Daily Archives: மே 6th, 2014

நுரையீரலை கரை சேர்ப்போம்: உலக ஆஸ்துமா தினம்

நுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச குழாயின் உட்பகுதி வீங்கிக் கொள்வதால் ஏற்படும் குறைபாடே ஆஸ்துமா.
இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இவர்களின் சுவாசப் பாதையால் சிறிய அளவிலான மாசுபாடைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்துமா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே மாதத்தின் முதல் செவ்வாய் உலக ஆஸ்துமா தினமாக (மே 6ம் தேதி) கடைப்பிடிக்கப்படுகிறது. "உங்கள் ஆஸ்துமாவை, உங்களால் தடுக்க முடியும்’ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. 1998ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும்.தும்மல், இருமல், சுவாசித்தலில் ஏற்படும் சிரமம் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இவை இருந்தால், முன்னரே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். இதில் ஏற்படும் தாமதம் நுரையீரலை சேதப்படுத்திவிடும். சுற்றுச்சூழல் சீர்கேடுதான் ஆஸ்துமாவுக்கு பெரிதும் காரணம்.
என்ன தீர்வு

Continue reading →

20 சதவீதத்தவருக்காக உழைக்கும் 80 சதவீத மக்கள்

இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடொ பரேட்டோ (Vilfredo Pareto) 1906 ம் ஆண்டு கவனித்த ஒரு விஷயம், இத்தாலி நாட்டில் 80% நிலத்தை நிர்வகித்து வந்தது 20% மக்கள் தொகையே. தான் கவனித்த அந்த விஷயத்தை பல நாடுகளிலும் சர்வே செய்தபோது கிடைத்த ஆச்சரியமான உண்மை எல்லா நாடுகளிலும் இதே சதவிகிதம் ஒத்து காணப்பட்டதே.

இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், உலகின் 20 சதவீத பணக்காரர்கள் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பெரும்பாலான இடங்களில் பொருந்தினாலும் யாரும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை மேலும் அதை உணர்வதும் இல்லை.

நேரம் விரயமல்ல

Continue reading →

மிரளும் இலங்கை பதற்றத்தில்பாகிஸ்தான்-ஜூனியர் விகடன் 7.5.2014

k1

Continue reading →