Daily Archives: மே 5th, 2014

சடங்கு அல்ல, பாதுகாப்பு!

சென்னை குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியிருக்கிறது. குண்டுவெடிப்புக்குப் பின் வழக்கம்போல, நம்முடைய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பான விவாதங்கள் பெரிதாகியிருக்கின்றன.

இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில், பெரும் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் குடிமக்கள் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பு என்பது நம் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு சவாலான காரியம் என்பதை மறுப்பதற்கில்லை. நமக்குத் தேவையான கட்டமைப்புகளைப் பாதுகாப்புத் துறையினரிடம் கேட்டால், அவர்கள் தரும் பட்டியல் குவாஹாட்டி ரயிலைவிடவும் நீளமாக இருக்கும். பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு நவீன குற்றத்தடுப்பு முறைகளிலும் கருவிகளைக் கையாள்வதிலும் தரமான பயிற்சிகள் தரப்படுவதில்லை; அவர்களுக்குத் தேவையான நவீன கருவிகளும் ஆயுதங்களும் அவர்களிடம் கிடையாது; உளவுப் பிரிவில் சுமார் 33% இடங்கள் காலி; ரயில்வே துறையை எடுத்துக்கொண்டால், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ் படை ஆகிய இரண்டிலும் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது… நிச்சயம் இவையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவைதான். ஆனால், இல்லாதவை மட்டும்தான் உயிர்களைப் பறிக்கின்றனவா?

Continue reading →

சென்னை ரயில் குண்டுவெடிப்பு: 3 பேர் அடையாளம் தெரிந்தது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர். (கோப்புப் படம்)

ரயிலில் குண்டு வைத்ததாக 3 பேரை சிபிசிஐடி போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகப்படும் மூன்று பேரில் இருவரின் பெயர், விவரங்கள் தெரிந்தன.

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 1-ம் தேதி காலை வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வாதி (24) என்ற பெண் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர்.

குண்டுகள் வெடித்த ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அகமது உசேன், ஜான்சன் என்ற 2 பேர் தட்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29-ம் தேதி காலை தட்கலில் இரண்டு டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகமது உசேன் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம் மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் குவாஹாட்டி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களைக் கொடுத்து தட்கல் டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் போன் நம்பர் எதுவும் இல்லை.

அகமது உசேன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் செல்போன் நம்பர் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது, கடந்த ஒரு மாதமாக அது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இரண்டு பேர் கொடுத்துள்ள முகவரிகளும் போலியானவை. எனவே இவர்கள் இருவரும் சேர்ந்து ரயிலில் குண்டு வைத்திருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருவரும் குண்டு வைத்து விட்டு வாலாஜா, காட்பாடி, அரக்கோணம் அல்லது சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெங்களூர் ரயில் நிலையம் மற்றும் முன்பதிவு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

ரயிலில் இருந்து இறங்கி ஓடியவர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடையில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றபோது, குண்டுகள் வெடித்த எஸ்-4, எஸ்-5 பெட்டிகளுக்கு அடுத்துள்ள எஸ்-3 பெட்டியில் இருந்து ஒருவர் இறங்கி ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

குண்டுகள் வெடிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு அவர் முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு இறங்கி ஓடுகிறார். அவரது பெயர் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இவருக்கும் குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் பலமாக நம்புகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் இந்த 3 நபர்கள் மீது சந்தேகப் பார்வை விழுந்துள்ளதால் மொத்த விசாரணையும் இவர் களைச் சுற்றியே தற்போது நடந்து வருகிறது.

நாடி சோதிடத்தில் லேடி பிரதமர்–நக்கீரன் 6.5.2014

n1

Continue reading →

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற மைக்ரோசாப்ட் கட்டாயம்

விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவது வரும் அக்டோபார் 31 உடன் முடிந்துவிடும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பேசிக், ஹோம் பிரிமியம் அல்லது அல்ட்டிமேட் ஆகிய அனைத்து வகைசிஸ்டங்களுடனும் இந்த நாளுக்குப் பின்னர், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்கக் கூடாது.

Continue reading →

அவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்

நாம் என்றாவது யோசித்திருப்போமா? இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று? இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை. ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக

Continue reading →