Daily Archives: ஏப்ரல் 28th, 2014

வேர்ட் டிப்ஸ்-வேர்டில் ரூலர்:

வேர்டில் ரூலர்: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் போது, அந்த விண்டோவில் மேலாக, ரூலர் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, நாம் டாகுமெண்ட்டின் பார்மட்டிங் விஷயங்களை சரி செய்திடலாம். பக்கங்களைச் சீராக அமைக்கலாம். குறிப்பாக மவுஸ் பயன்படுத்தி இயக்குகையில் இதன் பயன்பாடு அதிகம்.
அதே நேரத்தில், இந்த ரூலர், வேர்ட் விண்டோவில் காட்டப்பட வேண்டுமா என்பதனையும் நீங்கள் முடிவு செய்திடலாம். இதனை மேற்கொள்ள, ரிப்பனில் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Show குரூப்பில் Ruler செக் பாக்ஸ்ஜ் பார்க்கவும். இந்த செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால், ரூலர் காட்டப்படும். டிக் அடையாளத்தை நீக்கிவிட்டால், ரூலர் மறைந்துவிடும்.

Continue reading →

பெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்

உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசிப்பவர்களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் சரியான

Continue reading →

பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்

ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.
1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன் டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன் டேஷன் முழுவதும் அதனையே பயன் படுத்தவும்.
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக்கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.

Continue reading →

புதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்

இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும். தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்” (ICANN(Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

Continue reading →

மிஸ்டர் கழுகு -ஜூனியர் விகடன் 30.04.2014

k1

Continue reading →