Daily Archives: மே 13th, 2014

உணவு யுத்தம் -4

u1

Continue reading →

பதட்டத்தில் இருவர் -நக்கீரன் 13.05.2014

n1

Continue reading →

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் பெருகி வரும் ரசாயண கலவை மாங்கனிகள்!

ரசாயண கலவை மாங்கனிகள்

 

 

 

 

 

 

 

 

 

காரைக்கால்:  மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால், காரைக்காலில் ரசாயண கலவையால் பழுக்க வைக்கப்பட்ட மாங்கனிகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், வயிற்று வலி, வாந்திபேதிக்கு, போன்ற பிரச்சனைக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடுவதால், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களில், பெரும்பாலன நகர் பகுதிகளில் இருந்து, மாங்கனிகளை பழுப்பதற்கு முன்னதாக, காயாக பறித்து ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இவை லாரி லாரியாய் காரைக்கால் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வருகிறது. அவற்றை வாங்கும் வியாபாரிகள் அதனை வைகோல்களுக்கு மத்தியில் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை வைத்து பழுக்க வைக்க நேரமின்மையால், கார்பைட் கற்களை கொண்டு ஒரே இரவில் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக கார்பைட் கற்களுக்கு மாற்றாக, டாக்பான் எனும் ரசாயண கலவையை பயன்படுத்தி ஒரே இரவில் மாங்காய்களை பழமாக்கி விற்பனை செய்து Continue reading →

வேர்ட் டாகுமெண்ட் சார்ந்த புள்ளி விவரங்கள்

நாம் டாகுமெண்ட்களை எம்.எஸ். வேர்ட் மூலம் தயாரிக்கையில், டாகுமெண்ட் குறித்த பல்வேறு தகவல்களை, வேர்ட் தொடர்ந்து சேகரிக்கிறது. பைல் பெயர், டைரக்டரி, டெம்ப்ளேட், டாகுமெண்ட்டின் தலைப்பு போன்றவை மிக சாதாரணமாக சேகரிக்கப்படும் தகவல்களாகும். ஆனால், இவற்றோடு, யார் இறுதியாக அந்த டாகுமெண்ட்டினைக் கையாண்டார்கள், இறுதியாக எப்போது அது அச்சிடப்பட்டது, டாகுமெண்ட்டினை திருத்த எடுத்துக் கொள்ளப் பட்ட மொத்த நேரம் எனப் பிற தகவல்களும் எடுக்கப்படுகின்றன.
டாகுமெண்ட் ஒன்றின் புள்ளி விபரங்களைக் காண உங்களுக்

Continue reading →

வருகிறது அழகர் குதிரை!–மே 14 – சித்ரா பவுர்ணமி

சித்ரா பவுர்ணமியன்று, மதுரையில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏன் இவ்விழாவை, இந்த நாளில் தேர்ந்தெடுத்தனர் தெரியுமா?
சித்திரை பவுர்ணமியில், நிலவின் முழு கதிர்களும், உலகத்தின் மேல் படுகிறது. இதன் காரணமாக, மன ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. நவக்கிரகங்களில், சந்திரனே மக்களுக்கு மனபலத்தை அளிப்பவர். இவரை ஜோதிடத்தில், மனோகாரகன் என்பர்.
இதனால் தான், அக்காலத்தில், சித்ரா பவுர்ணமியன்று, புதுமணத் தம்பதிகள் நதிக்கரைகளில், சித்ரான்ன வகைகளுடன் கூடி மகிழ்ந்தனர். அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ, இந்த சந்திரன் உதவியிருக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த நாளில், அழகர் அதிகாலையில், குதிரை வாகனத்தின் மீது ஏறி, வைகையாற்றில் இறங்குகிறார். இக்குதிரையின் நான்கு கால்களும், அறம், பொருள், இன்பம், வீடுபேறு (மோட்சம்) போன்றவற்றை குறிக்கிறது.
தர்மப்படி பொருள் சேர்த்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும். இன்பவாழ்வு வாழ்பவன், பொருளின் நிலையற்ற தன்மையை அறிந்து, இறைவனின் திருவடியை அடைவான் என்பதை, இந்தக் கால்கள் உணர்த்துகின்றன
குதிரையின் காதுகளை கர்மகாண்டம், ஞானகாண்டம் என்று சொல்வர். கர்மம் என்றால், பணி. எவன் ஒருவன், தன் ஆன்மிகப் பணியை (அன்றாட வழிபாடு) தவறாமல் செய்து வருகிறானோ, அவனுக்கு, ‘இந்த உலக வாழ்வு தற்காலிகமானது…’ என்ற, ஞானம் கிடைத்து விடும்.
குதிரையின் கண்களை, அபர ஞானம் என்றும் பர ஞானம் என்று சொல்வர். இளமையில், உலக இன்பங்களை பெரிதாக நினைக்கும் நமக்கு, காலம் போகப் போக, கடவுளே பெரிதென்ற ஞானம் வந்து விடுகிறது. ‘ஏன்…முதுமை வரை காத்திருக்க வேண்டும். இப்போதே பரஞானம் என்னும் கடவுளைப் பற்றிய அறிவை, பெற்றுக் கொள்ள வேண்டியது தானே… அதற்காகத்தானே கூரிய பார்வையுடைய கண்கள் உனக்கு தரப்பட்டிருக்கின்றன…’ என்கிறார் அழகர்.
குதிரையின் முதுகு, பிரபஞ்சமாகிய இந்த உலகத்தைக் குறிக்கிறது. உலகம் என்றால் பூலோகம் மட்டுமல்ல, சகல உலகங்களும் தனக்கு கட்டுப்பட்டவை என்பதால், அழகர் அதன் மேல் அமர்ந்திருக்கிறார். திறமை படைத்த வீரன் செலுத்தும் குதிரை, செல்ல வேண்டிய இடத்தைச் சரியாக சென்றடைவது போல, மனக்குதிரையை அடக்கி, சரியான வழியில் செலுத்துபவன், வாழ்வில் வெற்றி பெறுவான் என்பதை, அழகரின் குதிரை வாகனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
எனவே, அழகரின் தங்கக் குதிரையின் அழகை மட்டும் ரசித்து வராமல், அர்த்தம் புரிந்து அவரை தரிசிப்போம். அவரது திருவடி நிழலில் வாழும் பேறு பெறுவோம்.