Daily Archives: மே 18th, 2014

குரோம் பிரவுசர் டிப்ஸ்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பல பிழையான குறியீடுகள் காரணமாக, அதன் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகச் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இதனால், பல பயனாளர்கள் குரோம் பிரவுசருக்கு மாறத் தொடங்கினர். இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக குரோம் உள்ளது. அதில் விரைவாகவும் எளிதாகவும் பயன் பெறும் வகையிலான சில டிப்ஸ்கள் இங்கு வழங்கப்படுகின்றன.
1. இணைய தளம் ஒன்றைத் திறந்தவுடன், அதில் உள்ள வீடியோக்களும் மற்ற ப்ளாஷ் பைல்களும் தாமாக இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டுமா? குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் chrome://settings/content என டைப் செய்து கிடைக்கும் தளம் செல்லவும். இங்கு கீழாகச் சென்றால், "Plugins” என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் "Click to play.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அனைத்து மல்ட்டி மீடியா பைல்களும் அதன் நிலை மறைக்கப்பட்ட (grayedout) பெட்டிகளாகத் தோற்றமளிக்கும். இதில் கிளிக் செய்தால் இவை இயக்கப்படும். சில குறிப்பிட்ட தளங்கள் தாமாக இயக்கப்படக் கூடாது என முடிவு எடுக்க விரும்பினால், "Manage exceptions” என்ற பட்டன் அழுத்தி அவற்றைத் தரலாம்.

Continue reading →

எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு?அ.தி.மு.க., – 44.3%; தி.மு.க., – 23.6%

தமிழகத்தில், 16வது லோக்சபாவுக்கான தேர்தல், கடந்த ஏப்ரல், 24ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள, 5.3 கோடி வாக்காளர்களில், 73.82 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. 39 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம், நான்கு கோடியே, 3 லட்சத்து 93 ஆயிரத்து 657 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

அவற்றில், 44.3 சதவீத ஓட்டுகளை பெற்ற, அ.தி.மு.க., 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 23.6 சதவீத ஓட்டுகள் பெற்ற தி.மு.க.,வால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. வெறும் 5.5 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ள பா.ஜ., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், 4.4 சதவீத ஓட்டுகள் வாங்கிய பா.ம.க.,வும் ஒரு இடத்தில் ஜெயித்துள்ளது. தமிழகத்தில் பதிவான ஓட்டுகளில், கட்சிகள் பெற்ற பங்கு மற்றும் சதவீதம் உள்ளிட்ட விவரங்களை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

அ.தி.மு.க.,
மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளை பிடித்து, அமோக வெற்றி பெற்றுள்ள ஆளும் அ.தி.மு.க.,வுக்கு, ஒரு கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதாவது, பதிவான ஓட்டுகளில், 44.3 சதவீதம் இக்கட்சிக்கு கிடைத்துள்ளது. கூட்டணியின்றி, தனித்துப் போட்டியிட்டு இக்கட்சி, இவ்வளவு ஓட்டுகளை பெற்று, தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

தி.மு.க.,
தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க.,வுக்கு, 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்துள்ளன. பதிவான ஓட்டுகளில், 23.6 சதவீதம் பெற்றும், இக்கட்சியால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

பா.ஜ.,
இந்த தேர்தலில், தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட

Continue reading →

‘ அழகிரி என்ற ஒரு புள்ளையே இல்லை ‘- கருணாநிதி பதிலில் ஆதங்கம்

சென்னை: நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். ஸ்டாலின் ராஜினாமா தொடர்பாக அழகிரி இது ஒரு நாடகம் என கூறுகின்றனரே என நிருபர்கள் கேட்டபோது, நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை , அழகிரி என்ற ஒரு புள்ளை இருந்ததாக வே நான் கருதவில்லை. அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. என்று கோபமாக பதில் அளித்தார்.

லோக்சபா தேர்தலில் தி.முக., படுதோல்வி அடைந்ததை்த தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று திமுக., பொருளாளர் ஸ்டாலின், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை திமுக., தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தார். அதை கருணாநிதி ஏற்க மறுத்து விட்டார். ஸ்டாலினின் இந்த செயல் வெறும் நாடகமே என்று மு.க.அழகிரி காட்டமாக கருத்து தெரிவித்தள்ளார்.
ஸ்டாலின் ராஜினாமா குறித்து திமுக., முதன்மை செயலாளர் துரை முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டாலின் தனது ராஜினாமவை வற்புறுத்தவில்லை; கருணாநிதியும் அதை ஏற்க மறுத்து விட்டார் என்றார்.

அழகிரி சாடல் : தமிழகத்தில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வில் ( ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை) சலசலப்பு எழுந்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஏற்கனவே தோல்வி குறித்து எச்சரித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (தற்போது தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்) தேர்தல் முடிவுகள் வந்த போதும் இந்த தோல்விக்கு காரணமானவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில் மு.க., ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து கட்சி தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறி கட்சியில் வகிக்கும் பொருளாளர் பதவி மற்றும் இளைஞரணி

Continue reading →

மகிழ்ச்சிதான்… ஆனாலும் மகிழ்ச்சி இல்லை -நக்கீரன்

n1

Continue reading →

உணவு யுத்தம்!-6

இது ஓட்ஸ் அரசியல்!

 

உணவு உற்பத்தியைப் பெருக்குவதும், முறையாக உணவைப் பகிர்ந்து தருவதும் அரசின் தலையாய கடமை. இதற்கு உற்பத்தி மற்றும் விநியோக முறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பது என்ன?

உணவு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், தன்னிறைவு பெறுவதே தங்களின் நோக்கம் என்று ஒரு காலத்தில் அரசாங்கம் முழக்கமிட்டது. இன்று விவசாயிகளைப் பார்த்து, ‘ஏன் விவசாயம் பார்க்கிறீர்கள்… விட்டுவிட வேண்டியதுதானே?’ என்று கேட்கும் நிலையை அரசே உருவாக்கி உள்ளது.

விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்களும் உர நிறுவனங்களின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளும் ஒன்றுசேர்ந்துதான் இன்று உணவுப் பிரச்னையாக வெடித்திருக்கிறது.

Continue reading →