Daily Archives: மே 26th, 2014

நாட்டின் 15வது பிரமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

டெல்லி: நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி பதிவியேற்பை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை விழாக்காலம் பூண்டது. நாட்டின்  14வது பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியடியின் பதவியேற்பில் சார்க் அமைப்பின் 7  நாடுகளை கொண்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த பதவியேற்பு விழாவில் 3,000  பேர் விருந்திருந்தினர்களாக பங்கேற்கின்றனர். பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, எம்.எம்.ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராம் மாதவ் ஆகியோர் பதவியேற்பிற்கு வந்துள்ளனர்.
மேலும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்ளிட்டோரும் பதவியேற்பில் பங்கேற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாய்டு ஜனாதிபதி மாளிகை வந்தார். அமித் ஷா ஜனாதிபதி மாளிகை வந்தார். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஹ்ரிதிக் ரோஷன் ராகேஷ் ரோஷன் டெல்லி வந்தனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடி பதவியேற்பு விழாவிற்கு வந்தார். மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர்.
பதவியேற்பு விழாவுக்க வந்த சோனியா அத்வானியை சந்தித்து புதிய அரசுக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் திரை நட்சத்திரங்கள் சல்மான்கான், விவேக் ஓப்ராய் உள்ளிட்டோரும் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் உள்ளிட்டடோரும் பங்கேற்றுள்ளனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மாளிகைக்கு வந்தடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் மோடி, மோடி என்று கூச்சலிட்டனர்.  இந்தியாவின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திடலுக்கு வந்தடைந்தவுடன் தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.  நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நரேந்திர மோடியைத் தொடர்ந்து,
2. ராஜ்நாத் சிங்
3. சுஷ்மா சுவராஜ்
4. அருண் ஜேட்லி
5. வெங்கையா நாயுடு
6. நிதின் கட்கரி
7. சதானந்த கவுடா
8. உமா பாரதி
9. நஜ்மா ஹெப்துல்லா
10. கோபினாத் முண்டே
11. ராம்விலாஸ் பாஸ்வான்
12. கல்ராஜ் மிஸ்ரா
13. மேனகா காந்தி
14. அனந்த் குமார்
15. ரவிசங்கர் பிரசாத்
16. அசோக் கஜபதி ராஜு
17. அனந்த கங்காராவ் கீதே
18. ஹர்சிம்ரத் பாதல்
19. நரேந்திர சிங் தோமர்
20. ஜுவல் ஓராம்
21. ராதா மோகன் சிங்
22. தாவர் சந்த் காலோட்
23. ஸ்மிருதி இரானி
24. ஹர்ஷவர்தன்
மத்திய இணை அமைச்சர்களாக,
25. தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சராக ஜெனரல் வி.கே.சிங்
26. இந்திரஜித் சிங்
27. சந்தோஷ் குமார் கங்குவார்
28. ஸ்ரீபாத நாயக்
29. தர்மேந்திர பிரதான்
30. சர்பானந்த சானோவால்
31. பிரகாஷ் ஜவடேக்கர்
32. பியூஸ் கோயல்
33. டாக்டர் ஜிதேந்திர சிங்
34. நிர்மலா சீதாராமன்
35. ஜி.எஸ்.சித்தேஸ்வரா
36. மனோஜ் சின்கா
37. நிஹால் சந்த்
38. உபேந்திர குஷ்வாகா
39. பொன்.ராதாகிருஷ்ணன்
40. கிரண் ரிஜி ஜு
41. கிரிஷன் பால் குஜ்ஜார்
42. சஞ்சீவ் குமார் பாலியன்
43. மன்சுக்பாய் வசாவா
44. தாதாராவ் தான்வே
45. விஷ்ணு தேவ் சாய்
46. சுதர்ஷன் பகத்
உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதிவியேற்றனர்.

விஜயகாந்தை நெகிழவைத்த மோடி!

பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு போயிருந்தது. அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தே.மு.தி.க சார்பில் மூன்று இருக்கைகள் கேட்டார்களாம். தயக்கம் இல்லாமல் தரச் சொல்லிவிட்டாராம் ராஜ்நாத் சிங். எனவே, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய மூவரும் சென்றிருந்தார்கள். இந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் டெல்லி சென்ற வைகோ, அங்கு மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துவிட்டு திருச்சி வந்துவிட்டார். ம.தி.மு.க மூத்தத் தலைவர்களில் ஒருவரான மலர்மன்னன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்துவிட்டார். அவருக்குப் பதிலாக ஈரோடு கணேசமூர்த்தி வந்தார். அன்புமணி ராமதாஸ், கொங்கு ஈஸ்வரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோரும் சென்றிருந்தார்கள்.

Continue reading →

உணவு யுத்தம்!-8(ஜூனியர் விகடன்)

சர்பத்… பழம்.. மோர்!

பிரமாண்டமான முதலீடு, விரிவான வலைப்பின்னல் போன்ற விநியோகம் அசுரத்தனமான பகட்டு விளம்பரங்கள்… இவை காரணமாக இந்தியாவில் இந்த நிறுவனங்கள் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 93 சதவிகிதம் அமெரிக்க பானங்களிடம் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

உலகம் முழுவதும் குளிர்பானங்களை அதிகம் குடிப்பதன் காரணமாக ஆண்டுக்கு 1,80,000 பேர் இறந்துபோகிறார்கள் என்கிறது அமெரிக்க மருத்துவக் கழக அறிக்கை. இதில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,000. இதய பாதிப்பு காரணமாக இறந்துபோகிறவர்கள் 44,000 பேர். ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் 6.000 பேர் இறந்துபோகிறார்கள்.

Continue reading →

எக்ஸெல்: செல் ரேஞ்ச்!

எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன.

Continue reading →

வைட்டமின் வழிகாட்டி!

சுவை அறிந்து சாப்பிடுவதைவிடச் சத்து அறிந்து உணவைச் சாப்பிடுவதே நோய் நொடியில்லாமல்  உடலை வைத்திருக்க உதவும்.  உயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும்  வைட்டமின்களும், தாது உப்புக்களும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.

வைட்டமின்களில் கொழுப்பில் கரையக்கூடியன நீரில் கரையக்கூடியன என்று இரண்டு வகைகள் உண்டு. வைட்டமின் A,D,E,K-ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியன.  இவை தேவைக்கு அதிகமாக இருந்தால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

B1, B2, B3, B5, B6, B9, B12,  வைட்டமின் C ஆகியவை நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். அதனால் காய்கறி மற்றும் பருப்பு வகைகளில் இவை உண்டு.  அதனால், அதிகம் கழுவக்கூடாது. இவை தேவைக்கு அதிகமாக உடலில் சேர்ந்து விடுமோ என்றும் பயப்படத்தேவை இல்லை. கூடுதலாக உள்ளவை சிறுநீரில் வெளியேறிவிடும்.

 

எந்த வைட்டமின் எந்த உணவில் இருக்கிறது, அந்த வைட்டமின் ஏன் அவசியம், அது உடம்பில் எப்படிச் செயல்படும், அது இல்லை என்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும், நாள் ஒன்றுக்கு உடலுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பன போன்ற தகவல்களும் இந்தக் கையேட்டில் உண்டு.

Continue reading →

மஞ்சள் இருக்க அஞ்சேல்!

ஞ்சளை ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள். இதன் அறிவியல் பெயர், ‘கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள ‘கர்க்குமின்’ (Curcumin)  என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.

‘கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது. 

Continue reading →