Daily Archives: ஜூன் 5th, 2014

விண்டோஸ் 8.1க்கு மாறாதது ஏன்?

விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கான அப்டேட் வசதியை, மைக்ரோசாப்ட் இலவசமாகவே வழங்கி வருகிறது. ஆனால், தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின் படி, பலர் இன்னும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறாமலேயே உள்ளனர். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
வாடிக்கையாளர்கள் புதிய சிஸ்டத்திற்கு மாறாதது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தோல்வி என்று கூற இயலாது. விண்டோஸ் 8.1, சென்ற ஆண்டு அக்டோபர் 17ல் வெளியானது. வரும் மாதத்தில், இதற்கான அப்டேட் பைலாக விண்டோஸ் 8.1 அப்டேட் 1 வெளியாக உள்ளது.
இன்றைய நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பயன்படுத்துபவர்கள் 6.83 சதவீதமாகவும், விண்டோஸ் 8.1 பயன்படுத்துபவர்கள் 4.3 சதவீதமாகவும் உள்ளனர். விண்டோஸ் 8.1 அறிமுகமானவுடன், விண்டோஸ் 8 மறைந்து போகும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோர் விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோரைக் காட்டிலும் குறைவாகவே உள்ளனர் என்பதுவே சற்று ஆச்சரியமாக உள்ளது. ஏனென் றால், விண்டோஸ் 8 நிறைய பிழையான குறியீடுகளுடன் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் புதிய சிஸ்டத்திற்கு மாறவில்லை.

Continue reading →

மழுங்கடிக்கும் இணையம்… மறக்கடிக்கும் ஃபேஸ்புக்!

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற இணையதளங்களில், இளைஞர்கள் பலரும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடப்பது நினைவாற்றல் திறன் முற்றிலும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலுக்கும் தீங்கும் ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.

இதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன.  உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்: 

Continue reading →

கூகுள் தளத்தில் துல்லியமான தேடல்கள்!

இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே. இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும். ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும். எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு இது குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது இன்னும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.
பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது.

Continue reading →

மனைவி அமைவதெல்லாம்…

ருவரது ஜாதகத்தில் 7-ம் வீடு மனைவியைக் குறிக்கும் இடம். சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் காரகர்; களத்திரகாரகர். 7-ம் இடமும், 7-ம் வீட்டோனும், சுக்கிரனும், லக்னாதிபதியும் ஒருவரது ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவதுடன், மனைவியால் யோக பாக்கியங்களும் உண்டாகும். திருமண வாழ்க்கை வெற்றிபெறும். நல்ல அந்நியோன்யம் உண்டாகும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்போடு வாழும் நிலை அமையும்.

சூரியன், சந்திரன், லக்னம் இவை மூன்றில் எது பலம் மிக்கதோ அதற்கு 7-ம் இடம் வலுக்கவேண்டும். 7-ம் வீட்டோனும் வலுப் பெற வேண்டும். சுக்கிர பலம் சிறப்பாக இருக்கவேண்டும். பலம் என்பது குறிப்பிட்ட கிரகமானது ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம், திரிகோணம், கேந்திரம் ஆகிய நிலைகளில் இருப்பது ஆகும். அதே போன்று சுபக் கிரகப் பார்வையைப் பெற்றிருப்பது, அஷ்டக வர்க்கத்தில் குறிப்பிட்ட கிரகத்துக்கு அதிக பரல்கள் இருப்பதுவும் பலம் சேர்க்கும்.

Continue reading →

குழந்தைகளின் தெய்வம்

ஜூன் 1 – வைகாசி உற்சவம் ஆரம்பம்!
குழந்தைகள், தீராத நோயால் அவதிப்படுகின்றனர் என்றால், திருநெல்வேலியில் உள்ள பிட்டாபுரத்தம்மனை வணங்கி வரலாம். பேச்சு வழக்கில், ‘புட்டார்த்தியம்மன்’ என்று, இவளை அழைக்கின்றனர். இந்தக் கோவிலின் வைகாசி உற்சவம் இன்று துவங்கி, பத்து நாட்கள் நடை பெறுகின்றது.
ஒரு ஊரின் வடக்கு எல்லையில், வடக்குவாசல் செல்வி என்ற பெயரில், துர்க்கையை பிரதிஷ்டை செய்வர். இவளே அந்நகரின் காவல் தெய்வம். இவ்வாறு திருநெல்வேலி நகருக்கு பாதுகாப்பாக இருப்பவளே பிட்டாபுரத்தாள். ஆறடி உயரம், நான்கடி அகலமுள்ள அம்மன் விக்ரகம், பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கிறது. பீடத்தின் மேல், வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் சூலத்துடன் அருள் பாலிக்கிறாள். இவளுடன், மாடன், மாடத்தி மற்றும் பிரம்மரக்ஷி, பேச்சி போன்ற, 14 கன்னியர்கள் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள கொடி மர மண்டபத்தில், சிதைவுற்ற பிள்ளையார் சிலை உள்ளது. சிதைவுற்றிருந்தாலும், இவருக்கு சக்தி அதிகம்.
இவர் முன்பு அமர்ந்த படிதான், பூஜாரிகள் நோயுற்ற குழந்தைகளுக்கு, அம்பாளின் அபிஷேக நீரைத் தெளிக்கின்றனர்.
பிட்டாபுரத்து அம்மனுக்கு, ‘பிட்டு’ நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கோவில் நெல்லையப்பர் கோவிலோடு தொடர்புடையதாக உள்ளது. இக்கோவிலில் திருவிழா முடிந்த பின் தான், நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா ஆரம்பமாகும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோவிலில் கூட்டம் அதிகம் இருக்கும். பிள்ளைகளுக்கு பயத்தால் வரக்கூடிய, 64 வகையான நோய்களுக்கு, வேர்கட்டி மை இடுவர். குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் அம்பாள் சன்னிதியை சுற்றி வருகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட, இத்தலத்திற்கு கொண்டு வரலாம். எந்த தீட்டும் கிடையாது.
இன்று துவங்கும் வைகாசி திருவிழா, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும். ஆடி, தை மாதங்களின் கடைசி செவ்வாய், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், கார்த்திகை தீபம், தை மாத பத்ர தீப நாட்களில், விசேஷ பூஜையும் உண்டு. காலை, 6:00 மணி முதல், 12:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணிவரையிலும், குழந்தைகளை அழைத்து வரலாம். மாலை பூஜைக்கு, கூட்டம் அதிகமிருக்கும்.
திருநெல்வேலி டவுன் லாலாசத்திர முக்கின் வடக்கே உள்ள தெருவில், இக்கோவில் உள்ளது. விழா காலத்தில் வந்து, அம்பாளின் புனிதநீர் பெற்றால், குழந்தைகள் ஆரோக்கியமாகத் திகழ்வ