Daily Archives: ஜூன் 2nd, 2014

டெக்ஸ்ட்டில் இடைக்கோடு!

ஹைபன் (hyphen) எனப்படும் இடைக்கோடு, சொல் ஒன்று பிரித்து அமைக்கப்படுகையில், அதன் தொடர்பினைக் காட்டுகிறது. வேர்ட் புரோகிராம் இரண்டு வகையான ஹைபன் அமைப்பைத் தருகிறது — தானாக அமைக்கப்படுவது மற்றும் நாமாக அமைப்பது. தானாக ஹைபன் அமைக்கப்படுவதனை நாம் தேர்ந்தெடுத்தால், ஒரு டாகுமெண்ட்டினை முழுவதுமாகத்தான் ஹைபன் அமைக்கும் வேலையை மேற்கொள்ள முடியும். ஆனால், நாமாக அமைக்கும் வகையைத் தேர்ந்தெடுத்தால், டாகுமெண்ட்டின் டெக்ஸ்ட்டில் ஒரு பகுதியைத் தனியாகத் தேர்ந்தெடுத்தும் ஹைபன் அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஹைபன் அமைக்க வேண்டும் எனில், கீழே குறிப்பிட்டுள்ளபடி அமைக்க வேண்டும்.

Continue reading →

அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்!

ஆரோக்கியமாக வாழ நமக்கு நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 2,800 கலோரிகள் தேவை. ஆனால், மாறிவிட்ட உணவுப் பழக்கம்,  உடல் உழைப்புக் குறைவு போன்ற காரணங்களால் 2,800-க்கும் அதிகமான கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம். இப்படி அதிகப்படியான கலோரிகள் உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இதன், விளைவாக உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Continue reading →

பிறர் அறியா பிரவுசிங் வழி!

தற்போது அதிக புழக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்திலும், நம் இணைய உலாவினை மற்றவர்களிடமிருந்து மறைக்கும் வழிகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதனைப் பலரும் பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை பிறர் அறியா (incognito mode) அல்லது தனி நபர் நிலை (Private) என அழைக்கின்றனர். சிலர் இதனை பாலியல்நிலை (Porn mode) எனவும் அழைக்கின்றனர். ஏனென்றால், இணையத்தில் உள்ள பாலியல் சார்ந்த தளங்களைக் காண்கையில், தங்களின் தேடலை மறைத்துக் கொள்வதற்காக, இந்நிலையினைப்பயன்படுத்துவதால், இந்த பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
ஆனால், இவ்வாறு அழைப்பது தவறான ஒன்றாகும். ஒரு சிலர் அவ்வாறு பயன்படுத்தினர் என்றாலும், பலர் இந்த நிலை தரும் உயரிய பயன்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர். அதனால், இதனை அனைவரும் சில வேளைகளில் பயன்படுத்த வேண்டும் என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலைகளை இங்கு பார்க்கலாம்.
தனிநபர் நிலை (Private mode) என்பது என்ன?

Continue reading →

கேப்டன் ஏன் அவுட்?

மூன்று பவுன்சர்களின் பின்னணி

 

விஜயகாந்தை விரக்தியின் விளிம்பில் தள்ளிவிட்டது இந்தத் தேர்தல். ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து தே.மு.தி.க-தான் பெரிய கட்சி’ என்ற பூரிப்பில் இருந்த விஜயகாந்தை, நான்காவது இடத்துக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க மூன்றாவது இடத்துக்கு முன்னேறிவிட்டது. அத்தோடு அந்தக் கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. மட்டுமே தலா ஒரு தொகுதியை ஜெயிக்க முடிந்தது. ஆனால், 14 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியைக்கூடப் பிடிக்க முடியாத அவமானத்தை விஜயகாந்த்துக்குக் கொடுத்துவிட்டது இந்தத் தேர்தல்!

தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக வலுவான தலைமை இல்லாத தமிழக அரசியல் சூழலில்தான், தன் 30 ஆண்டு கால சினிமா பிரபலத்துடன் அரசியலில் இறங்கினார் விஜயகாந்த். இரண்டு கட்சிகளையும் சம விகிதத்தில் வைத்து அவர் விமர்சித்தது அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்தது.

Continue reading →

தமிழகத்தில் மேலும் 360 அம்மா உணவகங்கள் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் மேலும் 360 அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கிக் கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், 15 அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 19.2.2013 அன்று நான் திறந்து வைத்தேன். பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவாக்கப்பட்டது.

Continue reading →