எக்ஸெல்: படுக்கை வரிசையின் உயரம்!

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில்,செல் ஒன்றில், நாம் திரையில் காண்பதைக் காட்டிலும், அதிகமாக டெக்ஸ்ட்டினை அமைக்கலாம். இதற்கு நெட்டு வரிசையின் அகலத்தை அதிகப்படுத்தலாம். ஆனால், இது சரியான தீர்வு அல்ல. இதற்குப் பதிலாக, செல் உள்ளாக, டெக்ஸ்ட்டினை மடக்கி அடுத்த வரிக்குக் கொண்டு செல்லலாம். இதற்காக, படுக்கை வரிசையின் உயரத்தினை அதிகப்படுத்தலாம். கீழ்க்கண்ட வகையில் செயல் பாடுகளை இதற்கென மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
1. எந்த செல்களை இவ்வாறு மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Ctrl+Shift+F ஆகிய கீகளை ஒருசேர அழுத்தவும். எக்ஸெல் Format Cells என்ற டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டும்.
3. இங்கு காட்டப்படும் டேப்களில் Alignment டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. Wrap Text செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் படுக்கை வரிசையின் உயரம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என வரையறை செய்யவில்லை என்றால், அது தானாகவே, தன் உயரத்தினை அதிகப்படுத்திக் கொள்ளும். அவ்வாறு தானாக அதிகப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், மேலே காட்டிய செயல்பாடுகளை மேற்கொண்ட பின்னர், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. படுக்கை வரிசையினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Home டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. Cells குரூப் உள்ளாக Format என்பதில் கிளிக் செய்திடவும்.
4. எக்ஸெல் இங்கு நீங்கள் தேர்வு செய்திட, கீழ் விரி மெனு ஒன்றினைத் தரும்.
5. இந்த மெனுவில், Auto Fit Row Height என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டெக்ஸ்ட் தானாக வளைக்கப்பட்டு, அந்த செல்லுக்காகவே அமைக்கப்பட்டு, நன்றாகக் காட்டப்படும்.

%d bloggers like this: