Daily Archives: மே 19th, 2014

இங்கு லேடி அலை

k1

Continue reading →

பிங் பயன்படுத்தினால் 100 ஜிபி இலவச இடம்!

க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது.

Continue reading →

இதய ரத்த குழாயில் அடைப்பு என்றால், ‘ஆபரேஷன்’ தான் தீர்வா?

பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்

இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.
1. இதய நோய்க்கு, டி.எம்.டி., பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?
‘டிரெட் மில் டெஸ்ட்’ என்பதையே, சுருக்கமாக டி.எம்.டி., என்கின்றனர். இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இது. இன்னும் சொல்வது என்றால், அதிக வேலைகள் செய்யும் போது, எனர்ஜி தேவை. அதற்கேற்ப இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால், அவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படும். இந்த வலி எதனால், எந்த மாதிரியான கடின வேலை செய்யும் போது வருகிறது என, கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை இது.

2. இந்த பரிசோதனை எப்படி செய்யப்படும்?

Continue reading →

நல்லதே நினை; நல்லதே நடக்கும்!

‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி. பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன், அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே வினையாக முடிந்து விடும். அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை; நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:
ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர். சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில் வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த சொரூபி. அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன் என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை, தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது. அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம், கையெழுத்தும் வாங்கி விட்டார்.
கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன், ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர் வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.
நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து, ‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து எரிகிறது…’ என்று, பதறினான்.
அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய், தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.
வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன். அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும் பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில், தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.
அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார். ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம் அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’ என, வேண்டினார். ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன் செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும், நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.