Daily Archives: மே 21st, 2014

சர்வாதிகாரம் கேட்கிறார் ஸ்டாலின்!-ஜூனியர் விகடன்

ஞாயிற்றுக்கிழமை முழுக்க கோபால​புரம், அண்ணா அறிவாலயம், ஸ்டாலின் வீடு இருக்கும் செனடாப் ரோடு, சி.ஐ.டி காலனி ஆகிய பகுதிகளில் வட்டமடித்து செய்தி திரட்டிய உற்சாகத்துடன் கழுகார் வந்தார்.

 

”ஒரே நாளில் முடிந்துவிட்டதோ?” என்றோம் இதனைத் தெரிந்துகொண்டு! ”முடிந்துவிட்டது என்று யார் சொன்னது?” என்று அர்த்தமுள்ள பதிலாகச் சொல்லிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தார்.

Continue reading →

எக்ஸ்ட்ராநெட்!

எக்ஸ்ட்ராநெட் என்றால் எதனைக் குறிக்கிறது என்று பார்க் கலாம். தனிப்பட்ட முறையில் அமைத்து இயக்கப்படும் நெட்வொர்க் அல்லது இணையதளத்தினை இந்த சொல் (Extranet) குறிக்கிறது. இதனைப் பொதுமக்கள் அணுகிப் பயன்படுத்தவோ, பார்க்கவோ முடியாது. நிறுவனம் ஒன்றின் எக்ஸ்ட்ரா நெட் அமைப்பினை, அதன் வாடிக்கையாளர்கள்,

Continue reading →

தெரியும் ஆனா தெரியாது!

"முதலீடு பற்றி சொல்வதெல்லாம் இருக்கட்டும்; எந்த முதலீட்டுக்குப் போனாலும் பான் கார்டு இருக்குதானு கேட்கறாங்களே என்ன பண்றது? போற போக்கைப் பார்த்தால் ஒரு கிலோ அரிசி வாங்கனும்னாக்கூட பான் கார்டு வேணும்னு சொல்வாங்க போல இருக்கு. எதுக்கு இந்த பான் கார்டு தொந்தரவு..?’ என்று சலிப்போடு சொன்னார் வாக்கிங் செல்லும் வழியில் சந்தித்த பெரியவர் ஒருவர். "தெனாலிராமன்’ வடிவேலு பாணியில் "எல்லாம் நன்மைக்கே!’ என்றேன்.
பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார் அந்தப் பெரியவர், "எது சார் நன்மை? போனவாரம், என் பையன் பேர்ல பணம் போட பேங்குக்கு போனேன். ஐம்பதாயிரம் ரூபா அவசரமா வேணும்னு கேட்டிருந்தான். பிள்ளைக்கு என்ன அவசரமோனு அடிச்சுப் புடிச்சு பேங்குக்கு போனா உங்க பான் நம்பர் என்னன்னு கேட்கிறாங்க. என் புள்ளைக்கு நான் பணம் அனுப்பறதுக்கு எதுக்குங்க நம்பர் எல்லாம் சொல்லணும்? அதுவும் ஒளிச்சு மறைச்சு நான் கொடுக்கப் போறதில்லை. என் மகனோட பேங்க் அக்கவுண்ட்லதான் கட்ட போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி?’ என்று அவர் கேட்டபோது, பான் கார்டு என்ற விஷயம் அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளை உணர முடிந்தது.
பான் கார்டு பற்றி நம்மில் பலருக்கு இருக்கும் புரிதல் இதுதான். அது ஏதோ நம்மைக் கண்காணிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி இருக்கும் சிஸ்டம்; நம்முடைய பணப் பரிமாற்றங்களைக் கண்காணித்து வரி பிடிக்க செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதுதான் பலருடைய மனதில் இருக்கும் எண்ணம்.
உண்மை அதுதானே? நீங்கள் எந்த அடிப்படையில் எல்லாம் நன்மைக்கேனு சொன்னீங்க…? என்று கேட்கிறீர்களா! வாங்க உட்கார்ந்து டீடெய்லா பேசலாம். பெரிவருக்குச் சொன்ன விஷயங்களை உங்களுக்கும் சொல்கிறேன்.
தன் மகனுக்காக ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டச் சென்ற அந்தப் பெரியவர் அந்தப் பணத்தை யாரிடம் இருந்து திருடிக் கொண்டு வரவில்லை. பொய்யான வழியில் சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது இது என் பணம் என்று சொல்வதில் அவருக்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது? அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அவரால் வெளிப்படையாக தைரியமாகச் சொல்ல முடியும் என்கிறபோது அதைச் சொல்வதில் என்ன கஷ்டம்?
சரி, இப்படி யோசித்துப் பாருங்கள். அந்தப் பெரியவர் ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டி விடுகிறார். மகனும் அந்தப் பணத்தை எடுத்து தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலில் மகன் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டு வருகிறது. அதாவது ஒரு நபரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். குற்றச்சாட்டைச் சொன்ன நபர், அந்த மகனுடைய வங்கிக் கணக்கை பரிசோதித்துப் பாருங்கள் என்று சொல்ல, வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் வரவு வைக்கப்பட்ட விவரம் இருக்கிறது. உண்மையில் அந்தப் பணம் அந்தப் பெரியவர் தன் மகனுக்காக கொடுக்கப்பட்ட பணம். ஆனால் வங்கியைப் பொறுத்த அளவில் யார் வேண்டுமானாலும் பணம் கட்டலாம். சந்தேகம் வரக்கூடாது என்பதால் அப்பாவின் பெயரில் அவர் ஊருக்கே போய் லஞ்சப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியவர் சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். இதுவே, பெரியவர் தன் பான் கார்டு எண்ணுடன் டெபாசிட் செய்திருந்தால் அது ஓர் ஆதாரமாக இருந்திருக்கும்.
இதைச் சொன்னதும் அந்தப் பெரியவர் ஆடிப் போய்விட்டார். "இதில் இவ்ளோ விஷயம் இருக்கா?’ என்றார். "பான் கார்டை வாங்கிவிட்டால் ஆண்டுதோறும் வருமான வரி கட்ட வேண்டி வந்துவிடுமே, அதுதான் பயமாக இருக்கிறது’ என்று சொல்பவர்களா நீங்கள்? நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பான் கார்டுக்கும் வருமான வரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களிடம் பான் கார்டு இருந்தால் நீங்கள் வரித் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. பான் கார்டு என்பது உங்களுடைய நிதி தொடர்பான விஷயங்களை வரையறுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுதான். அதனால் எல்லாருமே பான் கார்டு வாங்கிக் கொள்வது நல்லது.
பான் கார்டு எல்லாருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஆதாரம். ஆமாம், நாங்கள் ரயில்வேயில் பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு ஆதாரமாக அதைத்தான் காட்டுவோம் என்கிறீர்களா? அது ரயில்வே ஆதார அட்டை இல்லை. அதற்கான பலன்களே வேறு! நிதி தொடர்பான தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய எண் அது.
மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால் பரவாயில்லை. அது இல்லாமல் சேவைக்கான பணத்தைப் பெறுபவராக இருந்தால் பணம் கொடுக்கும் நிறுவனம் ட்டி.டி.எஸ் எனபபடும் அந்த வருமானத்துக்கான வரியைப் பிடித்துக் கொள்ளும் நடைமுறை இருக்கிறது. அந்தத் தொகையை நம்முடைய கணக்கில் போட்டு வைக்க வேண்டும். அதற்கு பான் கார்டு எண்தான் உதவியாக இருக்கும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதை அறிய நமக்கு பான் எண் அவசியம்.
இதோ வருமான வரி பற்றிய கருத்து வந்துவிட்டதே என்று சொல்கிறீர்களா? உண்மைதான்! ஆனால், இது பெரிய அளவில் வருமானம் ஈட்டுபவர்களுக்கான கருத்து. எவ்வளவு சம்பாதித்தாலும், வருமான வரிக்கு பயந்து முறையாக கணக்கு காட்டாமல் சிலர் இருப்பார்கள். அவர்களை வளைத்துக் கொண்டு வருவதற்கான இந்த ஏற்பாடு. நிறுவனங்கள் சம்பளமாகவோ சன்மானமாகவோ கொடுத்தால் அதற்கான ட்டி.டி.எஸ். தொகையை பிடித்தம் செய்து கட்டிவிட வேண்டும். சம்பளம் அல்லது சன்மானம் பெறுபவர் தன் வருமான கணக்கைக் காட்டி அந்தத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆக, எப்படியாக இருந்தாலும் பான் கார்டு வாங்க வேண்டும் என்பது முடிவாகிவிட்டது.

உணவு யுத்தம்!-7

 

‘பகீர்’ பானங்கள்!

 

கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் ஏதாவது குடிக்கலாம் என்று தேடினால் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மட்டுமே கிடைக்கின்றன. உணவுச் சந்தையில் கேள்வியே இல்லாமல் கொள்ளையடிக்கப்படுகிற பொருள் குளிர்பானங்கள்தான். முன்பு வீட்டுக்கு யாராவது முக்கிய விருந்தினர் வந்துவிட்டால் சோடா, கலர் வாங்கிவந்து தருவார்கள். விருந்தினர் குடித்தது போக மிச்சம் வைத்த கலரைக் குடிக்க போட்டா போட்டி நடக்கும்.

திருமண வீடுகள், திருவிழாக்களில் கலர் குடிப்பது என்பது சந்தோஷத்தின் அடையாளம். சாக்ரீம் பவுடரைத் தண்ணீரில் கரைத்து ஒரு பாட்டில் கலர் ஐந்து பைசா என பள்ளியில் விற்பார்கள். வாங்கிக் குடித்திருக்கிறேன்.

இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். ‘நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். ‘கழுதை விட்டையில் முன்விட்டை என்ன… பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.

ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!

இந்தக் குளிர்பான நிறுவனங்கள் நோ டு H2o அதாவது தண்ணீரை வேண்டாம் என்று ஒதுக்குங்கள் என்று ஒரு புதிய முழக்கத்தை உலகெங்கும்

Continue reading →