எக்ஸெல்: செல் ரேஞ்ச்!

எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன.

முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிறுத்தக் குறியீடுகள் சாதாரண டெக்ஸ்ட்டில் வருவது போல சொற்களுக்கிடையேயான நிறுத்தக் குறிகள் அல்ல. இவை பார்முலாவின் ஓர் அங்கமாகும். எனவே இவற்றைக் கவனமுடன் அமைக்க வேண்டும்.
( : ) : கோலன். இது ஒரு சிங்கிள் ரேஞ்சினைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2 என்பது A1 முதல் C2 வரையிலான செல்களைக் குறிக்கிறது.
(,) : கமா என்னும் காற்புள்ளி இரண்டு ரேஞ்ச் செல்கள் இணைந்ததைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2, B1:B4 என்பது ஏ1 முதல் சி2 வரையிலான ரேஞ்சையும் பி1 முதல் பி4 வரையிலான ரேஞ்ச் செல்களையும் இணைந்த தொகுதியைக் குறிக்கிறது. இது போன்ற இணைப்பு செல்களைக் குறிப்பிடுகையில் கவனமாகக் கண்காணித்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரும்புகின்ற வகையில் பார்முலா செயல்படுகிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும்.

%d bloggers like this: