Daily Archives: மே 29th, 2014

மத்திய ஆட்சியை சிறப்பாக நடத்த மோடியின் 10 அம்சத் திட்டம்

டெல்லி: மத்திய ஆட்சியை சிறப்பாக நடத்த 10 அம்சத் திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அத்திட்டத்தின் விவரங்கள்:  
#1வது அம்சம்: நாட்டின் பொருளாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது.
#2வது அம்சம்: அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது.
#3வது அம்சம்: கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை பணிகளில் கவனம் செலுத்துவது.
#4வது அம்சம்: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது.  
#5வது அம்சம்: மக்கள் நலனை இலக்காக கொண்ட நிர்வாகத்தை ஏற்படுத்துவது.
#6வது அம்சம்: பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது.
#7வது அம்சம்: பணி ஒப்பந்தங்களை வழங்க மின்னணு ஏல முறையை கொண்டு வருவது.
#8வது அம்சம்: தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது.
#9வது அம்சம்: அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் செயல்படுத்துவது.  
#10வது அம்சம்: நாட்டில் எப்பொழுதும் அமைதியை நிலை நாட்டுவது.

கேளுங்கள் குறைக்கப்படும்!

சாலையோரம் பூ விற்கும் பெண்ணிடம், பேரம் பேசி இரண்டு முழம் பூ வாங்குவோம். பத்து ரூபாய் விஷயத்தில் உஷாராக இருக்கும் நாம், பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு காரை வாங்கும்போது பேரம் பேசுவதே இல்லை. பிறகு, நம் கௌரவம் என்னாவது! ஆனால், அப்படி வாங்க முடியுமா? முடியும்!

கார்களுக்குப் பல தள்ளுபடிகள் தருகிறார்களே, என்னென்ன தள்ளுபடி? எப்போது தருகிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பண்டிகை காலச் சலுகை மற்றும் ஆடி மாதச் சலுகை மட்டுமே இருந்துவந்தது. ஆனால், தற்போது நாள்தோறும் சலுகைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக, பொருட்களைச் சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவிக்கிறார்கள். இதனால், பண்டிகை காலம் மட்டுமல்லாது, வருடம் முழுவதும் பெரிய பெரிய விளம்பர பேனர்களைப் பார்க்க முடிகிறது!

வாங்கத் தூண்டும் அதிரடி தள்ளுபடிகள்!

Continue reading →

தாது உப்புக்கள்

தாது உப்புக்கள் உடலைச் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உடல் இயக்கத்திற்கு இந்த உப்புக்கள் அவசியம் தேவை.

p96

Continue reading →

விண்டோஸ் – பைல் வகைப்படுத்தும் வசதி!

கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் சேரச் சேர அவற்றைத் தேடிப் பெறுவது சற்று நேரம் எடுக்கும் வேலையாக மாறிவிடுகிறது. இது சில நேரங்களில் நமக்குச் சவால் விடும் செயலாக மாறிவிடுகிறது. இந்த குறையைப் போக்கும் வகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் புதிய பதிப்புகளில், பைல்களை வகைப்படுத்தி, பிரித்துப் பார்க்கும் வசதியைத் தந்து வருகிறது. இதன் மூலம் ஒரு டாகுமெண்ட் பைல் அல்லது போட்டோ, வீடியோ எனப் பிரித்துப் பார்த்து பைல்களைத் தேடலாம். பைல்களின் பெயர்களை வகைப்படுத்தியும், பைல்களை எளிதாக அறியலாம். சில வேளைகளில், பெரிய அளவில் பைல் எனத் தேடலாம். குறிப்பாக வீடியோ பைல்களை அதன் அளவைக் கொண்டு தேடி அறியலாம். அல்லது, அண்மைக் காலத்தில் எடிட் செய்யப்பட்ட பைல்கள் என்ற வகையிலும் பைல்களைத் தேடி அறியலாம்.
இந்த வகைத் தேடல்களில்தான் பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer) டூலின் வியூ மெனு (View menu) நமக்கு உதவியாய் செயல்படுகிறது. பைல் எக்ஸ்புளோரர் பைல்களின் பெயர்களை அகர வரிசையில் A to Z என அடுக்கித் தருகிறது.
பைல்களின் வகைப்படி அவற்றைக் குழுவாகப் பிரிப்பது என்றால், எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்ப்ரெட் ஷீட் பைல்கள் அனைத்தையும் தனியே எடுத்து வைக்க விரும்பினால், சில வழிகள் தற்போது தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் File Explorer விண்டோவில், View > Sort by > Type எனச் செல்லவும். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், போல்டர் விண்டோவின் காலி இடத்தில், ரைட் கிளிக் செய்து, Sort menuவில் பயன்படுத்தலாம். உங்களிடம் நிறைய போல்டர்கள் இருந்தால், முதலில் போல்டர்கள் பட்டியலிடப்படும். அதன் பின்னரே, தனித்தனியான பைல்கள் வரிசையாகக் காட்டப்படும். கீழாகச் சென்றால், HTML, text, Excel, Word, XLS, PDF, மற்றும் பிற வகைகளில் பைல்கள் வகைப்படுத்தப்படும். இந்த குழுவில் சென்று, நீங்கள் தேட வேண்டிய வகைப் பக்கம் அணுகி, உங்களுக்கு வேண்டிய பைலைப் பெறலாம்.
மீண்டும் பெயர் வரிசையில் அகர வரிசைப்படி வேண்டும் எனில், View > Sort by > Name எனச் சென்று பெறலாம்.
எனவே, அடுத்த முறை File Explorer பிரிவில் பைல்களைத் தேடுகையில் வியூ மெனு சென்று பார்க்கவும்.