பாப் அப் எச்சரிக்கை!

இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், பாப் அப் வழி எச்சரிக்கை வழங்கத் தொடங்கிவிட்டது. இனிமேல், எந்தவிதமான சப்போர்ட் பைல் அல்லது பேட்ச் பைல் வழங்கப்பட மாட்டாது என்ற செய்தி பாப் அப் கட்டம் மூலம் தரப்படுகிறது. விண்டோஸ் அப்டேட் செயலி மூலம் இது தரப்படுகிறது. இதனையும், ஒரு செக் பாக்ஸ் மூலம் விருப்பமில்லாதவர்கள் நிறுத்திக் கொள்ளலாம்.

புது வீடு செல்பவர்களுக்கு, தங்கள் பழைய வீட்டு பொருட்களை எல்லாம் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் மூலம் எடுத்துச் செல்வது போல, மைக்ரோசாப்ட், எக்ஸ்பியிலிருந்து வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்பவர்களுக்கென, பைல்களை மாற்றிக் கொள்ள புதியதொரு டூல் ஒன்றினை இலவசமாக வழங்குகிறது. இதன் பெயர் PCmover Express. இந்த டூல், யூசர் பைல்களையும், செட்டிங்ஸ்களையும், விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்திற்கு மாற்றித் தருகிறது. இந்த டூலினை Laplink என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பைல்கள் எப்படி நகர்த்தப்பட வேண்டும் என்பதனைத் துல்லியமாக செட் செய்து நகர்த்திக் கொள்ளலாம்.
இந்த டூல் இந்த வாரம் முதல் Windowsxp.com என்ற இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த டூல் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் கிடைக்கிறது. தொடர்ந்து கொரியன், சைனீஸ், ரஷ்யன் மற்றும் பிரேசிலியன் மொழிகளில் கிடைக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாறிக் கொள்பவர்கள், தாங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் புதிய பதிப்பினை, இதே நிறுவனத்திடம் இருந்து சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் கூட பன்னாட்டளவில் விண்டோஸ் எக்ஸ்பி 29% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: