Daily Archives: மே 30th, 2014

வேர்ட் டிப்ஸ்-டாகுமெண்ட்டில் வரிகளைச் சரியாக அமைக்க

டாகுமெண்ட்டில் வரிகளைச் சரியாக அமைக்க: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், வேர்ட், வரியில் உள்ள மிகப் பெரிய எழுத்துருவினைக் கண்டறிந்து, அதன் அளவிற்கேற்ப, அதற்கேற்ற வகையில் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அமைக்கிறது. ஒரு வரியில் உள்ள எழுத்துருவுக்கும், அடுத்த வரியில் உள்ள எழுத்துருவிற்கும் அளவில் வித்தியாசம்

Continue reading →

உணவு யுத்தம்! – 9

தியேட்டரும் பாப்கார்னும்!

திருவிளையாடல் பார்த்திருக்கிறீர்கள்தானே! அதில் தருமி சிவனிடம் நிறைய கேள்விகள் கேட்பார். தருமி கேட்கத் தவறிய கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. அப்படியான சில கேள்விகளாக இதைச் சொல்லலாம்.

பிரிக்க முடியாதது என்னவோ?

தியேட்டரும் பாப்கார்னும்!

சேர்ந்தே இருப்பது?

பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!

சேராமல் இருப்பது?

வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!

சொல்லக் கூடாதது?

பாப்கார்ன் விலை!

சொல்லக் கூடியது?

காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!

பாப்கார்ன் என்பது?

பகல் கொள்ளை!

சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?

Continue reading →

மீனம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

பஞ்சம ஸ்தான  குருவாலே  பறந்தது கவலை! இனியோகம் தான்!

இல்லத்திற்கு வருபவர்களை இன்முகத்தோடு உபசரிக்கும் மீன ராசி நேயர்களே!

வந்துவிட்டது குருப்பெயர்ச்சி. ராசிநாதன் குரு உச்சம்பெற்று 5–ம் இடத்தில் சஞ்சரித்து அற்புதப் பலன்களை வழங்கப் போகிறார். வைகாசி 30 முதல் இனி வசந்த காலம் தான். அஷ்டமத்து சனியின் வலிமையால் இதுவரை இருந்த கசந்த காலங்கள் இனி மாறப்போகின்றன.

டிசம்பர் மாதத்தில் சனியும் மாறப்போகிறது. உங்கள் சஞ்சலமும் தீரப் போகிறது. பணியில் முன்னேற்றமும், பண மழையில் நனையும் வாய்ப்பும் இனிமேல் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கப் போகிறது.

நான்காமிடத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த குரு பகவான் நல்லவர் தான். என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக அல்லவா அவர் காட்சியளித்தார். எனவே வீண் சண்டைகளும், விரோதங்களும், தேனான வாழ்க்கையில் திண்டாட்டங்களும் வந்திருக்கலாம். 

பிள்ளைகளால் கவலையும், பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்க்கையும், சொல்லைச் செயலாக்கிக் காட்ட முடியாத சூழ்நிலையும், சுற்றத்தாரால் அவமதிப்பும் கொண்டிருந்த நிலையும் இனி மாறும். வெற்றி தேவதை வீட்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. வியக்கும் செய்திகள் இனி வந்து கொண்டேயிருக்கும். கலக்கம் அகலவும், கனிவான வாழ்க்கை அமையவும், அருகில் இருக்கும் புராதனக் கோவில்களுக்குச் சென்று குருவை வழிபட்டு குதூகலம் காணுங்கள். அதுமட்டுமல்லாமல் சனி விலகும் நேரத்தில் திருநள்ளாறு சென்று தித்திக்கும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

‘நளன்’ குளத்தில் நீராடி நள்ளாற்று ஈசனை வழிபட்டு, உளமாற அன்ன தானம் செய்து ஊர் திரும்பி வாருங்கள். வளமான வாழ்க்கையும் அமையும். வருங்காலமும் நலமாக இருக்கும். உள்ளூரில் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றுங்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

Continue reading →

கும்பம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)

ஆறாமிடத்தில்  குரு வருகை!  அனுசரிப்பாலே  வரும்  பெருமை!

