தோ, இணைக்காமலோ இயக்கலாம். இவற்றில் டச் ஸ்கிரீன் இயக்கம் இருக்கலாம். இல்லாமலும் இவை செயல்படும்.
நெட்புக் என்பது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் ஒரு சிறிய சாதனம். இதில் இணைய இணைப்பு பெற்று இயக்க ஒரு கீபோர்ட் இணைந்தே கிடைக்கும். குரோம்புக் (Chromebook) என்பது கூகுள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெற்று செயல்படுத்தும் சிஸ்டம் ஆகும். இது கூகுள் தளத்திலிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களைக் கொண்டே பெரும்பாலும் செயல்படுவதால், இணைய இணைப்பில் இருந்தால் தான், முழுமையான இயக்கமும் பயனும் கிடைக்கும். குரோம் புக்கிலும் கீ போர்ட் ஒன்று இணைக்கப்பட்டே கிடைக்கும்.

Continue reading →