டெக்ஸ்ட்டில் இடைக்கோடு!

ஹைபன் (hyphen) எனப்படும் இடைக்கோடு, சொல் ஒன்று பிரித்து அமைக்கப்படுகையில், அதன் தொடர்பினைக் காட்டுகிறது. வேர்ட் புரோகிராம் இரண்டு வகையான ஹைபன் அமைப்பைத் தருகிறது — தானாக அமைக்கப்படுவது மற்றும் நாமாக அமைப்பது. தானாக ஹைபன் அமைக்கப்படுவதனை நாம் தேர்ந்தெடுத்தால், ஒரு டாகுமெண்ட்டினை முழுவதுமாகத்தான் ஹைபன் அமைக்கும் வேலையை மேற்கொள்ள முடியும். ஆனால், நாமாக அமைக்கும் வகையைத் தேர்ந்தெடுத்தால், டாகுமெண்ட்டின் டெக்ஸ்ட்டில் ஒரு பகுதியைத் தனியாகத் தேர்ந்தெடுத்தும் ஹைபன் அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஹைபன் அமைக்க வேண்டும் எனில், கீழே குறிப்பிட்டுள்ளபடி அமைக்க வேண்டும்.

1. ஹைபன் அமைக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
2. மெனுவில் ரிப்பனில், Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Page Setup குரூப்பில் Hyphenation டூலைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Hyphenation Optionsல் கிளிக் செய்திடுங்கள். இப்போது வேர்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Manual என்ற பட்டனில் கிளிக் செய்திடுங்கள். உடனே, எங்கு ஹைபன் செய்திடலாம் என டெக்ஸ்ட்டின் இடம் காட்டப்படும். நீங்கள் அந்த சொல்லில், வேறு ஒரு இடத்தில் ஹைபன் அமைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தால், அதனைச் சுட்டிக் காட்டி அமைக்கலாம். அல்லது வேர்ட் காட்டும் பல இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இடத்தைக் காட்டி, Yes என்பதில் கிளிக் செய்திடவும். அந்த இடத்தில் ஹைபன் வேண்டாம் என நினைத்தால், No என்பதில் கிளிக் செய்திடவும். இதே செயல்பாட்டினைத் தொடர்ந்து வேர்ட் காட்டும் டெக்ஸ்ட் இடங்களுக்கும் மேற்கொள்ளவும்.
ஏதாவது ஒரு பத்தியில் ஹைபன் இடுவது நிறுத்தப்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால், அந்த செயல்பாட்டிற்கும் ஏற்ப செட் செய்திடலாம். எந்த டெக்ஸ்ட் பகுதியில் ஹைபன் தேவையில்லை என்று முடிவு செய்கிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழே தந்துள்ளபடி அமைக்கவும்.
1. ரிப்பனில் ஹோம் டேப்பினைக் காட்டவும்.
2. பாரா குரூப்பில் கீழாக வலது பக்கம் காணப்படும் சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் பாராகிராப் டயலாக் பாக்ஸினைக் காட்ட்டும்.
3. அடுத்து Line and Page Breaks என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. அடுத்து Don’t Hyphenate என்ற பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது தானாக ஹைபன் அமைக்கும் நிலையை மேற்கொண்டாலும், எந்த பகுதிக்கெல்லாம் ஹைபன் அமைக்க வேண்டாம் என்று செட் செய்தீர்களோ, அந்த வரிகளில், பாராவில், ஹைபன் அமைக்கப்பட மாட்டாது.

%d bloggers like this: