Monthly Archives: ஜூன், 2014

பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது; பிரதமர் மகிழ்ச்சி

ஸ்ரீஹரிகோட்டா : பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்தார். விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பின்னர் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை ஆரத்தழுவி பாராட்டினார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு ; ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக

Continue reading →

சசிகலா என் உறவினர் அல்ல… சுதாகரன் வளர்ப்பு மகனும் அல்ல!

”ஜெயலலிதாவுக்கு சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் உறவினர்களும் அல்ல. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல. அவர் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவும் இல்லை. நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்தான் சுதாகரனின் திருமணத்துக்கான செலவுகள் அனைத்தும் செய்தார்” என்ற அதிரடி வாக்குமூலத்தைக் கொடுத்து அதிர்ச்சியைக்  கிளப்பியிருக்கிறார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார். இது அந்த வழக்கில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலிலும் முக்கியமான வாதமாக அமைந்துவிட்டது.

பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் தொடங்கியுள்ளன. முதலில் ஜெயலலிதா தரப்பின் வாதங்களை மூத்த வழக்கறிஞர் குமார் வைத்து வருகிறார். அவர் முதல் இரண்டு நாட்கள் வைத்த வாதங்களை, கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வைத்த வாதங்கள் அதிர்ச்சிரகமாக அமைந்து இருந்தன. பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி குமார் வாதிடுவதால், நீதிபதி குன்ஹாவும் உற்று கவனித்து வருகிறார். 

Continue reading →

டெஸ்க்டாப் மேலாக பைல்களைப் பதியலாமா?

விண்டோஸ் இயக்க முறைமையை அதன் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அதில் உருவாக்கப்படும் பைல்களை, டெஸ்க்டாப் மேலாக சேவ் செய்திடும் செட் அப் எதிலும் இல்லை. மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தான் அவை சேவ் செய்யப்படும். ஆனால், நம்மில் பலர், டெஸ்க்டாப் மேலாகப் பைல்களைப் பதிவதனையே பழக்கமாகக் கொண்டுள்ளோம். இது நல்ல பழக்கமா? இல்லையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று பார்க்கலாம்.
டெஸ்க்டாப்பில் பைல்களைப் பதிவு செய்து வைப்பதற்கு முதல் காரணம், இந்த பைல்களை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளலாம் என்பதே. நம் கண்கள் முன்பு இவை எப்போதும் காட்சி தரும் அல்லவா? எனவே தான் பலரும் பைல்களை இதில் சேவ் செய்கின்றனர்.

Continue reading →

மாங்கல்யம் காக்கும் ஆனித் திருமஞ்சன தரிசனம்! நமசிவாய…

ரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது காங்கேயம்பாளையம். இங்கே, காவிரியாற்றின் நடுவே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர். ஆற்றின் இக்கரை ஈரோடு மாவட்டமாகவும், அக்கரையானது நாமக்கல் மாவட்டமாகவும் உள்ளது.

ஈசன் அகத்தியருக்கு அருளிய தலம் இது. ‘நான் இங்கேயே இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க உள்ளேன்’ என அசரீரியாகச் சொல்லி, அதன்படி தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார். ஆற்றின் நடுவே குடிகொண்டிருப்பதால், சிவனாருக்கு ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது

Continue reading →

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது.

ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.

‘புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி.

Continue reading →

உணவு யுத்தம்!

டூப்ளிகேட் ஜவ்வரிசி!

ஜவ்வரிசிக்குப் போடப்பட்ட தடையை சமாளித்து, தொழிலை முன்னெடுத்துச் செல்லவே 1943-ல் சேகோ உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் தமிழகத்துக்கு வெளியே ஜவ்வரிசியைக் கொண்டுபோய் விற்கவும் அன்றைய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம் போராடவே, இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

Continue reading →

விண்டோஸ் 8 – செயலாக்க கீ தரும் பிரச்னைகள்

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து, ஆனால் மெதுவாகவே, உயர்ந்து வருகிறது. இவர்களில் பலர், இதன் செயலாக்க / செயல்படுத்தும் கீ (activation key) குறித்து சில பிரச்னைகளைத் தெரிவித்துள்ளனர்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு சட்ட ரீதியான உரிம நகலும் அதற்கான செயல்படுத்தும் கீயுடனேயே வருகிறது. இதனை அந்த சாதனத்தை அடையாளம் காட்டும் கீ (product identification (PID)) எனவும் அழைக்கின்றனர். இது ஐந்து தொகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து கேரக்டர்கள் (எண்கள் மற்றும் எழுத்துகள்) இருக்கும். இது ஒவ்வொரு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தனியான அடையாளத்தினைத் தரும். இன்னொரு கம்ப்யூட்டரில் இது இயங்காது. நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளலாம். ஆனால், அதனை இயக்க அதற்கான செயல்படுத்தும் கீ தேவை.

Continue reading →

இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!

சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம்  செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை

Continue reading →

இந்தியாவின் டாப் 10 பல்கலைக்கழங்கள் -இந்தியா டுடே

Pages from india_today_2.7.14_Page_1

Continue reading →

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

”கல்தா பரபரப்பைத் தொடர்ந்து டென்ஷன் குறையாமல் இருக்கிறது தி.மு.க.” – என்ற பீடிகையுடன் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

”தஞ்சை மாவட¢டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் நீக்கப்பட்டதும், அவருக்கு எதிரானவர்கள் ஒன்றுதிரண்டு நன்றி சொல்வதற்காக, சென்னை வந்தார்கள். அறிவாலயம் சென்று ஸ்டாலினைப் பார்த்தார்கள். ‘கட்சிக்கு எதிராக யார் செயல்​பட்டாலும் நடவடிக்கை நிச்சயமாக இருக்கும்’ என¢று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு கருணாநிதியிடம் போயிருக்கிறார்கள். ‘பழனி​மாணிக்கத்துக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்குறீங்களா?’ என்று கிண்டலாகக் கேட்டுள்ளார் கருணாநிதி. ‘தஞ்சாவூர் எப்படியா இருக்கு?’ என்பது அவரது அடுத்த கேள்வி. ‘சாதியைச் சொல்லி எதுவும் கிளப்புகிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று பவ்யம் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், ‘நான்கூட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான்’ என்று சொன்னதும,¢ அதை உன்னிப்பாக கவனித்தாராம் கருணாநிதி. பழனிமாணிக்கத்தை சாதிரீதியாக நாங்கள் எதிர்க்கவில்லை என்பது இவர்கள் சொன்னதன் சாராம்சம்!”

 

”இதற்கு பழனிமாணிக்கம் ரியாக்ஷன் என்ன?” Continue reading →