Daily Archives: மே 8th, 2014

அதிகார கணக்குகள் – இந்திய டுடே

1

Continue reading →

நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!

கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.
இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே, நீர்பாசனத்துக்கு பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளம் ஏற்படும்போது, இம்மாநிலங்களில், நீருக்கு பிரச்னை இருப்பதில்லை. 30, ஜனவரி 2013 அன்றைய மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, தென்னிந்திய ஆறுகளின் மொத்த நீர் கொள்திறன், 15 ஆயிரத்து 300 கோடி கன அடி தான். அவற்றில், தற்போதுள்ள நீர் சேகரிப்பு இடங்கள் அனைத்தும் சேர்ந்து, 4,800 கோடி கன அடி நீரை மட்டுமே, தேக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

மாநிலங்களின் நீர்த்தேக்க அளவு

ஆனால், வெள்ளப் பெருக்கின்போது, கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் மட்டும், 2,000 – -3,000

Continue reading →

தேவை திருப்பி அடிக்கும் மனோபாவம்!

  •  

அது ஒரு கோடைக்காலம். இளங்காலைப் பொழுது. ஆப்கானிஸ்தானத்தின் தலைநகரம் காபூலில் இந்தியத் தூதரகம் இருக்கும் கட்டிடத்துக்குப் பக்கத்தில், பழைய டொயோட்டா கார் ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து யாரோ இறங்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், திடீரென மின்னல் வெட்டியதைப் போலப் பளிச்சென்று ஒரு ஒளியும் டமாரென்று ஓசையும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. அதையடுத்து 58 பேர் உயிரிழந்தனர், 141 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் உடல்கள் அழுத்தமான காற்றில் தூக்கி வீசப்பட்டதைப் போல நாலாபுறங்களிலும் சிதறின. ரசாயனமும் இரும்புத் துண்டுகளும், கண்ணாடித் தூளும் அனைவருடைய உடல்களிலும் பாய்ந்து, ஊடுருவி, குத்திக்கிழித்து சதைகளைத் துளைத்து, ரத்த நாளங்களை அறுத்து, எலும்புகளை நொறுக்கி கோரதாண்டவம் ஆடிவிட்டன. எரிச்சல், வலி, வேதனையுடன் நினைவிழந்தவர்கள் ஒருபக்கம், நிலைகுலைந்தவர்கள் மறுபக்கம் என்று அந்த இடமே குருக்ஷேத்திரம்போலத் தலையற்ற உடல்கள், பிய்த்து எறியப்பட்ட அங்கங்கள், ரத்தச் சேறு, சதைக்குப்பை என்று பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டியது. இந்தப் படுபாதகச் செயல்களைச் செய்தவர்களை, தாக்குதல் நடந்த சில விநாடிகளுக்கெல்லாம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் அதிகாரிகள் தொலைபேசிகளில் அழைத்துப் பாராட்டி, குலாவியதை மேற்கத்திய நாடுகளின் உளவுப்பிரிவு அதிகாரிகள் ஒட்டுக்கேட்டுப் பதிவுசெய்தனர்.

இந்த நாசவேலைகுறித்த தகவல் டெல்லியை எட்டியதும், அப்போது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவிவகித்த எம்.கே. நாராயணன் கோபத்தில்

Continue reading →

உங்கள் செல்லத்தை பள்ளியில் சேர்க்கிறீர்களா?

கோடை விடுமுறை என்றாலே அது பள்ளி விடுமுறைதான்; அதனால், விடுமுறை நாட்களில் உங்கள் செல்லங்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்காக, அவர்களை, அதட்டிக் கொண்டிருக்காமல், முடிந்தவரை அவர்களை விடுமுறையை கொண்டாட அனுமதியுங்கள். இந்த விடுமுறை காலம் தரும் உற்சாக அனுபவம்தான், அடுத்த கல்வி ஆண்டுக்குள் அவர்களை உற்சாகமாக அடியெடுத்து வைக்க உதவும்.
அதனால், உங்கள் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்; உங்களுடைய சொந்த ஊருக்கு, குழந்தைகளை அழைத்துச் சென்று, உறவுகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இது, குடும்ப உறவுகள் மேம்பட அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
குழந்தைக்கு ஏதாவது மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், அதை, விடுமுறை நாட்களுக்குள், முடித்து விடுவது நல்லது. பள்ளி திறந்தபின், ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டு, விடுமுறை எடுத்தால், பிள்ளைகளுக்கு படிப்பின் மீது, ஒருவித அலட்சியத்தை ஏற்படுத்தி விடும்.
தேர்வு நேரத்தில், விடிய விடிய படித்தார்களே என்ற எண்ணத்தில் விடுமுறை நாட்களில், கொஞ்சம் ப்ரீயாக தூங்கட்டும் என, சில பெற்றோர் விட்டுப் பிடிப்பர். இதனால், பள்ளி திறந்து பிள்ளைகள் மறுபடி பிசியாகும் போது, இந்த அதிகபட்ச காலை தூக்கம் பெற்றோருக்கு டென்ஷனை ஏற்படுத்தும். அதனால், பள்ளி துவங்க சில நாட்கள் இருக்கும் போதே, குழந்தைகளின் காலை தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, கட்டுக்குள் கொண்டு வந்து விடுங்கள்.
அதேபோல், பள்ளிக் கட்டணம்; முன்கூட்டியே, இதற்கான தொகையை தயார் செய்து விடுங்கள். கடைசி நேரத்தில் பீஸ் கட்ட தடுமாறும் நிலைக்கு ஆளாக வேண்டாம். இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர்.

Continue reading →

கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்

கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்று சில டிப்ஸ்:

Continue reading →

தன்னம்பிக்கை தருது மேக்கப்!

திடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா? உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’ செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ஒரு ஆயில் மசாஜ் அல்லது பெடிக்யூர்… இவற்றில் எதையாவது முயற்சி செய்து பாருங்கள். காணாமல் போன உற்சாகம் உங்களுக்குள் வந்து ஒட்டிக்கொள்வதை உணர்வீர்கள். அழகுக்கும் தன்னம்பிக்கைக்கும் அப்படியோர் நெருங்கிய தொடர்புண்டு. அது மேக்கப்புக்கும் பொருந்தும். மேக்கப் என்பதொன்றும் பிரபலங்களுக்கும் நடிகைகளுக்குமான விஷயம் அல்ல. தன்னம்பிக்கையுடன் இருக்க நினைக்கிற எல்லோருக்கும் அது அவசியம்! ”அழகுக்கு அழகு சேர்க்க மட்டுமின்றி, அழகாக இல்லை என தன்னம்பிக்கை இல்லாமல் தவிப்பவர்களுக்கும் மேக்கப் அவசியம்” என்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ வீணா.

குறைகளை மறைக்கிற கேமஃப்ளாஜ்

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-எக்ஸெல் எழுத்தின் அளவு

எக்ஸெல் எழுத்தின் அளவு: மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத் துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.
பிட்ஸ் மற்றும் டிப்ஸ்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
இரண்டு கீ வழிகள்:
Shift + F11 : அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது.
Alt + Shift + F1 :மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

Click Here

திசை மாறிய 20 தொகுதிகள் – சுவாமி வம்பானந்தா

v1

Continue reading →