டெக்ஸ்ட்டை மறைத்தல்:

டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத்திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து வைக்கலாம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட்டைப் பின் டாகுமெண்ட்டில் தெரியுமாறும் வைக்கலாம். இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் View மற்றும் Hidden Text தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் தெரிய வரும். இந்த வசதியினைப் பயன்படுத்தி ஒரு உரையாற்றுகையில் அதனை அச்சில் பெறுபவருக்கு குறிப்பு டெக்ஸ்ட்டினை மறைத்தவாறே அச்செடுத்து தரலாம்.

டெக்ஸ்ட்டை கீழாக அல்லது மேலாக அமைக்க: டாகுமெண்ட் ஒன்றில் நீங்கள் முக்கியத்துவம் காட்ட விரும்பும் சொற்களை மற்ற சொற்களிலிருந்து சற்று தூக்கியோ அல்லது இறக் கியோ காட்டுவது ஒரு ஸ்டைலாகும். இதனை வேர்ட் தொகுப்பில் எளிதாக அமைக்கலாம்.
1. எந்த சொற்களை இவ்வாறு அமைக்க வேண்டுமோ அவற்றை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2.பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font” தேர்ந்தெடுக்கவும்.
3. "Font” என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் "Text Effects” என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து "Position” என்ற இடத்திற்கு அருகே உள்ள பல ஆப்ஷன்ஸ் உள்ள பெட்டியில் "Normal”, "Raised” அல்லது "Lowered” என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் எப்படி அமைய வேண்டும் என விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டில் எண் எழுதும் முறை: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.

Click Here

%d bloggers like this: