வேர்ட் டிப்ஸ்-வேர்டில் எண்களை எழுத்தால் எழுத

வேர்டில் எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.
கடைசிப் பைலுடன் வேர்ட் திறக்க: வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவா கத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய பைலைப் பெற்று கிளிக் செய்து, பின்னர் இயக்கலாம். இந்த கிளிக்குகளை மிச்சம் செய்திடும் வகையில், ஒரு செட்டிங்ஸ் அமைத்தால், வேர்ட் புரோகிராம் திறக்கும் போதே, இறுதியாக நாம் பயன்படுத்திய பைலுடன் வேர்ட் இயங்கத் தொடங்கும். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும்.
2. ரன் தேர்ந்தெடுக்கவும்.
3.இறுதியில் தரப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்திடவும்: winword.exe /mFile1
4.ஓகே கிளிக் செய்திடவும்.
இதில் தரப்பட்டுள்ள /m ஸ்விட்ச் ஒரு மேக்ரோ அல்லது கட்டளையை இயக்கும். இந்த இடத்தில், File1 என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட ஒரு பெயர். ஒரு பைலின் பெயர் என்னவாக இருந்தாலும், இதுவே பெயராக மாறும். இதனை அடுத்து,
1. விண்டோஸ் எக்ஸ்புளோரரில், winword. exe என்ற பைலைக் கண்டறியவும். இது வழக்கமாக, C:\Program Files\Microsoft Office\Office\ folder என்ற இடத்தில் கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Create Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கும். இது பட்டியலின் இறுதியாகக் காட்டப்படும். பின்னர், புதிய ஷார்ட்கட்டில் ரைட் கிளிக் செய்து Send To Desktop என்பதைத் தேர்ந் தெடுக்கவும்.
4. இனி டெஸ்க்டாப்பில், புதிய ஷார்ட்கட் ஐகானைக் கண்டறியவும்.
5. இதில் ரைட் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுக்கவும்.
6. ஷார்ட்கட் டேப்பில், /mFile1 என்ற ஸ்விட்சை ஸ்ட்ரிங்குடன் இணைக்கவும்.
7.ஓகே கிளிக் செய்திடவும்.
இந்த ஷார்ட்கட்டைப் பயன்படுத்தி, எப்போ தெல்லாம், வேர்ட் திறக்கப்படுகிறதோ, இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட பைலுட னேயே, வேர்ட் திறக்கப்படும்.
ஓர் எச்சரிக்கை. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், மேலே 1ல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரியான போல்டரின் பெயரைத் தர வேண்டியதிருக்கும்.

%d bloggers like this: