Daily Archives: மே 10th, 2014

தவறான நம்பிக்கை அது… தெளிவான பதில் எது?

அழகு விஷயத்திலும் அசட்டுத்தனமான நம்பிக்கைகளுக்குப் பஞ்சமே இல்லை. தவறான விஷயங்களை சரி என்றும், சரியான விஷயங்களை தவறு என்றும் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு, பின்பற்றிக் கொண்டிருக்கிற பெண்கள் எத்தனையோ பேர். அழகு சம்பந்தப்பட்ட பிரபலமான சில நம்பிக்கைகளையும் அவை எந்தளவுக்கு உண்மையானவை என்பதற்கான விளக்கங்களையும் இங்கே தெளிவாக்கு கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.

காஸ்ட்லியான அழகுசாதனங்கள் மட்டுமே அழகை மேம்படுத்தும்? தவறு.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்

டெக்ஸ்ட்டை கீழாக அல்லது மேலாக அமைக்க: டாகுமெண்ட் ஒன்றில் நீங்கள் முக்கியத்துவம் காட்ட விரும்பும் சொற்களை மற்ற சொற்களிலிருந்து சற்று தூக்கியோ அல்லது இறக்கியோ காட்டுவது ஒரு ஸ்டைலாகும். இதனை வேர்ட் தொகுப்பில் எளிதாக அமைக்கலாம்.
1. எந்த சொற்களை இவ்வாறு அமைக்க வேண்டுமோ அவற்றை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2.பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font” தேர்ந்தெடுக்கவும்.
3. "Font” என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் "Text Effects” என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து "Position” என்ற இடத்திற்கு அருகே உள்ள பல ஆப்ஷன்ஸ் உள்ள பெட்டியில் "Normal”, “Raised” அல்லது "Lowered”. என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் எப்படி அமைய வேண்டும் என விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Continue reading →

பெண்களுக்கான சிறந்த வேலைகள் என்னென்ன?

பெண்கள் என்றாலே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கண்களைப் போன்றவர்கள் என்ற சிந்தனையை யாரும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இந்தியாவின் குடும்ப, சமூக மற்றும் கலாசார ரீதியான ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக இருப்பதோடு, நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பங்காற்றுபவர்களும் பெண்கள்தான்.
ஒரு காலத்தில் அடுப்பெரிக்கும் வேலைக்குத்தான் லாயக்கு என்ற ஆண்களை மையப்படுத்திய பாரபட்சமான சமூக நம்பிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து பெண்கள் ஒவ்வொரு வீட்டை மட்டுமல்ல, இந்த நாட்டையே காக்கும் ஆணிவேராக இருக்க முடியும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து வருகிறார்கள் இன்றைய பெண்கள்.
அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள உழைக்கும் மகளிரில் 80 சதவீதம் பேர் தங்கள் பணிக் கலாசாரத்திற்காக போற்றப்படுகிறார்கள். பொறுமை, கடின உழைப்பு, கண்டிப்பு, நேர்மை போன்ற சிறந்த குணங்களின் காரணமாக நிறுவனங்களும் அதிக அளவில் பெண்களைப் பணி நியமனம் செய்வதில் அக்கறை காட்டுகின்றன.
உழைக்கும் மகளிரின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள பெருவாரியான நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவது உண்மைதான் என்ற போதும், இந்த நிறுவனங்களின் முக்கிய பணிகளை நிறைவேற்றுவதில் பெண்கள் ஆண்களை விஞ்சி நிற்கிறார்கள் என்பதே அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய வரிகளாகும். இன்று இருக்கும் பணிச்சூழலில் பெண்களுக்கான நல்ல பணிவாய்ப்புகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
கணக்கியல் மற்றும் நிதி: ஒரு நிறுவனம் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அங்குள்ள வரவு செலவுக் கணக்குகளை பார்ப்பதோடு

Continue reading →