Daily Archives: மே 12th, 2014

தமிழகத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை,

தமிழகத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. 27 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 6 தொகுதிகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா 2 தொகுதிகளிலும், காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான பக்தர்களை தேடி…..

கடவுளின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமம் என்று உணராத ஒருவர், எத்தனை தான், தன்னை வருத்திக் கொண்டு தவம் செய்தாலும், ஞானத்தையோ, கடவுளின் அருளையோ பெற முடியாது என்பதற்கு, ராம பக்தையான சபரியே சாட்சி!
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின், காடு, மலை, வனம் என, எல்லா இடங்களிலும் சீதையை தேடி வருகிறார் ராமர். அவ்வாறு வரும் போது, சபரி இருந்த, மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கி, வந்து கொண்டிருந்தார்.
முக்தியை அளிக்கும் மூர்த்தியான ராமரின் வருகையை அறிந்த முனிவர்கள், அவரை வழியிலேயே சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒரு முனிவர், ‘ராமபிரானே… இங்கு ஒரு குளம் இருக்கிறது. அதன் நீர் முன்பு, தெளிந்து, சுத்தமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை சிறிது காலமாகவே, அந்தக் குளத்து நீர், புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்…’ என்றார். அதற்கு ராமர், ‘முனிவர்களே… சில காலங்களுக்கு முன், சபரி என்ற வேடுவ குல பெண்மணி இங்கு வசித்து வந்தாள். அவள் தினந்தோறும், அதிகாலையில் இருட்டு பிரிவதற்கு முன் எழுந்து, முனிவர்கள் நீராட வரும் இக்குளக்கரையின் வழியை பெருக்கி, தூய்மை செய்வாள்.
‘ஒருநாள் அவ்வாறு அவள் பெருக்கி கொண்டிருந்த போது, நீராடி விட்டு வந்து கொண்டிருந்த முனிவர் ஒருவரின் காலில், சபரியின் ஆடை லேசாக பட்டுவிட்டது.
‘உடனே அந்த முனிவர் கோபப்பட்டு, சபரியை ஏளனமாக பேசி, மறுபடியும் போய் குளத்தில் நீராடினார். தன்னலம் கருதாத, தெய்வ சிந்தனை மிகுந்த சபரியை ஏசியதால், இக்குளம் அன்றிலிருந்து முனிவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு, புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது…’ என்று, ராமர் சொல்லி முடித்ததும், ‘ராம பிரானே இக்குளம் தூய்மையாக வழியே இல்லையா…’ எனக் கேட்டனர் முனிவர்கள்.
‘உண்டு… பிரதிபலன் எதிர்பார்க்காத, தூய்மையான பக்தையான சபரியின் கால்பட்ட நீரை, அக்குளத்திற்குள் விட்டால், சுத்தமாக மாறி விடும்…’ என்றார்.
அதன்படி, சபரியின் கால்பட்ட நீரை குளத்தில் விட, குளம் தூய்மையானது.
குலத்தால் மட்டுமே ஒருவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆகிவிட முடியாது; நற்பண்புகளும், நல்லொழுக்கமும், தெய்வ சிந்தனையும், பிறருக்கு தீங்கிழைக்காத மனமும், தன்னலம் கருதா உள்ளம் கொண்டோரே, பகவானுக்கு பிரியமான பக்தர்கள். அவர்களை இறைவனே தேடி வருவார்.

மன அழுத்தம் குணமாக..

மன அழுத்தம் இப்போது ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிக மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மன நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, வராமல் எப்படி தடுப்பது, வந்தால் என்ன வைத்தியம் செய்வது?
ஓய்வில்லாத நெருக்கடியால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு பெரும்பாலும் வேலைச்சுமையால் இது ஏற்படுகிறது. தொழில் தோல்வியாலும் மனம் பாதிக்கும். மனைவியாலும் சிலருக்கு மனக் கவலை ஏற்படும். இதுவே மனநோயாக ஆகிவிடும்.
கணவன் – மனைவி உறவில் ஏற்படும் சிக்கலால் பெண்கள் மன நோயாளி ஆகின்றனர். இதை வெளியில் சொல்ல முடியாது. மனதுக்குள் வைத்தே மருகி, நோயாளி ஆகிவிடுவர்.

Continue reading →