இன்று முதல் மின் தடை இல்லை

‘ஜூன் முதல், மின் தடை இருக்காது’ என்ற தமிழக அரசின் உத்தரவு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. காற்றாலைகளில் கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது என, தெரிகிறது.

சீசன் துவக்கம்

தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை அமல்படுத்தப்பட்டது.தற்போது, வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னை விரிவாக்கம் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, கூடுதலாக, 2,550 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.சீசன் துவங்கியுள்ளதால்,

காற்றாலைகளில், நாள்தோறும் சராசரியாக, 1,500 – 2,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.இதையடுத்து, ‘தமிழகத்தில், நடைமுறையில் இருந்த, மின் கட்டுப்பாடுகள், ஜூன், 1ம் தேதி முதல், ரத்து செய்யப்படும்’ என, முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 27ம் தேதி அறிவித்தார்.இந்த உத்தரவு, இன்று, முதல், நடைமுறைக்கு வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று, அனல் மின் நிலையம், 2,380; நீர் மின் நிலையம், 860; எரிவாயு மின் நிலையம், 300; காற்றாலை, 1,520 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது.மத்திய மின் தொகுப்பில் இருந்து, 2,870; வெளி மாநில மின் நிலையங்களில் இருந்து, 3,320 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது.இதையடுத்து, மொத்த மின் உற்பத்தி, 11,250 மெகா வாட் என்றளவில் இருந்தது.

பற்றாக்குறை சரிவு

இருப்பினும், மின் தேவை, 11,550 மெகா வாட்டாக இருந்ததால், 300 மெகா வாட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கிராமங்களில் மட்டும், மின் தடை செய்யப்பட்டது. கடந்த, 28ம் தேதி, 1,290; 29ம் தேதி, 950; 30ம் தேதி, 430 மெகா வாட் என, மின் பற்றாக்குறை சரிவடைந்து வருகிறது.இதனால், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புக்கு ஏற்ப, இன்று முதல் மின் தடை இருக்காது என, தெரிகிறது.

%d bloggers like this: