Daily Archives: ஜூன் 4th, 2014

மிஸ்டர் கழுகு: முப்பெரும் விழாவில் முடிசூட்டல்!

அறிவாலயத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்!

”கடந்த இரண்டு வாரங்களாக கொதிநிலையில் இருக்கிறது தி.மு.க. அதற்கு இன்னும் கூடுதலாக எண்ணெய் வார்த்துவிட்டார் கருணாநிதி” என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.

”தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க-வில் ஏராளமான பரபரப்புகள் தொற்றிக்கொண்டுவிட்டன. தான் வகித்துவந்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அறிவிப்பு செய்தார். இதனால் கருணாநிதிக்கும் அவருக்குமே பேச்சுவார்த்தைகள் சகஜமாக இல்லை. இதற்குத்தான் காத்திருந்தார் என்பதைப்போல, அழகிரி மீடியாக்களில் பொங்கித் தீர்த்தார். இந்த நிலையில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் ஜூன் 2-ம் தேதி நடக்கும் என்று அன்பழகன் அறிவித்தார். ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் கழகத்தின் வலிமையையும் வளர்ச்சியையும் மேலும் பெருக்குவதற்கேற்ப நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முதல் கட்டமாக ஆலோசனை செய்து முடிவுகளை எடுத்திடவும் இந்தக் கூட்டம்’ என்று அன்பழகன் வெளிப்படையாக அறிவித்திருந்தார். உயர்நிலை செயல்திட்டக் குழுவில் அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் ஆகியோருடன் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்று இருப்பார்கள். கனிமொழி, தயாநிதி, ஆ.ராசா ஆகியோரும் உண்டு. இந்தக் கூட்டம் அறிவிக்கப்பட்டதுமே மாவட்டச் செயலாளர்கள்தான் அதிகமான பீதிக்கு உள்ளானார்கள்!”

”மாவட்டச் செயலாளர்கள் பற்றி கருணாநிதி முன்பு சொன்னதை நீர் சொல்லியிருக்கிறீர்?’

Continue reading →

இந்தியாவிற்கான கூகுள் திட்டங்கள்

இணையத்தோடு எங்கும் நிறைந்த ஒன்றாக, கூகுள் செயல்பட்டு வருகிறது. ""இதன் முழுப் பயனை இந்திய மக்கள் அனுபவித்துப் பயன் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என தங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிடுகையில் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையில், தொடர்பில் உள்ள மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை இந்தியா கொண்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் போன் முதல் இணையதளங்கள் வரை எங்கும் தன் செயல்பாட்டினை விரித்துக் கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்திய டிஜிட்டல் வெளியில், கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மையில் இவர் உரையாற்றினார்.

Continue reading →

வளைந்து கொடுக்கும் டாஸ்க்பார்

விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத பிரிவுகளில் ஒன்றாக டாஸ்க் பார் இருப்பதைப் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இதனை நம் விருப்பப்படி மாற்றி அமைத்து, ஒரு புதிய அனுபவத்துடன், விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்கலாம். அதற்கான இரண்டு வழிமுறைகளை இங்கு காணலாம். முதலாவதாக, திரையில் அதிக இடம் பெறும் வகையில், டாஸ்க் பாரினை மறைத்து வைத்து, தேவைப்படும் போது பெறுவது. இரண்டாவதாக, நாம் அதிகம் பிரியப்பட்டு பயன்படுத்தி வரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் தந்த வகையில், டாஸ்க் பாரினை அமைப்பது.
டாஸ்க் பார், நமக்கு திறந்து வைத்து இயக்கும் புரோகிராம்களுக்கிடையே எளிதாகச் சென்று வர உதவும் ஒரு டூலாகப் பயன்படுகிறது. நேரத்தை அறிய உதவுகிறது. சிஸ்டம் அறிக்கைகளைக் காண வழி தருகிறது. இதற்காக, நாம் பணி செய்யும் இடமான திரையில் இடத்தை வீணடிக்க வேண்டுமா என நீங்கள் எண்ணலாம். அப்படியானால், இதனை மறைக்க முடியுமா? முடியும். அப்புறம் தேவை என்றால், என்ன செய்வது? தேவை என்றால், பெறவும் முடியும். அதற்கான வழி என்ன?

Continue reading →

இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!

சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார். இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது.

Continue reading →

தமிழகத்திற்கு ரூ.3.54 லட்சம் கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

Jayalalithaa Meets PM Narendra Modi in Delhi

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, டில்லியில் சந்தித்து, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனு கொடுத்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, 3.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரியுள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

Continue reading →

உணவு யுத்தம்!-11

‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழம்!

மதுரை செல்லும் ரயிலில் ஒரு கல்லூரி மாணவனுடன் பயணம் செய்தேன். எதிர் சீட்டில், காதில் ஹெட்போன் மாட்டியபடியே பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். ரயில் கிளம்பும் நேரத்தில் சிவப்பு நிற உடை அணிந்த பீட்சா விற்பனையாளன் ஒருவன் வேகமாக வந்து அந்தப் பையனுக்கு பீட்சா டெலிவரி செய்தான். அந்த மாணவன் புன்சிரிப்புடன், ‘ஆர்டர் கொடுத்தால் ரயிலிலும் வந்து விநியோகம் செய்வார்கள்’ என்றபடி பீட்சாவை வாங்கினான்.

‘இதுதான் உனது வழக்கமான இரவு உணவா?’ என்று கேட்டேன்.

‘வீட்டில் இருந்தால் இரவு ஃபிரைடு ரைஸ், சப்பாத்தி சாப்பிடுவேன். வெளியூர் கிளம்பினால் இப்படி பீட்சா ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன், அல்லது பழங்கள் சாப்பிடுவேன்’ என்றான்.

‘என்ன பழம்?’ என்று கேட்டேன்

‘ஆப்பிள் அல்லது ஆரஞ்சு சாப்பிடுவேன்’ என்றான்.

Continue reading →