Daily Archives: மே 20th, 2014

டொமைன்ஸ் ஸ்நிப்பர் (Domain Sniper)

பரவலாக மக்களிடையே புகழ் பெற்ற இணைய தளங்கள், தங்கள் பதிவுகளை, அதற்கான அத்தாட்சி பெற்ற இணைய அமைப்புகளிடம் புதுப்பிக்காமல் போனால், அவை அந்த தளப் பெயரில் தொடர்ந்து இயங்க முடியாது. இது கவனக் குறைவால் ஏற்படும் தவறாகும்.இத்தகைய புதுப்பிக்கப்படாமல் போன தளங்களை, ஒரு தனி நபர் அல்லது அமைப்பு வாங்கி, தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்வார்கள். பின்னர், அதற்கு முன்பு வைத்திருந்த நிறுவனங்களிடம், கூடுதலாகக் கட்டணம் செலுத்தினால், அவர்களுக்கே தருவதாக வியாபாரம் பேசுவார்கள். இதற்காக, இந்த தளப் பெயருக்கு வரும் வாடிக்கையாளர்களை, வேறு ஒரு பாலியல் தளத்திற்குக் கொண்டு செல்வார்கள். இதனால், ஏற்கனவே இந்த தளத்தை வைத்திருந்த நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும். இந்த ரசாபாசத்தை தவிர்க்க, டொமைன் ஸ்நிப்பர் கேட்கும் தொகையைப் பழைய நிறுவனம் வழங்கிவிடும்.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு…

"மெனோபாஸ்’ கடந்த பெண்களா நீங்கள்…:
"அந்த’ மூன்று நாட்கள், சில பெண்களுக்கு தொல்லையாக இருக்கும். நாற்பது வயதை கடந்த பின், அந்த பிரச்னையால், பாதிப்பு அதிகமாகி, புதிய தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, நாற்பது வயதைத் தாண்டிய அனைத்து பெண்களும், "மெனோபாஸ்’ தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
இந்த காலங்களில், உடல் கொதிப்பு, இரவில் வியர்வை, மர்ம உறுப்பு வறட்சி, எரிச்சல், அரிப்பு, உடலுறவின் போது வேதனை, சிறுநீரை அடக்கி வைக்க முடியாமை, நினைவாற்றல் குறைதல், கவனக்குறைவு முதலிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
அண்மையில், மும்பையில் நடத்திய ஆய்வில், படித்த பெண்களில் 30 சதவீத்தினரே, மாதவிலக்கு நிற்பது குறித்து அறிந்து வைத்திருக்கின்றனர். இவர்களும் கூட, "மெனோபாஸ்’ என்ற சொல்லை மட்டுமே தெரிந்து வைத்திருக்கின்றனரே தவிர, அதைப் பற்றிய விவரங்களை அறிந்திருக்கவில்லை.
இந்த ஆய்வு கூறும் மற்றொரு தகவல், 40 வயதான, 15 சதவீதப் பெண்களுக்கு, எந்த

Continue reading →