எதை எப்பொழுது செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் கும்ப ராசி நேயர்களே!

வைகாசி 30–ல் வருகிறது குருப்பெயர்ச்சி. இதுவரை 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது 6–ம் இடத்திற்கு வரும் குரு பகவான், தனது பார்வை பலத்தால் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடக ராசியில் உச்சம் பெறும் குரு உங்கள் ராசிக்கு 2, 11 –க்கு அதிபதியாவார். தன லாபாதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது தன வரவு தாராளமாக வரவேண்டுமல்லவா? அதே நேரத்தில் அது இருக்கும் இடமோ 6–ம் இடம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனவே தொகை வந்த மறுநிமிடமே செலவாகிவிடலாம். உடல் நலத்தை சீராக்கிக் கொள்ள ஒவ்வொரு நாளுமே செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் குடும்ப பெரியவர்களைக் கேட்டுக் கலந்து ஆலோசித்துக் காரியங்களைச் செய்வதன் மூலம் வாட்டங்கள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குருவின் ஆதிக்கம் 6–ம் இடத்தில் வருகின்ற பொழுது எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் ஸ்தானம் புனிதமடைகிறது. இது போன்ற காலங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தால் பெருமை வந்து சேரும். ஒரு தொகை கைக்கு வரும் பொழுதே சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

Continue reading →

மகரம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

ஏழாமிடத்தில்  குரு  வருகை!  இனிமேல்  கவலை  ஏதுமில்லை!

மற்றவர்களின் மனக்குமுறல்களை மறுப்புச் சொல்லாமல் கேட்டுக் கொள்ளும் மகர ராசி நேயர்களே!

வந்துவிட்டது குருப்பெயர்ச்சி. வைகாசி 30 முதல் வசந்த காலம் உங்களுக்கு பிறந்து விட்டது. ஆசைகள் அரங்கேறும், ஆதாயம் அதிகரிக்கும். ஓசைப்படாமல் ஒப்பற்ற நல்ல காரியங்கள் பலவும் செய்து முடிக்கப் போகிறீர்கள். காசு பணம் அதிகரிக்கும். காலை  முதல் மாலை வரை உழைத்துக் கைநிறைய வருமானம் வரவில்லையே என்று நினைத்த உங்களுக்கு இனி பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படப்போகிறது.

உங்கள் ராசிக்கு 3, 12–க்கு ஆகிய இடங்களுக்கு அதிபதியாக  குரு விளங்கினாலும் சப்தம ஸ்தானத்தில் இருந்து கொண்டு அல்லவா பார்க்கிறார். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்து சேரும்.

டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் ராசியையே சனி பார்க்கப் போகிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். நண்பர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் என்றாலும் முன்கோபத்தால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கையானவர்கள்!

உடன்பிறப்புகள் மீது உங்களுக்குப் பாசம்அதிகமாக இருக்கும். இருப்பினும் அவர்களுக்கு உங்கள் மீது பாசம் அதேபோல் இருக்குமா என்பது சந்தேகம் தான். மற்றவர்களின் குடும்ப ரகசியத்தை மனதில் பதித்துக் கொள்வீர்கள். ஆனால் உங்கள் குடும்ப ரகசியத்தை ஒருவரிடமும் சொல்ல மாட்டீர்கள்.

விதியின் மீது முழு நம்பிக்கை வைப்பவர் நீங்கள். உணர்ச்சி வசப்படுவதன் மூலமாக உயர்ந்த மனிதர்களின் நட்பை இழக்க நேரிடலாம். பணம் சேர்ப்பதே குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டு.

Continue reading →

தனுசு -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

எட்டாமிடத்தில்  குரு வருகை!  எதிலும்  கவனம்  மிகத் தேவை!

