Monthly Archives: மே, 2014

துலாம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

வரப்போகிறது குரு பத்தில்!  தரப்போகிறது இடமாற்றம்!

ஜன சக்தியும், பண சக்தியும் ஒருங்கே இணையப் பெற்ற துலாம் ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு இதுவரை 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 10–ல் குரு வந்தால் பதவி மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் என்று பலருக்கும் வருவது இயற்கை தான். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் குரு, உச்சம் பெற்ற குருவாக அல்லவா சஞ்சரிக்கப் போகின்றார்.

எனவே, அதன் பார்வை பலத்தால் ஒப்பற்ற நல்ல பலன்களை அற்புதமாக அள்ளி வழங்கப் போகிறார். இதுவரை ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பொழுது, யோசித்து செயல்பட்டால் தான் யோகம் வருமென்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு தன ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும்.

இருப்பினும் ஏழரைச் சனியில் தொடர்ச்சி இருப்பதால் மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை மட்டும் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கடந்த ஓராண்டாக உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டுதான் இருந்தார். அப்படியிருந்தும் பல காரியங்கள் முடியவில்லை. கூடுதல் விரயத்தோடு குழப்பங்களில் ஆழ்ந்திருந்தீர்கள்.

இது எதனால் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகைவனாக விளங்குகிறார். பகைவனின் பார்வையில் சிக்கியதால் தான் பல வகையான பிரச்சினைகள் உங்களுக்கு வந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி, வைகாசி 30 முதல் வசந்தகாலம் தொடங்கிவிட்டது.

செயல் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குரு முத்தான வாழ்க்கையை வழங்கப் போகிறது. அத்தனைக்கும் மேலாக, தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்த குரு பகவான் தொழிலை வளப்படுத்தப் போகிறார். 

Continue reading →

கன்னி -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

கன்னி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

லாப ஸ்தான குருபகவான்!  நலமாய் வாழ வழிவகுப்பான்!

பலனை எதிர்பார்த்து காரியங்களைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

குதூகலத்தை வரவழைத்துக் கொடுக்கும் குருப்பெயர்ச்சி இப்பொழுது வந்து விட்டது. அதிக வருமானத்தைக் கொடுக்கும் இடமான 12–ல் அடியெடுத்து வைக்கிறது. புதிய திருப்பங்களும், பொன்னான வாய்ப்புகளும், இதுவரை இல்லாத அளவுக்கு சேமிப்பு உயர்வதும், இந்தக் குருப்பெயர்ச்சியால் கிடைக்கப் போகும் நன்மைகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

குரு இருக்குமிடத்தாலும் சிறப்பு, பார்க்குமிடத்தாலும் சிறப்பு என்று சொல்லும் விதத்தில் இந்த உச்ச குருவின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. மேலும் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலகும் நேரத்தில் நன்மைகளை சனி பகவான் அள்ளி வழங்குவார். டிசம்பர் மாதத்தில் விலகப் போகும் சனி பகவான் ஆறு மாதம் முன்னதாகவே ஜோரான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடப் போகிறார்.

Continue reading →

சிம்மம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

சிம்மம்

மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

விரய ஸ்தானம் வலுக்கிறது!  விரும்பிய பொருளை வாங்குங்கள்!

துணிவும், தன்னம்பிக்கையும் மிகுந்தால் உலகையே வெல்லலாம் என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது விரய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே, வைகாசி 30 முதல் விரயங்கள் அதிகரிக்கப் போகிறதோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் சுய ஜாதகத்தில் தன ஸ்தானத்திலுள்ள கிரகம் வலுவாக இருந்தால் பணம் உங்களுக்கு திருப்தியாக வந்து கொண்டே இருக்கும். ஆனால் வந்த மறுநிமிடமே செலவாகும் விதத்தில் விரயங்கள் காத்திருக்கும்.

எனவே, இது போன்ற நேரங்களில் சுப விரயங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. 

என்னயிருந்தாலும் பஞ்சம ஸ்தானத்திற்கு அதிபதியான குரு 12–ம் இடத்திற்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. எதற்குமே கலங்காத உங்கள் மனம் இப்பொழுது ஏதேனும் சில பிரச்சினைகளை நினைத்து வாடும். ஆரோக்கியக் குறைபாடுகளால் அதிகத் தொல்லை ஏற்படுகிறதே என்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் அதிக குழப்பங்கள் ஏற்படாமலிருக்கவும், கூடுதல் லாபம் பெறவும் கொள்கைப் பிடிப்போடு செயல்படவும் திசைமாறிய தென்முகக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. 63 நாயன்மார்கள் வழிபாட்டையும் அனுகூல நாளில் செய்து வந்தால் திருப்பங்கள் வந்து சேரும்.

முல்லைப்பூ மாலை அணிவித்து சுண்டல் நைவேத்தியம் வழங்கி மஞ்சள் வஸ்திரம் சாற்றி அருகிலிருக்கும் புராதன கோவில்களுக்குச் சென்று குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

Continue reading →

கடகம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

கடகம்

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

உச்ச குரு தான் வருவதனால்  உற்சாகத்துடன்  பணிபுரிவீர்!

கடினமாக உழைத்தால் சிறந்த வாழ்க்கை வாழ முடியும் என்று சொல்லும் கடக ராசி நேயர்களே!

நட்பிற்கு முக்கியத்தும் கொடுப்பவர்கள் நீங்கள். நாடே போற்றும் வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். அன்பும் உங்களிடம் இருக்கும், அதிகாரமும் உங்களிடம் இருக்கும். இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

சாதாரண குருப்பெயர்ச்சியல்ல, இந்தக் குருப்பெயர்ச்சி. உச்சம்பெற்ற குருவின் ஆதிக்கமுள்ள பெயர்ச்சியாகும். நவக்கிரகங்களிலேயே நல்ல கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசியில் வைகாசி 30–ம் தேதி அடியெடுத்து வைக்கிறார். இனி வசந்த காலம் தான். வாழ்க்கையில் ஏற்படும் பொருள் சேர்க்கைகளால் வசதிகள் பெருகும்.

உழைப்பின் மூலமே உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். களைப்பின்றி உழைத்து காசு, பணம் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும்.

என்னயிருந்தாலும் முத்தான வாழ்வில் ஏற்படும் முட்டுக் கட்டைகளை அகற்றி பத்தோடு பதினோராவது ஆளாக வாழாமல் தலைமைப் பதவியைத்தக்க வைத்துக் கொள்பவராக வாழ வழிவகுத்துக் கொடுப்பவர் இந்த குரு பகவான் தான். அவர் உங்கள் ராசியில் அடியெடுத்து வைக்கும் பொழுது அன்றைய தினமே வரவேற்பு கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.

Continue reading →

மிதுனம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

மிதுனம்

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

தன ஸ்தானம் வலுக்கிறது!   தடைகள் விலகப் போகிறது!

எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பெற்ற மிதுன ராசி நேயர்களே!

கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு கடந்த ஓராண்டாக இருந்த கவலைகள் மாறப் போகின்றன.

இப்பொழுது சஞ்சரிக்கும் குரு பகவான் எப்பொழுதும் போலத்தான் பெயர்ச்சியாகிறார் என்று நினைக்க வேண்டாம். கடக ராசியில் உச்சம் பெறுகிறார்.

கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 3 இடங்களில் பதிவாகின்றது. எந்தெந்த ஸ்தானங்களில் குருவின் பார்வை பதிவாகின்றதோ, அந்தந்த ஸ்தானங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. எனவே, கடன் சுமை, உடல்நிலை, செயல்பாடுகள், தொழில் முறை ஆகியவற்றை குறிக்கும் இடங்களெல்லாம் உச்ச குருவின் பார்வையால் உடனடியாகப் புனிதமடைகின்றன. எனவே, அச்சம் கொள்ள தேவையில்லை. ஆர்ப்பரிக்கவும் தேவையில்லை.

நன்மைகள் பெருகும் காலம்

Continue reading →

ரிஷபம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

ரிஷபம்

 

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

வருகிற இடமோ மூன்று!   வந்திடும் வெற்றியே சான்று!

கலகலப்பாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்ளும் ரிஷப ராசி நேயர்களே!

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நேரம் வந்து விட்டது. வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வந்துவிட்டது குருப்பெயர்ச்சி. இனி உங்கள் வாட்டங்கள் அகலும். 

இதுவரை இரண்டாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். வெற்றிகள் ஸ்தானம் என்று வர்ணிக்கப்படுகிற இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வந்து சேரும்.  எனவே வைகாசி 30 முதல் வசந்தம் வரப்போகிறது.

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஆனால் உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாக சுக்ரன் இருப்பதால், அவனுக்கு பகை கிரகமான குரு எப்படி பார்வை பலத்தால் நன்மைகள் வழங்குவார் என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் இந்த முறை குருப்பெயர்ச்சி கடகத்தில் நிகழும் பொழுது உச்ச குருவாக விளங்குகிறார். பகைவன் வலிமை அடைந்தாலும் பாரபட்சமில்லாமல் அவர் பார்க்கும் இடங்களுக்கெல்லாம் பலன் தருவார்.

மேலும் அவர் பகை வீட்டில் இருந்தபடியே பார்வையை செலுத்தவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். நட்பு கிரக வீட்டிலிருந்து பார்ப்பதால் அதன் பார்வைக்கு நல்ல பலன்களே வந்து சேரும் என்று சொல்லலாம். 

வசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்கள்!

Continue reading →

மேஷம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

சுக ஸ்தானத்தில் குரு வருகை!   துணிவும் பணிவும் இனிதேவை!

மற்றவர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கத் தயங்காத மேஷ ராசி நேயர்களே!

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த குருப்பெயர்ச்சி இப்பொழுது வந்து விட்டது. இதுவரை மிதுன ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது நான்காமிடம் எனப்படும் சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். வாகனம், வீடு, சுகம், கல்வி, தாய், கோவில் பணிகள், கொடுக்கல்–வாங்கல்கள் போன்றவற்றை விளக்கும் இடத்திற்கு குரு செல்வதால் அந்த ஸ்தானம் புனிதமடைகின்றது.

Continue reading →

மத்திய ஆட்சியை சிறப்பாக நடத்த மோடியின் 10 அம்சத் திட்டம்

டெல்லி: மத்திய ஆட்சியை சிறப்பாக நடத்த 10 அம்சத் திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அத்திட்டத்தின் விவரங்கள்:  
#1வது அம்சம்: நாட்டின் பொருளாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது.
#2வது அம்சம்: அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது.
#3வது அம்சம்: கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை பணிகளில் கவனம் செலுத்துவது.
#4வது அம்சம்: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது.  
#5வது அம்சம்: மக்கள் நலனை இலக்காக கொண்ட நிர்வாகத்தை ஏற்படுத்துவது.
#6வது அம்சம்: பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது.
#7வது அம்சம்: பணி ஒப்பந்தங்களை வழங்க மின்னணு ஏல முறையை கொண்டு வருவது.
#8வது அம்சம்: தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது.
#9வது அம்சம்: அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் செயல்படுத்துவது.  
#10வது அம்சம்: நாட்டில் எப்பொழுதும் அமைதியை நிலை நாட்டுவது.

கேளுங்கள் குறைக்கப்படும்!

சாலையோரம் பூ விற்கும் பெண்ணிடம், பேரம் பேசி இரண்டு முழம் பூ வாங்குவோம். பத்து ரூபாய் விஷயத்தில் உஷாராக இருக்கும் நாம், பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு காரை வாங்கும்போது பேரம் பேசுவதே இல்லை. பிறகு, நம் கௌரவம் என்னாவது! ஆனால், அப்படி வாங்க முடியுமா? முடியும்!

கார்களுக்குப் பல தள்ளுபடிகள் தருகிறார்களே, என்னென்ன தள்ளுபடி? எப்போது தருகிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பண்டிகை காலச் சலுகை மற்றும் ஆடி மாதச் சலுகை மட்டுமே இருந்துவந்தது. ஆனால், தற்போது நாள்தோறும் சலுகைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக, பொருட்களைச் சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவிக்கிறார்கள். இதனால், பண்டிகை காலம் மட்டுமல்லாது, வருடம் முழுவதும் பெரிய பெரிய விளம்பர பேனர்களைப் பார்க்க முடிகிறது!

வாங்கத் தூண்டும் அதிரடி தள்ளுபடிகள்!

Continue reading →

தாது உப்புக்கள்

தாது உப்புக்கள் உடலைச் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உடல் இயக்கத்திற்கு இந்த உப்புக்கள் அவசியம் தேவை.

p96

Continue reading →