Daily Archives: மே 9th, 2014

ராங்-கால் -நக்கீரன் 9.5.2014

N1

Continue reading →

உணவு யுத்தம்–3 (ஜூனியர் விகடன் )

U1

Continue reading →

நடிகைகள் அழகை தக்க வைத்துக்கொள்ள செய்வது என்ன?

சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள். நடிகர், நடிகைகள் வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா என்ன? அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? முதுமையும், தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது.

Continue reading →

தொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்

வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Continue reading →

மிஸ்டர் கழுகு -ஜூனியர் விகடன் 11.5.2014

K1

Continue reading →

பெண்களின் தெய்வம்!-மே 10 – மீனாட்சி கல்யாணம்

கந்தர்வ லோகத்தில் வசித்த விச்வாவஸு என்பவன் சிவனருளால், வித்யாவதி என்ற குழந்தையைப் பெற்றான்.
ஒரு சமயம், வித்யாவதிக்கு, அம்பாள் அருள் பாலிக்கும், பூலோக புண்ணிய தலங்களுக்கு செல்ல வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விச்வாவஸு அவளிடம், ‘கடம்பவனம் எனப்படும் மதுரையில், ‘சியாமளா’ என்ற பெயரில், அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவளை வழிபட்டு வா…’ எனக் கூறினான்.
அதன்படி அம்பாளைத் தரிசிக்க, வித்யாவதி கடம்பவனம் வந்தாள். சியாமளா தேவி சன்னிதி முன் நின்று, மனமுருக வழிபட்டாள். அந்த தலம், அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே, கந்தர்வ லோகத்துக்கு திரும்ப மனமின்றி, அங்கேயே தங்கி, அன்னைக்கு சேவை செய்தாள்.
அவளுக்கு மூன்று வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, ‘என்ன வரம் வேண்டும் கேள்…’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி, ‘குழந்தையாகக் காட்சி தந்த நீ, எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்…’ என்று, வேண்டிக் கொண்டாள். அவளது விருப்பம், அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று, அம்பாள் வாக்களித்தாள்.
அதன்படி, மறு பிறப்பில், சூரசேனன் என்னும் மன்னனின் மகளாக அவதரித்தாள் வித்யாவதி. அவளுக்கு காஞ்சனமாலை என, பெயரிட்டனர். ‘காஞ்சனம்’ என்றால், தங்கம். தங்கம் போல் ஜொலிக்கும் அழகுடன் திகழ்ந்த அவளை, மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
மன்னன் குழந்தை பேறுக்காக, புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அந்த யாகத்தில், மூன்று வயது குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அப்போது காஞ்சனமாலைக்கு, முற்பிறவியில் அம்பிகை வாக்களித்தது நினைவுக்கு வந்து, மகிழ்ந்தாள். யாகத்தில் தோன்றிய அக்குழந்தைக்கு, தடாதகை என, பெயர் சூட்டினர்.
ஆண் வாரிசு இல்லாத மன்னன், தடாதகைக்கு சகல கலைகளையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆண் மகனைப் போல் வளர்த்து, பின், மதுரையின் ஆட்சி பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல, எப்போதும் விழிப்புடன் இருந்து, ஆட்சி செய்ததால், மீனாட்சி என்ற பெயரைப் பெற்றாள். இதன் பிறகு, அம்பாளுக்கு சியாமளா என்ற பெயர் மாறி, இறுதியில், மீனாட்சி என்ற பெயரே நிலைத்து விட்டது. ‘சியாமளம்’ என்றால், பச்சை. மீனாட்சி, பச்சை வண்ண மேனியளாக இருந்தாள்.
சியாமளா தேவி, கல்விக்குரிய தெய்வம். இதனால் தான், மதுரை கல்விக்குரிய கிரகமான புதன் ஸ்தலமாக விளங்குகிறது. தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான், பெண்களின் தெய்வமாக போற்றப்படுகிறாள்.
உலகையே வென்ற அவள், சுந்தரேஸ்வரரை மணம் முடித்து, இன்றும் நல்லாட்சி புரிகிறாள். அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.

பிரம்ம தத்துவம்

பணம், பதவி, அதிகாரம் இம்முன்றும், எப்பேர்பட்ட மனிதருக்கும், ‘நான்’ எனும், ஆணவத்தை கொடுத்து விடுகிறது. அதன் விளைவாக, நாம் செய்யும் ஆணவ செயல்கள், பாவ வினைகளை பரிசாக கொடுத்து, பிறவிதோறும் அப்பாவ கர்மத்தை அனுபவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும், இறை தன்மையை உணர, கர்வம், ஆணவம் இரண்டும் மிகப் பெரிய தடை கற்கள். அதனால் தான், ‘நான்’ எனும் ஆணவத்தை கடக்காமல், இறைவனை உணர முடியாது என்கின்றனர் மகான்கள். விநாயக பெருமான், ஜனக மகாராஜனுக்கு பிரம்மம் குறித்து ஏற்பட்டிருந்த ஆணவத்தை சுட்டிக் காட்டி, ஞானத்தை உபதேசித்த கதை இது:
நாரதர், மிதிலையில் ஜனக மன்னன் சபைக்குள் நுழைந்தார். மன்னன், நாரதரை அலட்சியப்படுத்துவது போல், பார்க்கவும் இல்லை; ஆசனத்தில் இருந்து எழுந்திருக்கவும் இல்லை. ஆனால், அவன் செய்த அவமானத்தை, பொருட்படுத்தாத நாரதர், ‘ஜனக மன்னா… நலம் பெறுவாயாக…’ என்று, வாழ்த்தினார்.
இதைக் கேட்டதும், மன்னன் ஏளன சிரிப்புடன், ‘முனிவரே, அனைத்தும் பிரம்ம மயம் என, நம்புபவன் நான். அப்படி இருக்கும் போது, இதில் வாழ்த்துவது யார், வாழ்த்தப்படுவது யார்; பிரம்மம், பிரம்மத்தை வாழ்த்துமா, வாழ்த்தத்தான் முடியுமா?’ என்றார்.
ஜனகனின் பேச்சால், மனம் வருந்திய நாரதர், கவுண்டன்ய முனிவரின் ஆசிரமத்திற்குப் போனார். அங்கு பூஜையில் இருந்த, விநாயகர் திருவுருவை வணங்கி, ‘விநாயகா, ஜனகனுக்கு நல்லறிவைக் கொடு…’ என, வேண்டினார்.
அதே நேரத்தில், ஜனகனின் அரண்மனை வாயிலில், வெண் குஷ்டம் பிடித்த ஒருவர், பசிக்கு உணவு கேட்டார். மன்னன் உத்தரவுப்படி, அவரை ஓரமாக உட்கார வைத்து, உணவு கொடுத்தனர் பணியாளர்கள். வந்தவரோ, போடப் போட உண்டு கொண்டே இருந்தார். சற்று நேரத்திற்குள், அரண்மனையில் இருந்த அத்தனை உணவுப் பொருட்களும் தீர்ந்து போயின.
பணியாளர்கள் உணவுப் பொருள் தீர்ந்து போன விஷயத்தை சொன்னதும், மன்னன் ஓடி வந்தான். ‘ஐயா, சற்று நேரம் தாமதியுங்கள். வெளியில் இருந்து பொருள் வரவழைத்து, உணவு போடுகிறேன்…’ என, வேண்டினான்.
வந்தவரோ, ‘மன்னா… இப்போது எனக்கு இருக்கும் பசியையே உன்னால் தீர்க்க முடியவில்லையே… இன்னும் சிறிது நேரம் தாமதித்தால், பசி அதிகமாகுமே… பசித்த வயிற்றுக்கு உணவிட முடியாத நீ எப்படி பிரம்மம் ஆக முடியும்? பிரம்மம் என்பது, ஒரு ஜீவராசியை, சிருஷ்டி செய்வதற்கு முன், அந்த உயிருக்கான உணவைப் படைத்த பின் தான், அந்த ஜீவனையே படைக்கும். அப்படியிருக்கையில், உன்னை எப்படி பிரம்மத்துக்கு ஒப்பிடுகிறாய்?’ என்று கேட்டு, வெளியேறினார்.
வெளியேறிய அந்த மனிதர், திரிசிரன் என்ற ஏழை வீட்டுக்குச் சென்று, அருகம்புல்லும், தீர்த்தமும் உண்டு, பசி தணிந்தார். அப்போது அந்த மனிதரின் வெண் குஷ்ட நோய் நீங்கி, அங்கே, விநாயகர் நின்றார். திரிசிரனின் ஏழ்மை நீங்க, அவர் இல்லத்தில், செல்வங்கள் நிறைந்தன.
ஜனகனின் ஆணவ பக்திக்கு, அகப்படாத ஆண்டவன், ஒரு சாதாரண ஏழையின் அன்பிற்கு கட்டுப்பட்டு, அவர் தந்த, அருகம்புல்லை உண்டான். பக்திக்கு பணிவு அவசியம். பிறரை அவமதித்து, கடவுளை துதிப்பதில் பயனில்லை.
பின் குறிப்பு: அருகம்புல், வெண் குஷ்டத்திற்கு தலைசிறந்த மருந்து என்று, தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது. இதை, நம் முன்னோர்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றனர்.