Daily Archives: ஜூன் 3rd, 2014

டெக்ஸ்ட்டை மறைத்தல்:

டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத்திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து வைக்கலாம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட்டைப் பின் டாகுமெண்ட்டில் தெரியுமாறும் வைக்கலாம். இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் View மற்றும் Hidden Text தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் தெரிய வரும். இந்த வசதியினைப் பயன்படுத்தி ஒரு உரையாற்றுகையில் அதனை அச்சில் பெறுபவருக்கு குறிப்பு டெக்ஸ்ட்டினை மறைத்தவாறே அச்செடுத்து தரலாம்.

Continue reading →

மூடப்பட்ட பேஸ்புக் இமெயில்!

பெரும்பாலான பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் ஒரு மின்னஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது என்பதே தெரியாது. அண்மைக் காலம் வரை அது இயங்கி வந்தது. ஆனால், தற்போது அது மூடப்பட்டுவிட்டது. காரணம்? யாரும் அதனைப் பயன்படுத்தாததே அதற்குக் காரணம்.

Continue reading →