எதையும் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். எட்டில் குரு வந்தால் எண்ணற்ற மாற்றம் வரும் என்பது உண்மை தான். ஆனால் எதிர்பார்த்த மாற்றங்கள் வருமா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை வருகின்ற குரு பெயர்ச்சி சாதாரண குரு பெயர்ச்சி அல்ல, உச்சமாக வருகிற குரு பெயர்ச்சியாகும்.

அங்ஙனம் குரு உச்சம் பெற்று உங்கள் ராசிக்கு 8–ல் சஞ்சரித்தாலும் கூட அதன்பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்குமா? என்று நினைக்க வேண்டாம். ராசிநாதன் உச்சம் பெறும்பொழுது யோசிக்காது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.

உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ள உங்கள் பணியைத் தொடர வாய்ப்புகள் கைகூடி வரும். இருப்பினும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாகவும் குரு விளங்குவதால் சந்தோஷங்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர்கள் குரு வழிபாட்டை  முறையாக மேற்கொள்வது நல்லது.

தற்சமயம் சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. பார்க்கும் சனி உங்களுக்கு பல விதங்களிலும் நன்மையை உருவாக்கலாம். எனவே, எதையும் கொஞ்சம் முன்யோசனையுடன் செய்தால் பொன்னான எதிர்காலத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.

அதற்கு அடித்தளமாக சனிக் கிழமை தோறும் சனி பகவானையும், நீங்கள் வழிபட்டு வரவேண்டும். குறிப்பாக அருகிலிருக்கும் புராதனக் கோவில்களுக்குச் சென்று மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி குருவையும், கருப்பு வண்ண வஸ்திரம் சாற்றி சனியையும்  வழிபடுவது நல்லது.

உறவிற்கு கைகொடுக்கும் உத்தமர்கள்!

Continue reading →

விருச்சிகம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

விருச்சிகம்

விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

உச்ச குருவின் பார்வையினால் உலகம் போற்றும் வாழ்வமையும்!

லட்சங்களைக் காட்டிலும் லட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

வந்து விட்டது குருப்பெயர்ச்சி. வைகாசி 30 முதல் வசந்த காலம் உருவாகப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் இன்று முதல் உங்களுக்கு யோகம்தான்.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக் கேற்ப அதன் அருட்பார்வை 5–ம் பார்வையாக பதிவதால் மிஞ்சும் பலன் கிடைக்கும். ஆசைகள் அரங்கேறும். அரசியல்வாதிகளால் நன்மை கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 2, 5–க்கு அதிபதியாவார். தன பாக்யாதிபதியாக விளங்கும் குரு உச்சம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கப் போகிறார். எனவே, உடல் ஆரோக்கியமும் சீராகும். ஒவ்வொரு நாளும் நல்ல தகவல்கள் இல்லம்தேடி வந்து கொண்டேயிருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் கரம் பட்டதெல்லாம் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும்.

Continue reading →

துலாம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

வரப்போகிறது குரு பத்தில்!  தரப்போகிறது இடமாற்றம்!

ஜன சக்தியும், பண சக்தியும் ஒருங்கே இணையப் பெற்ற துலாம் ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு இதுவரை 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 10–ல் குரு வந்தால் பதவி மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் என்று பலருக்கும் வருவது இயற்கை தான். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் குரு, உச்சம் பெற்ற குருவாக அல்லவா சஞ்சரிக்கப் போகின்றார்.

எனவே, அதன் பார்வை பலத்தால் ஒப்பற்ற நல்ல பலன்களை அற்புதமாக அள்ளி வழங்கப் போகிறார். இதுவரை ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பொழுது, யோசித்து செயல்பட்டால் தான் யோகம் வருமென்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு தன ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும்.

இருப்பினும் ஏழரைச் சனியில் தொடர்ச்சி இருப்பதால் மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை மட்டும் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கடந்த ஓராண்டாக உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டுதான் இருந்தார். அப்படியிருந்தும் பல காரியங்கள் முடியவில்லை. கூடுதல் விரயத்தோடு குழப்பங்களில் ஆழ்ந்திருந்தீர்கள்.

இது எதனால் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகைவனாக விளங்குகிறார். பகைவனின் பார்வையில் சிக்கியதால் தான் பல வகையான பிரச்சினைகள் உங்களுக்கு வந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி, வைகாசி 30 முதல் வசந்தகாலம் தொடங்கிவிட்டது.

செயல் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குரு முத்தான வாழ்க்கையை வழங்கப் போகிறது. அத்தனைக்கும் மேலாக, தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்த குரு பகவான் தொழிலை வளப்படுத்தப் போகிறார். 

Continue reading →

கன்னி -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

கன்னி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

லாப ஸ்தான குருபகவான்!  நலமாய் வாழ வழிவகுப்பான்!

பலனை எதிர்பார்த்து காரியங்களைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

குதூகலத்தை வரவழைத்துக் கொடுக்கும் குருப்பெயர்ச்சி இப்பொழுது வந்து விட்டது. அதிக வருமானத்தைக் கொடுக்கும் இடமான 12–ல் அடியெடுத்து வைக்கிறது. புதிய திருப்பங்களும், பொன்னான வாய்ப்புகளும், இதுவரை இல்லாத அளவுக்கு சேமிப்பு உயர்வதும், இந்தக் குருப்பெயர்ச்சியால் கிடைக்கப் போகும் நன்மைகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

குரு இருக்குமிடத்தாலும் சிறப்பு, பார்க்குமிடத்தாலும் சிறப்பு என்று சொல்லும் விதத்தில் இந்த உச்ச குருவின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. மேலும் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலகும் நேரத்தில் நன்மைகளை சனி பகவான் அள்ளி வழங்குவார். டிசம்பர் மாதத்தில் விலகப் போகும் சனி பகவான் ஆறு மாதம் முன்னதாகவே ஜோரான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடப் போகிறார்.

Continue reading →

சிம்மம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

சிம்மம்

மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

விரய ஸ்தானம் வலுக்கிறது!  விரும்பிய பொருளை வாங்குங்கள்!

துணிவும், தன்னம்பிக்கையும் மிகுந்தால் உலகையே வெல்லலாம் என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது விரய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே, வைகாசி 30 முதல் விரயங்கள் அதிகரிக்கப் போகிறதோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் சுய ஜாதகத்தில் தன ஸ்தானத்திலுள்ள கிரகம் வலுவாக இருந்தால் பணம் உங்களுக்கு திருப்தியாக வந்து கொண்டே இருக்கும். ஆனால் வந்த மறுநிமிடமே செலவாகும் விதத்தில் விரயங்கள் காத்திருக்கும்.

எனவே, இது போன்ற நேரங்களில் சுப விரயங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. 

என்னயிருந்தாலும் பஞ்சம ஸ்தானத்திற்கு அதிபதியான குரு 12–ம் இடத்திற்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. எதற்குமே கலங்காத உங்கள் மனம் இப்பொழுது ஏதேனும் சில பிரச்சினைகளை நினைத்து வாடும். ஆரோக்கியக் குறைபாடுகளால் அதிகத் தொல்லை ஏற்படுகிறதே என்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் அதிக குழப்பங்கள் ஏற்படாமலிருக்கவும், கூடுதல் லாபம் பெறவும் கொள்கைப் பிடிப்போடு செயல்படவும் திசைமாறிய தென்முகக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. 63 நாயன்மார்கள் வழிபாட்டையும் அனுகூல நாளில் செய்து வந்தால் திருப்பங்கள் வந்து சேரும்.

முல்லைப்பூ மாலை அணிவித்து சுண்டல் நைவேத்தியம் வழங்கி மஞ்சள் வஸ்திரம் சாற்றி அருகிலிருக்கும் புராதன கோவில்களுக்குச் சென்று குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

Continue reading →